|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
| மீண்டும் ஒரு சமையல் திருவிழா. இம்முறை
சற்று சிறிய நகரமான (அல்லது சற்று பெரிய கிராமமான) வேதாரணியத்தில்.
வேதாரணியத்தில் நடக்கும் முதல் சமையல் போட்டி இது என்று உள்ளூர்வாசிகள்
சிலர் தெரிவித்தனர். பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறித்து எங்களுக்கு
இருந்த பயம் கடைசி நிமிடம்தான் விலகியது. இறுதியில் யாரும் எதிர்பாராத
வண்ணம், 98 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் சமையல் திறனை வெளிப்படுத்தி
அசத்திவிட்டார்கள். போட்டியில் கலந்து கொண்டவர்களில் 70 சதவீதம் பேர்
சுற்றுபுற கிராமங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
|
| வழக்கம் போல் உணவுகள் பல பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறுபவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள்
வழங்கப்பட்டன. இப்போட்டிக்கு நடுவர்களாக வேதாரணியம் சார் பதிவாளர்
திருமதி. S. சசிகலா, டாக்டர். S. சுமதி, திருமதி. வசந்தி செல்வகுமார்
மற்றும் திருமதி. சுமதி சுகுமாறன் ஆகியோர் பணியாற்றி, சிறந்த உணவுகளைத்
தேர்வு செய்தனர். |
| சிறந்த உணவிற்கான தேர்வு நடைபெறும்
சமயம், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ரசித்து மகிழ, கலைவளர்மதி.
தென்னடார். K.P. அம்பிகாபதி குழுவினரரின் "நாட்டுப்புற இசையில்
பெண்ணீய சிந்தனைகள்" என்ற தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு அரிமா சங்கத் தலைவர்
திரு. T.R. சிவசுப்ரமணியன் அவர்கள் தலைமை வகித்தார். வணிகர் சங்க பேரவைகளின்
மாவட்டத் தலைவர் திரு. S. சிவசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக்
கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை
வழங்கினார். |
| இப்போட்டி சிறப்பாக நடைபெற அனைத்து
வகையிலும் உதவிய திரு. S. தென்னரசு, திரு. S. சாமிச்செட்டியார், திரு.
T.R. சிவசுப்ரமணியன் மற்றும் அனைத்து அரிமா சங்க நிர்வாகிகளுக்கும்
அறுசுவை இணையத்தளம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது. |
| உங்களின் பார்வைக்கு சில படங்கள் |
| |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
 |
| |
|
| |
|
| போட்டியில்
பங்குபெற்ற உணவுகள் |
| |
| இதரப்
போட்டிகள் பக்கங்களுக்குச் செல்ல.. |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|