|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல. |
| |
| ஆப்பிள் கேக் (Apple cake) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
150 கிராம் |
| சர்க்கரை |
150 கிராம் |
| வெண்ணெய் |
120 கிராம் |
| பேகிங் பவுடர் |
அரை தேக்கரண்டி |
| முட்டை |
3 |
| வெனிலா எசன்ஸ் |
சில துளிகள் |
| மேலே சர்க்கரைப் பூச்சு செய்வதற்கு: |
|
| ஐசிங் சர்க்கரை |
200 கிராம் |
| பச்சைக் கலர் |
4 துளிகள் |
| தண்ணீர் |
2 மேசைக்கரண்டி |
| |
|
|
| செய்முறை |
- வெண்ணையையும் சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும்.
- முட்டைகளை நன்றாக அடிக்கவும். அடித்த முட்டையை சிறிது
சிறிதாக வெண்ணெய் கலந்து சர்க்கரை கலவையில் ஊற்றி, தொடர்ந்தாற்போல்
அடிக்கவும்.
- பிறகு எசன்ஸ், கலர் சேர்க்கவும்.
- பேகிங் பவுடரையும், மைதா மாவையும் இரு முறை சலித்த பிறகு
அதையும் சேர்க்கவும்.
- கேக் பேக் செய்யும் 9 அங்குல தட்டில் போட்டு 375 டிகிரி
F சூட்டில் 30ல் இருந்து 35 நிமிடம் வரை பேக் செய்யவும்.
- நன்றாக பேக் ஆனதும் எடுத்து சூடு தணிந்தவுடன் கேக்கை
நன்றாக தூள் செய்து கொள்ளவும்.
- உதிர்த்த கேக்குடன் இரண்டு மேசைக்கரண்டி ஜாம் கலந்து கொண்டு
நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- கொய்யாப்பழ அளவிற்கு கெட்டியாக உருட்டிக் கொள்ளவும்.
சர்க்கரைப் பூச்சு செய்யும் முறை
- சர்க்கரை, தண்ணீர், பச்சை கலர் இவற்றை கெட்டியாக கரண்டியினால்
கலக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி உருட்டி வைத்திருக்கும் கேக்கை
அதில் வேகமாக ஒரு பாகத்தை தோய்த்து, ஒரு பேப்பர் கப்பில்
தோய்த்த பாகம் மேலே தெரியும்படி வைக்கவும்.
- ஆப்பிள் போல் தோற்றமளிக்க சிறிது ராஸ்பெர்ரி ரெட் கலரை
பிரஷ்ஷில் எடுத்து மேலே சிறிது தடவவும்.
- ஒரு இலவங்கத்தை கேக்கின் மேல் பதிய வைத்தால் காம்புடன்
கூடிய அழகிய ஆப்பிளைப் போல் தோற்றமளிக்கும்.
- கேக் பேக் செய்த பிறகு உடைந்து விட்டாலோ அல்லது எடுக்கும்
பொழுது தவறுதலாக தூளாகி விட்டாலோ அதை மேலே சொன்ன முறையில்
ஆப்பிள் கேக்காக மாற்றிவிடலாம்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|