சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல.
 
காரமல் கேக் (Caramel cake)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 170 கிராம்
வெண்ணெய் 115 கிராம்
பொடித்த சர்க்கரை 115 கிராம்
பெரிய முட்டை 2
பேகிங் பவுடர் 2 தேக்கரண்டி
ஜாம் 30 கிராம்
பால் ஒரு தேக்கரண்டி
காரமல் செய்வதற்கு:  
தண்ணீர் 50 மில்லி
சர்க்கரை 50 கிராம்
   
செய்முறை
    காரமல் செய்முறை:
  • சர்க்கரை 50 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும்.
  • சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும். பிறகு தண்ணீரை விட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • கொழகொழவென்று வெல்லப் பாகு போல் இருக்கும்.

    காரமல் கேக் செய்யும் முறை:

  • பொடித்த சர்க்கரை, வெண்ணையை இலேசாக ஆகும் வரை நன்றாக குழைக்கவும்.
  • முட்டையின் வெள்ளையையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரிக்கவும்.
  • இரண்டையும் தனித்தனியாக நன்றாக அடிக்கவும். வெள்ளைக் கருவை நன்றாக அடிக்கவும்.
  • மாவையும் பேகிங் பவுடரையும் இருமுறை சலிக்கவும். குழைத்த வெண்ணை கலவையில் அடித்த மஞ்சள் கருவை சேர்த்து அடிக்கவும்.
  • காரமல் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை சேர்க்கவும்.
  • நன்றாக அடித்த முட்டை வெள்ளையைப் போட்டு மிருதுவாகவும் மெதுவாகவும் கலக்கவும். தேவையானால் பால் விடவும்.
  • 7 அங்குல கேக் பேக் செய்யும் 2 தட்டுகள் எடுத்து அதில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.
  • கலவையை அதில் போடவும். 375 டிகிரி F சூட்டில் 30 இருந்து 40 நிமிடம் வரை பேக் செய்யவும்.

  • குறிப்பு:
  • முட்டை வெள்ளையை அடிக்கும் பொழுது பீங்கான் அல்லது எனாமல் பாத்திரம் உபயோகிக்கவும்.
  • பாத்திரத்திலோ முட்டை அடிக்கும் கருவியிலோ எண்ணெய் பசை இருக்கக் கூடாது.
  • கேக் பேக் ஆனவுடன் எடுத்து ஆற வைக்கவும்.
  • ஒரு கேக்கின் மேல் 30 கிராம் ஜாம் தடவி மற்றொரு கேக்கையும் அதன் மேல் வைக்கவும்.
  • தேவையானால் ஐசிங் செய்யலாம்.

 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி