சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்ஸா அல்ல.
 
பிஸ்ஸா (Pizza)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 250 கிராம்
சர்க்கரை 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் 2 மேசைக்கரண்டி
ஈஸ்ட் ஒரு மேசைக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
பேகிங் பவுடர் ஒரு தேக்கரண்டி
பால் 150 மில்லி
உள்ளே நிரப்ப தேவையானவை  
தக்காளி 300 கிராம்
வெள்ளரிக்காய் ஒன்று
குடைமிளகாய் ஒன்று
பெரிய வெங்காயம் ஒன்று
மிளகாய் சாஸ் 2 தேக்கரண்டி
சீஸ் 50 கிராம்
பூண்டு 4 பல்
இஞ்சி சிறிய துண்டு
உப்பு தேவையான அளவு
   
செய்முறை
  • சாஸ் செய்யும் முறை:
  • வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் பொடிபொடியாக நறுக்கவும்.
  • தக்காளி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு அதில் வெங்காயம் பூண்டு, இஞ்சி துண்டுகளையும். போட்டு வதக்கவும்.
  • வதங்கியவுடன் தக்காளி துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு சூப் வடிகட்டும் தட்டில் போட்டு வடிகட்டி எடுத்து வைக்கவும்.
  • சாஸ் தண்ணீர் போன்று இருந்தால் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கெட்டியாக வந்ததும் இறக்கவும்.
  • தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் மூன்றையும் வட்ட வடிவமாக மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்
  • குடமிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சீஸை துருவிக் கொள்ளவும்.
  • பிஸ்ஸா செய்முறை:
  • பால் கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளவும்.
  • அதில் வெண்ணையையும், சர்க்கரையையும் போடவும்.
  • பால் கைபொறுக்கும் சூடு வந்தவுடன் அதில் ஈஸ்ட் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
  • பின் சலித்த மைதா, பேகிங் பவுடர், உப்பு மூன்றையும் அந்தப் பாலில் போட்டு ஒரு மரக்கரண்டியால் நன்கு அடிக்கவும்.
  • அந்த பாத்திரத்தை மிதவெப்பம் உள்ள இடத்தில் 20ல் இருந்து 30 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
  • இப்போது மாவு இருமடங்காகி இருக்கும். இதை நன்கு அடித்துப் பிசைந்து கொள்ளவும்.
  • 12 அங்குல நீளம் 8 அங்குல அகலம் உள்ள தட்டில் நெய்யை நன்றாகத் தடவிக் கொள்ளவும்.
  • இதில் பிசைந்து வைத்துள்ள மாவை தட்டு முழுவதும் ஓரங்களிலும் நிரவி விடவும்.
  • 10ல் இருந்து 20 நிமிடம் 420 டிகிரி F சூட்டில் பேக் செய்யவும்.
  • பின் அதை எடுத்து நாம் தயாரித்து வைத்துள்ள தக்காளி சாஸை அதன் மேற்புறம் தடவி விடவும்.
  • அதன் மேல் வட்டமாக வெட்டி வைத்த தக்காளி, வெங்காயம், வெள்ளரி இவற்றை அழகாக வைக்கவும்.
  • இதற்கு மேல் மிளகாய் சாஸையும் தடவவும்.
  • பொடியாக நறுக்கிய குடமிளகாயை போடவும். துருவிய சீஸை மேற்பாகம் முழுதும் தூவவும்.
  • 2 தேக்கரண்டி வெண்ணையை சிறிது உருக்கி அதன் மேல் விடவும்.
  • மறுபடியும் சுமார் 10 இருந்து 15 நிமிடம் வரை 400 டிகிரி F சூட்டில் பேக் செய்யவும் சூடாகப் பரிமாறவும்.
  • தனித்தனியாகப் பரிமாற வேண்டுமானால் சிறு சிறு தட்டில் கால் அங்குல கனத்திற்கு மாவைப் போட்டு நிரவி விடவும்.
  • பிறகு மேற்சொன்னது போல் பேக் செய்யவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி