சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
 
கருப்பட்டி பணியாரம்
 
இது தென் தமிழ் நாட்டின் சிறப்புப் பலகாரம். தீபாவளியன்று காலை பலகாரத்திற்கு செய்ய ஏற்றது.
தேவையானப் பொருட்கள்
புழுங்கலரிசி ஒரு கப்
பச்சரிசி ஒரு கப்
உளுத்தம் பருப்பு கால் கப்
வெந்தயம் கால் தேக்கரண்டி
கருப்பட்டி 2 கப் (தூள் பண்ணியது)
உப்பு ஒரு சிட்டிகை
வேர்க்கடலை அரைக் கப் (வறுத்து உடைத்தது)
   
செய்முறை  
  • அரிசிகள், பருப்பு, வெந்தயம் முதலியவற்றை ஒன்றாய் கலந்து, நன்றாகக் களைந்து 5-6 மணி நேரம் ஊற வைத்து விட்டு, உப்பு ஒரு சிட்டிகை மட்டும் போட்டு, மிக நைஸாக அரைக்கவும். சற்றே கெட்டியாக இருப்பது நல்லது.
  • இந்த மாவினை சுமார் எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு 2 கப் தூள் பண்ணிய கருப்பட்டியை மிகச் சிறிய அளவு தண்ணீர் விட்டு அடுப்பைச் சிறியதாக எரிய விட்டுக் காய்ச்சவும்.
  • இதனை விடாது கிளறிக் கொண்டிருந்தால் தான் அடியில் பிடிக்காது. கருப்பட்டி நன்றாகக் கரைந்ததும் அதனை வடிகட்டவும்.
  • பிறகு அதை ஆற வைத்து, சிறிது சிறிதாக மாவில் கொட்டிக் கலக்கவும். பணியாரம் ஊற்றும் பதத்திற்கு மாவு வர வேண்டும்.
  • பணியாரத்தில் கருப்பட்டி வாசனை தெரியவேண்டும் என்பதால் ஏலப்பொடி போடுவது தேவையில்லை.
  • இத்துடன் வறுத்து, உடைத்த வேர்க்கடலை கலந்தால் ருசியாக இருக்கும்.
  • பணியாரச் சட்டியில் குழிகளில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சிறிய குழிக் கரண்டியால் அரைக் கரண்டி மாவு ஊற்றவும்.
  • மேலேயும் அரை ஸ்பூன் வீதம் எண்ணை விடவும். சரியான அளவு தட்டால் மூடி வைப்பது உசிதம்.
  • அடுப்பை மிக நிதானமாக எரிய விடவும். இல்லாவிட்டால் கருப்பட்டி கலந்திருப்பதால் சீக்கிரம் கறுத்து விடும்.
  • உள்ளே நன்றாக வேக வேண்டும். தட்டைத் திறந்து பார்த்து, மேலே வெந்திருந்தால், மெள்ளத் திருப்பிப் போடவும்.
  • இந்தப் பக்கம் அதிக நேரம் வைக்க வேண்டாம். சட்டென்று எடுத்து விடலாம். காரமான சட்னியுடன் பரிமாறவும்.

வழங்கியவர்

திருமதி. சித்ரா விஸ்வநாதன்

இதரப் பலகாரங்கள்  
தூத் பேடா  
ஏஞ்சல் கேக்  
தில்குஷ் கேக்  
பால் சாக்லேட்  
போர்ன்விட்டா கேக்  
ட்ரை ஃப்ரூட் டிலைட்  
தயிர் பர்ஃபி  
கோதுமை அல்வா  
ஸ்பெஷல் மிக்ஸர்  
ரச வடை  
தேங்காய் பால் டாஃபி  
ரிப்பன் பக்கோடா  
காஞ்சிபுரம் இட்லி  
   

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி