சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
 
பிரஷர் குக்கர் கோதுமை ஹல்வா
 
தேவையானப் பொருட்கள்
சம்பா கோதுமை ரவை ஒரு கப்
நெய் கால் கப்
சர்க்கரை கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி
ஏலப்பொடி ஒரு தேக்கரண்டி
பச்சைக்கற்பூரம் ஒரு சிட்டிகை
கேஸரி கலர் ஒரு சிட்டிகை
முந்திரிப் பருப்பு நறுக்கினது அரைக் கப்
குங்குமப்பூ ஒரு சிட்டிகை(சூடான பாலில் கரைத்துக் கொள்ளவும்)
   
செய்முறை  
  • கோதுமை ரவையை நன்கு கழுவி நிறைய தண்ணீரில் சுமார் 5 அல்லது 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின் வடிய வைத்து மிக்ஸியில் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும். பிழிந்து பாலை எடுக்கவும்.
  • சக்கையை மறுபடி போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு அரைத்துப் பாலை எடுக்கவும். இது போல் நான்கு முறை செய்தால் பால் முழுவதும் வந்து விடும்.
  • பிறகு பாலும் தண்ணீரும் கலந்து இருப்பதை ஒரு உயரமான பாத்திரத்தில் 6 அல்லது 7 மணி நேரம் தெளிவதற்காக வைக்கவும். நடுவில் அதைத் தொடாமல் இருப்பது நல்லது.
  • பின் மேலே இருக்கும் நுரையையும், தெளிந்த தண்ணீரையும் மெல்ல இறுத்துக் கொட்டி விடவும். கீழே தங்கின கெட்டிப் பாலை அளந்து கொள்ளவும்.
  • 1 கப் பாலுக்கு ஒன்றரைக் கப் சர்க்கரை தேவை. இருக்கும் பாலின் அளவிற்கு ஏற்றார்போல் சர்க்கரையை சேர்த்து, தேவையான அளவு வண்ணப்பொடியையும் சேர்க்கவும்.
  • இப்பொழுது அவற்றை நன்றாகக் கலக்க வேண்டும். இது மிக முக்கியம்.
  • பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிரஷர் குக்கரில் வைக்கவும். குக்கரை மூடி, வெயிட்டை வைக்கவும்.
  • முதல் விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 45 நிமிடம் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து பிரஷர் இறங்கின பின் திறக்கவும்.
  • திறந்த பின் கனமான மரக் கரண்டியோ, முட்டை அடிக்கும் கருவியோ அல்லது எலக்ட்ரிக் ஹான்ட் ப்ளெண்டரோ உபயோகித்து கலப்பதும் மிகவும் முக்கியம்.
  • அடுப்பில் வாணலியில் அல்லது நான் ஸ்டிக் பானில் நெய் விட்டுக் காய்ந்ததும் கலவையைப் போட்டு நன்கு கிளறவும்.
  • முந்திரி, வாசனை சாமான்கள் எல்லாவற்றையும் சேர்த்து விடவும். சில நிமிடங்களில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்து விடும்.
  • பிறகு இறக்கி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறின உடன் துண்டு போடவும்.
   

வழங்கியவர்

திருமதி. சித்ரா விஸ்வநாதன்

இதரப் பலகாரங்கள்  
தூத் பேடா  
ஏஞ்சல் கேக்  
தில்குஷ் கேக்  
பால் சாக்லேட்  
போர்ன்விட்டா கேக்  
ட்ரை ஃப்ரூட் டிலைட்  
தயிர் பர்ஃபி  
கருப்பட்டி பணியாரம்  
ஸ்பெஷல் மிக்ஸர்  
ரச வடை  
தேங்காய் பால் டாஃபி  
ரிப்பன் பக்கோடா  
காஞ்சிபுரம் இட்லி  
   

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி