சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
இந்தியாவெங்கும் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்துக்களைப் பொறுத்தவரை இந்தப் பண்டிகைக்குத்தான் அதிகம் பலகாரங்கள் செய்து கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தீபாவளி என்றால், முறுக்கும் அதிரசமும் கட்டாயப் பதார்த்தங்கள். இதனைத் தவிர்த்து அவரவர் வசதிக்கு, விருப்பத்திற்கு ஏற்றார்போல் பலகாரங்கள் ஏராளமாய் இடம் பெறும்.
நிறையப் பலகாரங்களைச் சாப்பிட வைத்து, அதற்கு மருந்தும் (தீபாவளி லேகியம்) கொடுக்கும் ஒரே பண்டிகை தீபாவளிதான். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் கொண்டாடப்பட்ட தீபாவளிக்கும், தற்போது கொண்டாடப்படும் தீபாவளிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. வயதானவர்கள் நிச்சயம் இதனை உணர்வார்கள். காலத்தால் நாம் காணும் மாற்றங்கள் இவை. இவற்றில் முக்கியமாய் நாம் உணர்வது, பலகாரங்கள் செய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
முன்பெல்லாம், தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வீடுகளில் பலகாரம் செய்வதை ஆரம்பித்து விடுவார்கள். முறுக்கில் இருந்து ஆரம்பிக்கப்படும் இது, தீபாவளி அன்று காலையில் சுடச் சுடச் செய்யப்படும் சுசியன், வடை வரை விடாது தொடரும். தீபாவளி பலகாரங்களுக்கு மாவு அரைப்பதற்கென்றே, சிறுவர் சிறுமியர் பள்ளி செல்லாமல், மாவு அரைக்கும் 'மில்' களுக்குச் சென்று, மணிக்கணக்கில் காத்திருந்து அரைத்து வருவார்கள். ஒவ்வொரு வீட்டிலும், ஒரு பெரிய கூட்டமே தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்.
இந்த நாட்களில், நகரங்களில் அதுப்போல் பார்ப்பது கடினமாய் இருக்கின்றது. வீடுகளில் பலகாரங்கள் செய்வதே மிகவும் குறைந்து விட்டது. இதற்கு காரணங்கள் பல இருப்பினும், முக்கியமானதாக நேரமின்மை, பொறுமையின்மை, திறமையின்மைகளைக் குறிப்பிடலாம். பொதுவாக இதில் ஏதேனும் ஒன்றுதான் காரணமாய் இருக்கும். இதனைத் தவிர்த்து, பெருகி வளர்ந்து வரும் தரமான பலகாரக் கடைகள், பலரின் தேவைகளை எளிதாய் பூர்த்தி செய்துவிடுகின்றன. விலை சற்று அதிகமாயினும், வேலை எளிதாகி விடுகின்றபடியால், பெரும்பாலான மக்கள் இப்போது கடைகளில் பலகாரங்கள் வாங்குவதையே விரும்புகின்றனர்.
அதிரசம் செய்யும் நேரத்தை, 'ஆனந்தம்' தொடர் பார்ப்பதில் செலவு செய்துவிட்டு, அரைமணி நேரத்தில் ஆனந்த பவன் சென்று அனைத்தையும் வாங்கி வந்துவிடவே பலரும் விரும்புகின்றனர். குறை சொல்ல முடியாத மாற்றங்கள் இவை. இதனால் நாம் இழக்கும் சின்னச் சின்ன சந்தோசங்கள் பலவுண்டு. பண்டிகைகளில் பலகாரங்கள் செய்வது நாம் மட்டும் அமர்ந்து உண்ணுவதற்கல்ல. சுற்றத்தார்க்குப் பகிர்ந்தளித்து, மகிழ்ச்சியை, திறமையைப் பரிமாறிக் கொள்வதற்குதான். இந்த பகிர்ந்துகொள்ளலில், திறன் மதிப்பீடும் மறைந்து கிடக்கும்.
ஐந்து வீடுகளில் இருந்து அதிரசம் வந்திருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாய் இருக்கும். பெயர் மட்டுமே பொதுவாய் இருக்கும். சுவையில் அவரவர் கைமணம் தெரியும். இந்த ஐந்து வீட்டு அதிரசமும் ஒரே கடையில் வாங்கியதாக இருக்கும் பட்சத்தில், அந்த பரிமாற்றத்தில் அர்த்தமே இல்லாமல் போய்விடுகின்றது. இனி இப்படி ஒரு உரையாடலை நாம் தீபாவளியன்று வீடுகளில் கேட்கலாம்.

பெண்: 'அந்த லட்டு பக்கத்து வீட்டிலிருந்து வந்தது.'
ஆண்: 'நம்ம வீட்டு லட்டு மாதிரியில்ல இருக்கு'
பெண்: 'அவர்களும் அந்த கடையிலத்தான் வாங்கி இருப்பாங்க போல இருக்கு'
வருடத்திற்கு ஒருநாள் வரும் தீபாவளியன்று, வருடம் முழுவதும் கடையில் கிடைக்கும் பலகாரங்களை வாங்கி வந்து கொண்டாடுவதில், நிச்சயம் பெரிய சந்தோசம் இருக்காது. தீபாவளியன்று மட்டுமே வீடுகளில் செய்யப்படும் அதிரச, சுசிய, சோமாசா வகைகளுக்கு, ஒரு தனிச் சுவையே உள்ளது. தீபாவளி முடிந்து, ஒரு வாரம் கழித்து, காலி டின்னைத் திறந்து பார்த்து, உடைந்த முறுக்குத் துண்டங்களை தேடித் தேடி எடுத்து சாப்பிடும் சுகம் இருக்கின்றதே..!

வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோசங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்.
 
அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் எங்களது தீபாவளி வாழ்த்துக்கள்.
 
தீபாவளி சிறப்பு பலகாரங்கள்
திருமதி. சித்ரா விஸ்வநாதன் வழங்கியது
தூத் பேடா  
ஏஞ்சல் கேக்  
தில்குஷ் கேக்  
பால் சாக்லேட்  
போர்ன்விட்டா கேக்  
ட்ரை ஃப்ரூட் டிலைட்  
தயிர் பர்ஃபி  
கோதுமை அல்வா  
கருப்பட்டி பணியாரம்  
ஸ்பெஷல் மிக்ஸர்  
ரச வடை  
தேங்காய் பால் டாஃபி  
ரிப்பன் பக்கோடா  
காஞ்சிபுரம் இட்லி  
   
   
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி