|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| சர்க்கரைப் பொங்கல் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| பச்சை அரிசி |
இரண்டு கப் |
| பயற்றம் பருப்பு |
அரை கப் |
| கடலைப்பருப்பு |
கால் கப் |
| பால் |
ஒரு கப் |
| பொடித்த மண்டை வெல்லம் |
மூன்று கப் |
| நெய் |
100 கிராம் |
| முந்திரி பருப்பு |
50 கிராம் |
| உலர்ந்த திராட்சை |
30 கிராம் |
| ஏலக்காய் |
3 |
| பச்சைக்கற்பூரம் |
ஒரு அரிசி அளவு |
| குங்குமப்பூ |
10 அல்லது 15 |
| |
|
| செய்முறை |
|
- பருப்புகளை சுத்தம் செய்து பொன்னிறமாக வறுத்துக்
கொள்ளவும். அரிசியை சுத்தமாக களைந்து எடுத்துக் கொள்ளவும்.
- பாத்திரம் அல்லது பானையில் ஐந்து கப் அளவிற்கு தண்ணீர்
எடுத்துக் கொண்டு அத்துடன் பாலையும் சேர்த்து கொதிக்க
விடவும்.
- முதலில் பருப்புகளை அதில் போட்டு சிறிது நேரம் வேக
விடவும். சற்று வெந்த பிறகு அரிசியைக் களைந்து போடவும்.
- அடிப்பிடித்து விடாமல் இருக்க அவ்வபோது கிளறி விட்டபடி
இருக்கவும்.
- அரிசியும் பருப்பும் முக்கால் பதத்திற்கு வெந்த
பிறகு, பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கிளறிவிடவும்.
விடாது கிளறியபடி இருக்கவும்.
- நீர் சுண்டி, சாதம் சற்று குழைந்து வரும் போது,
முதலில் பாதி நெய்யை ஊற்றிக் கிளறி விடவும்.
- பிறகு சிறிது நெய்யில் தேங்காய்த்துருவல், முந்திரி,
திராட்சை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து, சாதத்தில்
சேர்த்துக் கிளறவும்.
- ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். பொங்கல் பதமாய்
வந்தவுடன், குங்குமப்பூவையும், பச்சைக் கற்பூரத்தையும்
சிறிது பாலில் கரைத்து, பொங்கலில் ஊற்றிக் கிளறிவிடவும்.
- மீதமுள்ள நெய்யையும் ஊற்றிக் கிளறி, சிறிது நேரம்
தணலில் வைத்து இருந்து பிறகு இறக்கவும்.
|
|
|
| இது சாதாரணமாக பொங்கல் செய்யும்
முறை. இதில் அவரவர் பழக்கத்திற்கு, விருப்பத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்களும்
இருக்கும். |
| |
சிலர் அரைத் தேக்கரண்டி கல்
உப்பினை சர்க்கரையுடன் சேர்த்து கொட்டிக் கிளறுவர்.
கிராமங்களில் குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம் சேர்ப்பதில்லை.
சிலர் பொடித்த ஜாதிப் பத்ரியை ஏலக்காய் சேர்க்கும் போது, கூடவே சேர்ப்பர்.
கிராம்பு, இஞ்சி சேர்ப்பவர்களும் உண்டு.
|
| |
| பொங்கல் சிறப்பு
பக்கத்திற்குச் செல்ல.. |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|