சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பாக்தாத் சிக்கன்

முழுக்கோழி ஒன்று
வெங்காயம் 2 பெரியது
பச்சைமிளகாய் 5
இஞ்சி இரண்டு அங்குலத் துண்டு
மல்லித்தழை 3 மேசைக்கரண்டி
அவித்த முட்டை ஒன்று
முந்திரி 6
உருளைக்கிழங்கு 2
மிளகாய்த்தூள் ஒரு மேசைக்கரண்டி
மல்லித்தூள் ஒரு மேசைக்கரண்டு
சீரகம் ஒரு தேக்கரண்டி
பூண்டு 10 பல்
ஏலக்காய் 6
கிராம்பு 10
மிளகு 10
வினிகர் ஒரு மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் ஒரு மேசைக்கரண்டி
நெய் 6 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தண்ணீர் 3 கப்

  • முழுக்கோழியை இறகுகள் நீக்கி, மேல் தோலை நீக்காமல் சுத்தம் செய்து கொள்ளவும்.
  • கோழியின் வயிற்றுப் பாகத்தில் கீறி உள்ளே உள்ள பாகங்களை நீக்கி விடவும். தண்ணீரைக் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
  • இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம், மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • முந்திரி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகம், பூண்டு, ஏலக்காய், மிளகு, கிராம்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • கோழியின் ஈரலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் 3 மேசைக்கரண்டி நெய் விட்டு சூடானதும், நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், கோழி ஈரல் மற்றும் கொத்தமல்லித் தழையினைப் போட்டு நன்கு வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • அவித்த முட்டையினை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் வதக்கி வைத்துள்ளதையும், அரைத்து வைத்துள்ள முந்திரி மசாலாக் கலவையையும் உப்பும் சேர்த்து கிளறி கோழியின் உள்ளே இக்கலவையைத் திணித்து வைத்துவிட வேண்டும்.
  • ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி கோழியை வேக வைக்கவும்.
  • கோழியின் எல்லா பக்கங்களும் சிவக்குமாறு, பிரட்டி விட்டு வேக விடவும்.
  • பிறகு பட்டைத் துண்டினை சேர்த்து வதக்கவும். அத்துடன் இரண்டு கப் தண்ணீர் விட்டு கோழியினை மிதமான சூட்டில் வேக விடவும்.
  • கோழி வெந்தவுடன் நறுக்கிய உருளைக்கிழங்கினை சேர்த்து வேக விடவும்.
  • குழம்பு சற்று கெட்டியானதும் தக்காளி சாஸ், வினிகர் சேர்த்து தீயிலிருந்து இறக்கவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி