தென்னிந்தியர்களின் மதிய உணவில்
தவறாது இடம் பெறும் பல்வேறு குழம்பு வகைகள் மற்றும் ரச வகைகளின் செய்முறைக்
குறிப்புகள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன. குழம்பு வகைகள் சைவம்,
அசைவம் என்று பொதுவில் இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது.
இருப்பினும் ஒரே குழம்பு அது தயாரிக்கப்படும் பகுதியைப் பொறுத்து சுவை,
மணத்தில் வேறுபடுகின்றது. உதாரணமாக, சாம்பாரை எடுத்துக் கொள்ளலாம்.
தஞ்சை பகுதி சாம்பாருக்கும், மதுரை சாம்பாருக்கும், செட்டிநாடு மற்றும்
கொங்கு வகை சாம்பாருக்கும் குறிப்பிடும்படியான வித்தியாசங்கள் பல உள்ளது.
தமிழகத்திலேயே பல சுவைகளில் இருக்கும் இந்த சாம்பார் வெளிமாநிலங்களில்
மிகவும் வித்தியாசப்படுகின்றது. இப்படி பல்வேறு பகுதிகளில், பல்வேறு
சுவைகளில் தயாரிக்கப்படும் குழம்புகள் மற்றும் ரச வகைகள் இங்கே தொகுத்துத்
தரப்பட்டுள்ளது.
|