சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

 
கூட்டாஞ்சோறு.. இன்று நகரங்களில் வசிக்கும் எத்தனை சிறுவ, சிறுமியர் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பர்? போட்டிகள் நிறைந்த இன்றைய உலகத்தை எதிர்கொள்ள, தங்களைத் தயார் செய்து கொள்ளத்தான் இளம்பிள்ளைகளுக்கு நேரம் இருக்கின்றது. போதாக்குறைக்கு தொலைக்காட்சி என்னும் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சம், குழந்தைகளை வெளியில் செல்லவிடாமல், வீட்டினுள்ளேயே கட்டிப் போடுகின்றது. இவற்றையெல்லாம் மீறி அவர்கள் வெளியில் விளையாட வருவதே அபூர்வம் என்று ஆகிவிட்ட நிலையில், கூட்டாஞ்சோறு சமைப்பது பற்றியெல்லாம் அவர்களால் யோசிக்க முடியுமா என்பது சந்தேகமே. அதிவேக நாகரிக வளர்ச்சியில் நாம் இழக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் நிறைய. அதில் ஒன்று இந்த கூட்டாஞ்சோறு.
உன் வீட்டில் இருந்து நீ அரிசி கொண்டு வா, நீ பருப்பு கொண்டு வா, எண்ணெய் கொண்டு வா. அடுப்பிற்கு கல் எடுத்து வா... கூட்டாஞ்சோறு சமைக்க முடிவு செய்துவிட்டால், எங்கிருந்துதான் அப்படி ஒரு உற்சாகம் வருமோ.! உப்பில் இருந்து பருப்பு வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் உபயமாய் இருக்கும். உற்சாகப்படுத்தும் பெற்றோர்கள், உதவிட வரும் வயதான சில பாட்டிகள். ஒரு பட்டாளமே ஓடியாடி வேலை செய்யும். எல்லாம் முடிந்தவுடன் சமைக்கப்பட்டவை வீடுகள் அனைத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும். கொடுப்பது ஒரு கரண்டி அளவுதான் என்றாலும், ஊருக்கே விருந்து படைத்த திருப்தி அக்குழந்தைகளின் முகங்களில் தெரியும். செய்தவர்களுக்குச் சாப்பிட பிடிக்காது என்பார்கள். இவர்கள் விசயத்திலும் அது உண்மையாய்தான் இருக்கும். இவர்களின் தயாரிப்பை மற்றவர்கள் சுவைத்து, அவர்கள் வாயில் இருந்து வரும் பாராட்டு ஒன்றே இவர்களின் வயிற்றை நிரப்பி விடும்.
இந்த கூட்டாஞ்சோறு வெறும் விளையாட்டல்ல. சிறுவயதிலேயே அவர்களின் சமையல் திறனை வெளிக்காட்டவும், ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும் அளிக்கப்படும் ஒரு வாய்ப்பு. மனித நேயத்தை வளர்த்துக்கொள்ள, சுற்றத்தாரின் உறவுகளை மேம்படுத்த, பகிர்ந்துண்ணும் பண்பை கற்றுக்கொள்ள உதவும் ஒரு சிறு விழா இந்த கூட்டாஞ்சோறு. இன்றும் சில சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் குழந்தைகள் கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடுகின்றனர். சில கிராமங்களில் பெரியவர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி, கூட்டாஞ்சோறு சமைத்து ஒரு விழாவாக கொண்டாடுகின்றனர்.
அறுசுவையில் இடம் பெறும் பெரும்பாலான உணவுக்குறிப்புகள், கூட்டாஞ்சோறு போல் பலரிடம் இருந்து சேகரிப்பட்டு, தொகுக்கப்பட்டவையே. ஒரு சிலர் ஏராளமான குறிப்புகள் கொடுத்து உதவியுள்ளனர். இன்னும் கொடுத்தவண்ணம் உள்ளனர். இப்படி நிறைய குறிப்புகள் கொடுப்பவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காக, இந்த கூட்டாஞ்சோறு சிறப்பு பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெறும். இப்பகுதியில் நீங்களும் இடம்பெற குறைந்தது 15 செய்முறைக் குறிப்புகள் அனுப்ப வேண்டும். தொடர்ச்சியாக எழுதுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்புகளை அனுப்ப இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
 
குறிப்புகள் கொடுத்து உதவியவர்கள். (அவர்களின் பக்கங்களுக்குச் செல்ல, படத்தின் மீதோ அல்லது பெயரின் மீதோ சொடுக்கவும்.)
டாக்டர். மேகலா பாலசுந்தரம்.  
திருமதி. ஜீவா மோகன்தாஸ்  
திருமதி. சுமதி ராஜேந்திரன்  
திருமதி. கரோலின் இம்மானுவேல்  
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி