சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கீரை கூட்டு

முளைக்கீர ஒரு கட்டு
சின்ன வெங்காயம் 12
மிளகாய் வற்றல் 3
பச்சை மிளகாய் 3
தக்காளி 3
துவரம் பருப்பு அரை கப்
தேங்காய் அரை கப் (துருவியது)
உளுந்து ஒன்றரை தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
சீரகம் அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • முதலில் கீரையை ஆய்ந்து, நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துத் திட்டமாக நீர் ஊற்றி துவரம் பருப்பை போட்டு வேக விடவும்.
  • பருப்பு பாதி வெந்ததும் கீரையைப் போடவும். அத்துடன் பச்சை மிளகாயையும், வெங்காயத்தில் பாதியையும் தக்காளியையும் நறுக்கிப் போட்டு நன்றாக வேகவிடவும்.
  • அடுத்து உளுந்தையும், மிளகாய் வற்றலையும் வறுத்தெடுத்து அவற்றுடன் தேங்காய்த் துருவலையும், சீரகத்தையும் சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்ததைக் கீரையில் போட்டுக் கலக்கிவிட்டு மேலும் சில நிமிடங்களுக்கு வேகவிடவும்.
  • கீரை நன்கு வெந்ததும் இறக்கிவைத்து, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, உளுந்தையும், கடுகையும் போட்டுத் தாளித்து மீதியிருக்கும் வெங்காயத்தையும் போட்டு வதக்கிக் கொண்டு கீரையில் போட்டுக் கலக்கிக் கொள்ளவும்.
  • இதற்கு முளைக்கீரை என்றில்லாமல், சிறுகீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை என்று எந்த வகை கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி