சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கேரள பால் பாயசம்

அரிசி ஒரு கப்
பால் 4 கப்
சர்க்கரை 2 கப்
முந்திரிப்பருப்பு 12
ஏலப்பொடி ஒரு தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி

  • அரிசியை இரண்டு மேசைக் கரண்டி நெய் விட்டு சிவந்து விடாமல் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • அதன் பின்னர் நீரில் நன்றாக களைந்து, ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பால் என்ற விகிதத்தில் ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவிடவும்.
  • பாலும், தண்ணீரும் கொதித்த பின் அரிசியைக் களைந்து போட்டு சீரானத் தீயில் வேக விடவும்.
  • பாலிலேயே அரிசி வெந்து நன்கு கரைய வேண்டும். அதற்காக அரிசி நன்கு வெந்தபின், பாலை விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • பால் நன்றாக சுண்டியப் பிறகு தீயை முழுவதுமாகக் குறைத்து, அதில் சர்க்கரைச் சேர்க்கவும்.
  • சர்க்கரை சேர்த்தவுடன் தளர்ந்து விடும். தேவையெனில் மீண்டும் அடுப்பில் வைத்துக் கிளறலாம்.
  • பிறகு ஏலப்பொடி போட்டு, முந்திரியை வறுத்துப் போடவும்.
  • கொதிக்கும் போது அடிப்பிடிக்காமல் இருக்க விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • இதையே குக்கரிலும் செய்யலாம். குக்கரில் வைக்கும்பட்சத்தில் கூடுதலாக கால் கப் தண்ணீரும், கால் கப் பாலும் சேர்த்துக் கொள்ளவும்.
  • அதாவது, ஒரு கப் அரிசிக்கு, பாலும் தண்ணீருமாக இரண்டரைக் கப் சேர்க்கவும்.
  • அரிசி வெந்த பின் இறக்கி, மேல் சொன்ன முறையில் ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் விட்டு பாலைச் சேர்த்து காய்ச்ச வேண்டும். நன்கு கரைந்ததும் சர்க்கரை சேர்த்து, முந்திரி, ஏலப்பொடி சேர்க்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி