நாகரிக வளர்ச்சியில் நாம் மறந்து போன விசயங்களில் ஒன்று, இந்த கூட்டாஞ்சோறு. கூடி சமைத்துண்பது. அனைவரின் பங்களிப்பில் சுவையான உணவு தயாரிக்கும் இந்த நிகழ்ச்சி, ஒரு காலத்தில் பெரிய விழாவாக நடைபெற்றது. சித்திரை மாத பௌர்ணமி நாளில், வறண்ட காவிரி ஆற்றில், கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கூடிச் சமைத்து இன்புற்றது எல்லாம் ஒரு காலம். இன்று ஒரு சில கிராமங்கள் மட்டுமே இதனை நினைவு கொண்டுள்ளன என்பது வருத்தமான விசயம்.
அறுசுவை இணையத்தளமும் கூட்டாஞ்சோறு போல், பலர் பங்களிப்பில் உருவானதுதான். அப்படிப் பங்களிப்பவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதுதான் இந்தப் பக்கத்தின் நோக்கம். இங்கே தொடர்ச்சியாக அறுசுவைக்கு குறிப்புகள் கொடுப்பவர்களின் பெயர்களும், அவர்கள் கொடுத்துள்ள குறிப்புகளின் விபரமும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இதன்மூலம் அவர்களின் பக்கங்களுக்கு மிக எளிதில் சென்று குறிப்புகளைப் பார்வையிட முடியும்.
சமீபத்தியக் கருத்துக்கள்
20 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 58 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -