ஸ்வீட்பாக்கு

வழங்கியவர் : shadiqah
தேதி : வெள்ளி, 26/09/2008 - 14:26
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- சீவல் பாக்கு - 50 கிராம்
- சர்க்கரை - 1/2 கப்
- முந்திரி - 10
- நெய் - 3 டேபிள்ஸ்பூன்
- வெள்ளரிவிதை - 1 டேபிள்ஸ்பூன்
- டூட்டிப்ரூட்டி - 1 டேபிள்ஸ்பூன்
- அரிசிமிட்டாய் - மினிசைஸ் - 1 டேபிள்ஸ்பூன்
- ஏலம், கிராம்புத்தூள் - 1/4 டீஸ்பூன்
- நெய்யை அடுப்பில் வைத்து சூடு ஏறியதும் சீவல்பாக்கை போட்டு மொறுமொறுப்பாக வறுக்கவும்.
- சர்க்கரையை 1 டேபிள்ஸ்பூன் நீர் விட்டு பாகு காய்ச்சவும். கெட்டியான பதம் வந்ததும் இறக்கி விடவும். தொட்டுப் பார்த்தால் உருட்ட வர வேண்டும்.
- கெட்டியான சர்க்கரை பாகில் பாக்கை சேர்த்து பாக்கு நொறுங்காமல் கிளறவும்.
- நன்கு ஆற விட்டு பொடித்த முந்திரி மற்றும் அனைத்து பொருட்களையும் கலந்து ஏர்டைட் பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஸாதிகாக்காவ்... ஒரு புது பிஸினஸ் ஆரம்பிச்சிடலாம் போலிருக்கே சூப்பர்
பாக்கு ரொம்ப நல்லாயிருக்கு. ம்ம்ம்ம்ம்....
சூப்பர்ப்.செய்து பார்க்க ஆசையாக இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.