சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

எந்த ஒரு தனிமனிதச் செயலுக்குப் பின்னாலும் வெளியில் தெரியாத, வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத பல முகங்கள் இருக்கும். அப்படி, எனக்கு பின்னால் இருந்து உதவி, ஊக்குவித்து, இந்த இணையத்தளம் தோன்ற காரணமாய் இருந்தவர்கள் பலர். அவர்கள் முகங்களை இங்கு வெளியிட்டு எனது நன்றியை காணிக்கையாக்கி, இந்த இணையத்தளத்தினை உலகிற்கு அர்பணிக்கின்றேன்.
ஏதேனும் செய்யவேண்டும் என்று என்னுள் உதித்த பொறியை, ஊதிப் பெரிதாக்கி, இதைச் செய்தால் என்ன என்று ஆலோசனை வழங்கி, இவ்விணையத்தளத்திற்கு பிள்ளையார் சுழி இட்டு, இன்றுவரை உற்சாகப்படுத்திவரும் எனது அருமைத்தோழி செல்வி. நிரஞ்சனா. செல்லும் இடங்களில் எல்லாம், சந்திக்கும் நபர்களிடம் இருந்து அறுசுவைக்காக சமையல் குறிப்புகளைச் சேகரிப்பவர்.

   பால்ய பருவத்தில் இருந்து எனது நல்ல நண்பராய் மட்டுமல்லாமல், பல சமயங்களில் நல்ல ஆசானாகவும், சில காலம் எனது எஜமானராகவும், இன்றும் எனது உண்மையான நலம் விரும்பியாய் இருக்கும் அன்பு நண்பர் திரு. பத்ரி சேஷாத்ரி அவர்கள். என்ன செய்யலாம் என்று மட்டுமே முடிவு செய்து இருந்த என்னை, எப்படிச் செய்யலாம் என்று ஆலோசனைக் கூறி, புதிய தொழில்நுட்பங்களை விளக்கி வழிநடத்திக் கொண்டிருப்பவர்.

இந்த இணையத்தளத்தினை பதிவு செய்தது முதற்கொண்டு, தேவையான உபகரணங்கள் மற்றும் வலைச்சேவையக இடம் வாங்கியது வரையிலான அனைத்துப் பொருட்செலவுகளையும் ஏற்றுக்கொண்ட எனது அருமைச் சகோதரர் திரு. ஈஸ்வரமோகன்தாஸ் அவர்கள். எனக்குத் தேவையான நிரல்கள் பல எழுதிக் கொடுத்து எனது வேலைப் பளுவைக் குறைத்துக் கொண்டிருப்பவர்.

   பலனை எதிர்பாராமல் மற்றவர்களின் நலனுக்காக தங்கள் உழைப்பையும், அறிவையும் செலவிடும் பலரில் ஒருவர், நான் முகம் பார்த்திராத, தேனீ யூனிகோடு எழுத்துக்களை உருவாக்கிய திரு. உமர் அவர்கள். அவரது எழுத்துக்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்ததோடு, தேவையான உதவிகளை எப்போது வேண்டுமானுலும் செய்து தருகின்றேன் என்று கூறி என்னை மேலும் ஊக்கப்படுத்தியவர்.

எனக்காக தங்கள் நேரத்தை செலவிட்ட எனது உடன்பிறவா சகோதரர்கள் பாரதி, கணேஷ், மணிமாறன், முத்துக்குமார், சிவா, சுபாஷ், வினோத். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த தளத்தின் வெளியீட்டுக்காக உழைத்தவர்கள்.

   இவர்களைத் தவிர்த்து, பெயர் வெளியிட முடியாத அளவிற்கு எண்ணிலடங்கா நல்ல உள்ளங்கள் பலவும் உதவியுள்ளன. நான் உதவி என்று கேட்டுச் சென்ற யாருமே என்னை உதாசீனப்படுத்தாமல், அன்புடன் உதவியுள்ளார்கள். இதுவே என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தியது.

அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.   

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி