பட்டிமன்றம்-18- லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?"

ஹெல்லொ வனிதா மேடம்!எப்படி இருக்கிங்க?கவிசிவா ஆளையே காணோம்?ஓகே.நானே நடுவராய் இருக்கிறேன்.நான் தேர்ந்தெடுத்த தலைப்பு சகோதரி ஆயிஸ்ரீ மேடம் தந்த"மக்கள் தம் வேலைகள் சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்ததா?இல்லை மக்களிடையே அது திணிக்கப்பட்டதா?"என்பதுதான்.இதில்
எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு கேட்டக்கொள்கிறேன்.குறிப்பாக வனிதா,ப்ரியா,டிவ்யா,இளவரசி,இலா,இமா,யோகரானி,ஜயலக்ஷ்மி,ஆமினா முஹம்மத்,எரிக்,கவிசிவா,மேடம் எல்லோரும்,இன்னும் என்னோடு போன பட்டிமன்றத்தில் கலந்த எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு வேண்டிக்கொள்கிறேன்

வனி...

பாத்திங்ளா.. சிக்கவிட்றீங்க. நடுவரா வர ரொம்ப யோசிக்கனுமே.. அதுதான் யோசிக்கறேன் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமின்...

வாங்க வாங்க...ஏது நீங்களும் மாட்டிவிட ட்ரை பண்ண்றீங்க போல இருக்கு.. உங்களமாதிரி ஒருத்தர் வாதிட்டா நான் நல்லா குழம்பிடுவேன் ;-) அதான் ரூம் போட்டு யோசிக்கனும்... தலைப்ப பத்தி இல்லமா.. நடுவரா இருக்கலாமா வேண்டாமானு...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா மேடம் அதான் இன்னும் 2 வாரம் டைம் இருக்கே! அதுவரை யோசிச்சுட்டே இருங்க. அக்கா ஒரு தடவ முடிவு பண்ணா அதுக்கு அப்பறம் அவங்க பேச்ச அவங்களே கேக்க மாட்டாங்க!!!!!!!!
ஹீ........ ஹீ,,,,,

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அச்சோ ஆமின்..

மாட்டிவிட்றதுல யாரு பெரிய ஆளுனு பாக்கறதுக்கே ஒரு பட்டிமன்றம் வெக்கனும் போல... ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா அக்கா ஒரு வேண்டுகோள்!!!!!
அடுத்த பட்டியில் பேசுறவங்க எந்த அணி சார்பா பேசுறாங்க அப்டின்டு தலைப்பை போட்டா படிக்கும்,பார்க்கும் மற்றவர்களுக்கு எளிதாக இருக்கும். அதை நடைமுறைபடுத்த முடியுமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரம்யா... நல்லா யோசிச்சே சரின்னு சொல்லுங்க. ஆனா சரின்னு மட்டும் தான் சொல்லணும். :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமினா... தலைப்புன்னு எதை சொல்றீங்க? சரியா புரியல.... அவங்க பதிவுக்கு தலைப்பா அவங்க வாதாடும் அணியை சொல்ல சொல்றீங்களா??? அது இப்பவே ஒரு சிலர் செய்யறாங்க. ஒரு சிலர் தான் "பட்டிமன்றம்", "நடுவரே"னு பொதுவா ஆரம்பிக்கறாங்க. அதை செய்யணும்'னா சுலபமா செய்யலாம்... சொன்னா நம்ம தோழிகள் உடனே கேட்டுக்குவாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு கவி சிவா,

நம்ம வனிதாவுக்கு தோள்பட்டையில் மஸில்ஸ் டியர் ஆகியிருக்காம், டாக்டர் கொஞ்ச நாளைக்கு கையை ரொம்ப அசைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார், அதனால ஒரு வாரத்துக்குப் பதிவு போடுவது இயலாது.

பதிவுதான் போட முடியாது, பார்வையிட்டுக் கொண்டுதான் இருக்காங்க, சீக்கிரம் வந்துடுவாங்க.

கவிசிவா, நீங்க பட்டி மன்றத்தை திங்கட்கிழமை ஆரம்பிச்சுடுங்கன்னு சொல்ல சொன்னாங்க. எப்படியும் வனிதாவும் வந்து ஜாயின் பண்ணிக்குவாங்க.

எல்லோருமே பட்டிமன்றத்தை ஆவலுடன் எதிர்பாத்துட்டு இருக்கோம், தயாராக வேற இருக்கோம்!!

வனிதா, நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க, அதுவரைக்கும் நாங்க எல்லாம் குறும்பு பண்ணாமல், சமர்த்தாக இருக்கோம், சரியா!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

கவிசிவா தலைமையில் வரும் திங்கள் கிழமை நடக்க போகும் பட்டிமன்றத்தில் கலந்துக்குவீங்க தானே?

எதிர்பார்ப்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ம் பார்க்கலாம்.

மேலும் சில பதிவுகள்