கோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா?

கோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா?

// கோபம் என்பது ஆண்களைவிடி சிறிது கம்மியாக இருப்பதுபோல் இப்போது எனக்கு தோன்றுகிறது//

உண்மை தான் அண்ணா!!!!

ஆண்களுக்கு கோபம் அதிகமாக தான் வரும், அதை அவர்கள் பெண்களிடம் தான் காட்டுகிறார்கள்(அதாவது மனைவியிடம்). அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக கோபம் வருவது போன்ற ஒரு தோற்றம் நிழவுகிறது.
பெண்களுக்கும் கோபம் அதிகமாக வரும். பொறுமை இருப்பதால் அதை அடக்கி மனதிலேயே போட்டு வைப்பர். தங்கள் வாழ்க்கை வீணாய் போய் விட கூடாது என்பதால். அது மற்றவர்களின் பார்வைக்கு பெண்கள் குறைவான கோபம் உடையவர்கள் போன்ற தோற்றத்தை உண்டாக்கியுள்ளது( ஆண்கள் அடிக்கும் போது பெண்கள் மனசுக்குள்ள எப்படி திட்டுறாங்கன்டு தெரிஞ்சா அவங்கள்ளாம் அடுத்த அடி கொடுப்பாங்களாக்கும் ?).

ஆக கோபம் என்பது எல்லாருக்கும் பொதுவானது தான். அதில் ஆண்,பெண் என்ற பேதமில்லை.
சூழ்நிலை, மனநிலை,பக்குவம், அனுபவம்,பொறுமை, இயலாமை, குணநலன் ஆகியவை பொறுத்து தான் அவை குறைவதும் அதிகரிப்பதும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எல்லாருக்க்கும் வாழ்த்துக்கள்,
ஒரு நிமிஷம் இருங்க தலைப்பை இன்னொருமுறை பாத்துட்டு வந்துர்றேன்,
ஏன்னா நிறைய பேர் தலைப்பை விட்டு தள்ளிபோய் வாதாடியுள்ளது போல் தெரிகிறது.
அதாவது தலைப்பு என்னவென்றால்..

’’கோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா?’’
இதுதானே தலைப்பு ஓகே இருக்கட்டும்..இதுதான்..அப்படியே காப்பி பன்னிதான் இங்கே பேஸ்ட் பன்னியிருக்கேன்
எனவே இதுல தப்பு இருந்தா நான் பொறுப்பு இல்லை. (தலைப்பு கொடுக்கும்போதாவது நாம Spelling மிஸ்டேக் இல்லாம கொடுக்க வேண்டாமா)

அதாவது இந்த பழமொழியெல்லாம் உதாரணம் சொல்வதெல்லாம் ஒரு அளவுகோல் இல்லை
அதை நம்மை மாதிரி முன்னாடி உள்ளவர்கள் சொன்னது, அதுவும் ஒரு சிலபேருடைய கருத்து அவ்வளவுதான்

’’ஆத்திரகாரன் னுக்கு........” இதில் ஆத்திரக்காரன் னு ஆனைத்தான் குறிக்கிறது என்று சொல்லியுள்ளீர்கள்..
அப்படினா இந்தியன் என்பது ஆன் பால், அப்ப பென்களில் இந்தியரே கிடையாதா?
”குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” என்பது பேச்சு வழக்கில் உள்ளது
(அது உண்மையா பொய்யா என்பது அது தனிக்கச்சேரி)
”குரங்கிலிருந்து மனிதன்.....” இதை அப்படியே பிடித்துக்கொண்டு மனிதன்னுதான் சொல்லியிருக்கு
அப்ப மனுஷி வேற எதாவது கரடி அல்லது காண்டாமிருகத்திலிருந்து பிறந்திருப்பாளோ என்று அர்த்தம் புரிதல் கூடாது.
இருவரின் பிறப்பும் ஒரே கோட்பாடு்தான் (அக்கோட்பாடு என்ன எனபது இங்கே வேண்டாம்)
இன்னும் சொல்லவேண்டுமாயின்.
“மனிதனுக்கு ஆறு அறிவு” என்பதுதான் பேச்சு வழக்கம்....மனுசிக்கு மூனே முக்கால் அறிவா?
அல்லது 4க்கும் 5க்கும் இடையில் 4 அரை முக்கால் அறிவா? அல்லது ஒரு ஏறத்தாழ ஒரு 30 அறிவு இருக்குமா
அல்லது லிட்டர் கனக்குல இருக்குமா, இப்படி கேட்பது அறிவுடைமையாகுமா? ஆகாதே
எனவே இவ்விஷயத்தில் மனிதன் என்றால் இருவருமே.
அது போல ஆத்திரக்காரன் எனும்போது ஆன் மட்டும்தான் என்பது உறுதி இல்லை
அப்பறம் ரெண்டு பேருக்கும் கோபம் வரும்னு சொல்லியுள்ளீர்கள், நான் இல்லேனு சொல்லவில்லை.
இருவருக்கும் கோபம் அதில். கூட, குறைவு என்று உள்ளது, எனது கருத்து ஆனுக்கு அதிகம், பென்னுக்கு ரெம்பவே குறைவு. இதுவே என் பேச்சு.
மார்க்க விசய்ங்கள் பேச அட்மினிடமும், அணைத்து சகோதரிகளிடமும் அனுமதி வாங்கினால், அதை விவாதிப்பது பத்தி யோசிக்கலாம்.

அப்பறம்
sohra rizwana அவங்க என் மேல கோபபட்டு பென்களுக்கு கோபம் வரும் எனபதை நிருபித்துள்ளார்கள்..
நான் எதுக்கும்மா பென்களை இறக்கி பேசப்போறேன்..நான் உங்களுக்குதானம்மா சப்போர்ட் செய்ஞ்சேன் அதுக்கு இவ்வளவு கொலைவெறித்தாக்குதலா?
நான் 4 அக்காமார்களுடன் பிறந்துள்ளேன் எனவே எனக்கு அவ்வாறு பேதம் வராது. இன்னொரு விஷயம் உங்ககிட்டே எனக்கு புரிய மாட்டேங்குது
கோபப்படுவது ஒரு பெருமையான விஷயமாங்க, கோபம் கூடாதுன்னுதானே எல்லா சித்தாந்தங்களும் சொல்லுது,
அதை ஒரு பெருமையான விஷயமாக நினைத்துதானே பென்களுக்கு அதிகம் கோபம் வராதுனு சொல்லியுள்ளேன்,
இது எப்படி பென்களை இறக்கி பேசுவதாகும். கோபம் வேறு உணர்வு வேறு. நீங்க கோபத்தையும் உணர்வையும்
போட்டுக் குழப்ப்பிக்கிறீங்கனு நினைக்கிறேன்.உணர்வு இருக்கலாம் கோபம்தான் இருக்ககூடாது. உணர்வெல்லாம் உங்களுக்கு அதிகமாகவே இருக்குனு சொல்லுவேன்.

ஆமினாவை சீண்டிபார்ப்பதால் எல்லா பென்களையும் தாழ்வா நினைப்பதாக அர்த்தமா, நீங்க பட்டி மன்றம் பார்த்ததே இல்லையா
எதிரனியினரை என்னெல்லாம் சொல்லி, திட்டி வாதாடுவார்கள் என்று. அது போல இதுவும் பட்டிமன்றம்தானே. இங்கே பென்கள் அதிகமாக இருப்பதால்
அதிகமான உரையாடல்கள் பென்களுடன் இருக்கிறது, நான் இது போல இன்னும் வேற வேறா நிறைய blog ல கலந்துள்ளேன்.
அங்கேயும் நிறைய வினா எழுப்புகிறேன், விடையளிக்கிறேன், அங்கே எனக்கு ஆன் நன்பர்கள்தான் அதிகமாக உள்ளார்கள்.
நான் அங்கே இதை விட பலமடங்கு துடுக்கா பேசுவேன், அப்படி நான் பேசவேண்டுமென்றே சில பேர் என்னை ஜாலியா வம்புக்கு இழுப்பார்கள் அவர்களிடம்
நானும் ஜாலியா சண்டைபோட்டுவிட்டு வருவது வழக்க்கம். அவர்கள் எல்லாம் ஆன்கள்தான். அதுக்காக ஆனகளை இறக்கி பேசுறேனு அர்த்தமா?
இன்னும் சொல்லப்போனால் இங்கேதான் நான் பயந்து பயந்துதான் எழுதுறேன்.

அப்பறம் இன்னும் சிலபேர், தங்கள் குடுமபத்தில் நடந்ததை உதாரனம் கூறி வாதாடினார்கள், ஒருவர் குடுமபத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்
எனபதை வைத்து அவரது குணத்தை தீர்மானிக்கமுடியாது, எல்லோரிடமும் எவ்வாறு இருக்கிறரோ அவ்வாறே தீர்மானிக்கவேன்டும்.
ஒரு பட்டிமன்றம்னா எதிர் எதிர் அனி இருக்கவேண்டும், இங்கே என்னென்னா நம்மள நைசா உள்ளே வரவச்சு எல்லாரும் ஒரே அனியில சேர்ந்து
நம்மள சுத்தி மொத்திட்டாங்க இது நியாயமா?

எல்லாருக்கும் நான் சொல்வது
”பெரும்பாலும் பென்களுக்கு வருவது கோபம் இல்லை, அது ரோஷம்” இவ்வாறுதான் சொல்லியுள்ளேன்
பெரும்பாலும் வராது என்றால் அறவே வராதுன்னு அர்த்தம் இல்லையே,
பெரும்பாலும் இல்லாமல் எப்பாவது வரும்னு அர்த்தம் (சரிதானே)
ஆன்களுக்குத்தான் அடிக்கடி கோபம் வரும் இதுதான் நான் இயம்பியதேயன்றி, வேறொன்றும் யானறியேன் பராபரமே.
ANY QUESTIONS??
அன்புடன்
ஆஷிக்

ஆஷிக்.
என்ன நாலு பக்க தீர்ப்பு மாறி நாலு பக்கம் கொண்ட வாதங்கள ரெடி பண்றீங்களா?
அட போங்க பா.நீங்க கொடுத்த பில்டப்ப பார்த்து ஒரு மணி நேரமா காத்துட்டு இருக்கேன். ஒன்னுமே காணாம். கை கால் உத்தறுத்துன்டு நீங்க சொன்னது காமெடின்டு நெனச்சேன். அத்து உண்மை தானோ?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் பதில் போட்டுள்ளேன், ஆனா நீங்க என்ன சொல்றீங்கனு புரியல,
அப்பறம் இன்னொரு விஷயம், அடிக்கடி F5 பட்டனை Press பன்னிக்கோங்க அப்பதான் யாரும் புது பதிவு போட்டா ’’சமீபத்திய கருத்துக்களில்’’ உடனே தெரியும். இல்லேனா வேறபக்கத்துக்கு போய்ட்டு வர்றவரை அதே பழைய பதிவையே அதில் காட்டிகிட்டு இருக்கும்.
அன்புடன்
ஆஷிக்

ஆஷிக்,
அதென்ன ஸ்டைலா //ANY QUESTIONS??// ;))

இரும்புக் கவசம் எல்லாம் அணிந்து பார்வையாளராக கேள்வியோட வந்து இருக்கிறேன். ;))

//எல்லாருக்கும் நான் சொல்வது
”பெரும்பாலும் பென்களுக்கு வருவது கோபம் இல்லை, அது ரோஷம்” இவ்வாறுதான் சொல்லியுள்ளேன்// சரி. அப்போ... பென்சில்களுக்கு வருவதுதான் கோபமா!! அடிக்க வராதீங்க. என்னால சிரிச்சு முடியல. ;))))
//ஆன்களுக்குத்தான் அடிக்கடி கோபம் வரும் இதுதான் நான் இயம்பியதேயன்றி, வேறொன்றும் யானறியேன் பராபரமே.// என் மருமகள் பெயரும் 'ஆன்' தான். ;)) (கடவுளே! இப்ப ஆஷிக்குக்குக் கோவம் வந்துரக் கூடாது, என்று ஒரு நிமிஷம் கண்ணை மூடி ப்ரே பண்ணுறேன்.)

நல்லாவே வாதாடுறீங்க. ;) ஆனால் இப்படித் தப்புத் தப்பாகத் தட்டினால் சிரிக்காமல் படிக்க முடியவில்லை. ;)

//இங்கேதான் நான் பயந்து பயந்து எழுதுறேன்.// ம். அந்தப் பயம் இருக்கட்டும் எப்பவும். ;))

‍- இமா க்றிஸ்

:)) immaadi, sorry ammaadi துங்க போற நேரத்துல இப்படி ஒரு புயல் கிள்ம்பும்னு நான் நினைச்சுகூட பாக்கலீங்க, உலகநாடுகளில் time வித்தியாச்ம் இருந்தால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கு போல. நீங்க டீச்சரா இருக்குதுனால எனக்கு இப்படி ஒரு டார்ச்சர். தப்பு கண்டுபுடிக்க்கிறதுக்குன்னே படிப்பீங்களோ?
ஆஷிக்கிற்கு கோபமெல்லாம் வராதுங்க, நம்ம மேலேதான் எல்லாரும் கோபபடுறாங்க என்ன செய்ய :(
//”என் மருமகள் பெயரும் 'ஆன்' தான்.”//
அப்ப உங்க மருமகன் பெயர் பென் னா?
:))
அதிகமா டைப் பன்னும்போது தப்புகள் தவிர்க்க முடியலங்க என்ன செய்ய?
அறுசுவையில் மட்டுமின்றி, ஒரு நாளைக்கு சராசரியா 25 MAILக்கு reply அனுப்புகிறேன்,
மேலும் இன்னும் சில Blog ல உறுப்பினராய் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
டெய்லி 2 மனியாகிறது தூங்குறதுக்கு :(
ஆஷிக்

-

//நான் பதில் போட்டுள்ளேன், ஆனா நீங்க என்ன சொல்றீங்கனு புரியல,//

நான் அந்த பதிவு எழுதிட்டு இருக்கும் போது தான் நீங்களும் கொடுத்துற்கீங்க!
டைம் பார்த்தீங்களா? 1 நிமிஷம் தான் வித்தியாசம். உங்க பதிவுக்கு முன்பே அந்த பதிவை போட்டுர்ந்தா உங்களுக்கு புரிஞ்சுற்கும்.

அன்பு தோழி:)
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//கோபம் வேறு உணர்வு வேறு. நீங்க கோபத்தையும் உணர்வையும் போட்டுக் குழப்ப்பிக்கிறீங்கனு நினைக்கிறேன்//
கோபம்னா என்ன? உணர்வுனா என்ன? கோபமும் அதுவும் ஒருவகை உணர்வு இல்லையோ?

//இதுதான்..அப்படியே காப்பி பன்னிதான் இங்கே பேஸ்ட் பன்னியிருக்கேன்.//
முந்தைய பதிவுகளில் என்ன தலைப்புன்டு தெரியாமலலேயே வாதாடுனீங்களோ? ஐய்யோ பாவம்.

//இருவருக்கும் கோபம் அதில். கூட, குறைவு என்று உள்ளது, எனது கருத்து ஆனுக்கு அதிகம், பென்னுக்கு ரெம்பவே குறைவு. இதுவே என் பேச்சு//அது தான் ஆரம்பத்திலிருந்து சொல்கிறீரே!! எப்படி என்று சொல்லவில்லையே?

//அதை ஒரு பெருமையான விஷயமாக நினைத்துதானே பென்களுக்கு அதிகம் கோபம் வராதுனு சொல்லியுள்ளேன்,//
பெருமை படும் விசயமில்லையே. பெண்களுக்கு கோபமே வராது வராதுன்டு ஆணாதிக்கம் பிடித்த முட்டாள்களால் சொல்லப்பட்டதால் தான் பெண்கள் அடங்கிபோகிறார்கள்.

கண்ணகிக்கு கோபம் வந்ததால் தான் மதுரை அழிந்தது என்பதை என் ஆசான் சிலப்பதிகாரத்தில் சொன்னான். கோவலன் தன் மேல் தேவையில்லாத குற்றம் சுமத்துகிறார்கள் என்று கோபத்துடன் வாதாடுவதாகவும் மதுரையை அழித்ததாகவும் இளங்கோ சொல்லவில்லையே.காப்பியத்தை படித்தீரா?

//”பெரும்பாலும் பென்களுக்கு வருவது கோபம் இல்லை, அது ரோஷம்” இவ்வாறுதான் சொல்லியுள்ளேன்//ஆரம்பத்திலிருந்தே உங்களிடம் அதை தான் கேள்வியாக வைத்தேன். ரோஷத்தின் அடுத்த ப்ரமாணம் கோபம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நீர் அதை வெவ்வேறாக பிரிக்கிறீரே?

கோபத்துடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்க ரெண்டு பேர் சண்டைய யார் தீர்த்து வைக்கப் போறாங்கன்னு தெரியலயே!!! எந்த இழைய தொறந்தாலும் ஒரே அக்கப்போராத்தான் இருக்கு. வனிதா வந்து உங்க ரெண்டு பேரையும் பெஞ்ச் மேல ஏத்தினாதான் சரியா வரும்.

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்