இன்றைய ஸ்பெஷல் டாபிக்

இன்றைய ஸ்பெஷல் என்றதும் எல்லோரும் சமையலுன்னு நினைத்தீர்களா? அப்படின்னா ஏமாந்துட்டீங்கப்பா,
நானும் ஒரு இழை தொடங்கலாம்ன்னு தோணிச்சு, அதனாலதான்.
தினமும் நமக்கு நாமே செய்த ஏதாவது ஒரு செயல் மிகவும் பெருமையா இருக்கும் இல்லையா? அந்த மாதிரி தினமும் செய்வதில் பிடித்ததை நாம் நம் அறுசுவை தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளதான் இந்த இழை. தயவு செய்து இங்கும் உங்களது பதிவுகளை வந்து போடுங்கோகோகோகோ

எல்லாரும் நல்லாருக்கீங்களா? என்னால அப்பப்ப ஆன்லைன்கு வரமுடியரதில்ல வினித் சிஸ்டம் யூஸ் பன்ரதால...

எனக்கு இன்னிக்கு 60க்கு டாக்டைம்மோட ஒரு ஃப்ரீ சிம் கிடச்சுது அதனால என் கூட படுச்ச எல்லா ஃப்ரெண்ட்ஸ்கலுக்கும் கால் பன்னி ரொம்ப நேரம் கடலை போட்டேன்(எல்லாரும் பொன்னு தானுங்க)...

அதனால இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு ஓகே ஓகே இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கு நைட்குள்ள எல்லா காசையும் பேசி தீர்க்கனும் இன்னிக்கு வரைக்கு தான் அந்த சிம்க்கு வேலிடிட்டி சோ நான் பேச ஆரம்பிக்கரேன் பாய்...

இதுதான் என் இன்னிய ஸ்பெஷல்ல்ல்ல்ல்ல்ல்ல்............

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நன்றி தோழிகளே,

என்னுடைய மிக பெரிய இன்றைய ஸ்பெஷல் இந்த இழையை ஆரம்பித்ததுதான். தினமும் சமையல் குறிப்பு, அழகு குறிப்பு என்று குறிப்புகளையும், பட்டிமன்றங்களையும்தான் நான் அறுசுவையில் அதிகமாக கண்டேன், அதனால்தான் தோழிகளின் தினசரி வாழ்வை பகிர்ந்துக்கொள்ள இந்த இழையை துவங்கினேன். பதிவு போட்ட அனைத்து தோழிகளுக்கும் நன்றி, தினமும் உங்கள் பதிவுகளை இதில் போடலாம்.

ஆனாலும் இன்னும் ரம்யாவை காணோமே, என்ன ரம்யா எனக்கு பதிவு போட மாடீங்களா?

அன்புடன்
பவித்ரா

நன்றி தோழிகளே,

என்னுடைய மிக பெரிய இன்றைய ஸ்பெஷல் இந்த இழையை ஆரம்பித்ததுதான். தினமும் சமையல் குறிப்பு, அழகு குறிப்பு என்று குறிப்புகளையும், பட்டிமன்றங்களையும்தான் நான் அறுசுவையில் அதிகமாக கண்டேன், அதனால்தான் தோழிகளின் தினசரி வாழ்வை பகிர்ந்துக்கொள்ள இந்த இழையை துவங்கினேன். பதிவு போட்ட அனைத்து தோழிகளுக்கும் நன்றி, தினமும் உங்கள் பதிவுகளை இதில் போடலாம்.

ஆனாலும் இன்னும் ரம்யாவை காணோமே, என்ன ரம்யா எனக்கு பதிவு போட மாடீங்களா?

அன்புடன்
பவித்ரா


”ரம்யா மேடம், பட்டி-ட்வெண்டி நடுவரயும்” காணுமே? யாராவது கண்டு புடிச்சு சொல்லுங்கோகோகோகோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்ன தேவி இப்படி சொல்லிட்டீங்க,wardrobe க்ளீன் பண்றதுக்கு பதிலாக உலகத்தில் எவரெஸ்ட் சிகரம் ஏறுவது சுலபம் தெரியுமா? அதை நீங்க இனிமேல் எப்போதும் சுத்தமாக வைக்க முடிந்தால் முதல் பாராட்டு என்னுடையதுதான்.

அன்புடன்
பவித்ரா

ஆமா பவித்ரா கரண்ட் இருக்குன்னு சொல்லவே பயமாதானிருக்கு.
நான் கம்ப்யூட்டரில் இருந்து எழுந்த உடனே பவர் கட். என்னத்தைச்சொல்ல?
நான் இருப்பது பூனாவில். இப்போ எல்லாம் நல்ல மழைகாலம் செப்டம்பர்
வரையிலும் மழைதான். கரண்ட் எப்போ போகும் எப்போ வருனே தெர்யாது.

என்னுடைய இன்றைய ஸ்பெஷல் பெருசா ஒண்ணும் இல்லை, புளிச்ச கீரை வாங்கி சமைத்தேன், மதியம் என் ரூம் மேட் அதை சாப்பிட்டுட்டு என்னை அடிக்காமல் இருந்தால் அது தான் மிக பெரிய ஸ்பெஷல்.

அன்புடன்
பவித்ரா

ஆமி, உ மாமி, எங்க ரம்யாவை நேத்து சாயங்காலத்திலேந்து காணலியே

அன்புடன்
பவித்ரா

பவி அவங்க மேனேஜர்’ல!
அதான் வேலை பழு என்று நினைக்கிறேன்.
எங்க சுத்தி எங்கே வந்தாலும் கடைசில அருசுவைக்கு தான் வருவாங்க!!

என் இன்றைய ஸ்பெஷல்:-

திடீரென விருந்தாளி 12 மணிக்கு வந்துட்டாங்க!
உங்களுக்கு தான் தெரியுமா பயங்கரமான மழை. காய்கறி,கறி வாங்க வெளியே போக முடில. அந்த நேரம் தான் உருளைகிழங்கு கறி பண்ண ரெடி பண்ணீட்டு இருந்தேன். உடனே ஞாபகம் வந்தது. கொத்தமல்லி,புதினா இல்லாமல் திடீர் நெய் சோறும், வெங்காய ரைதாவும், உருளை கிழங்கு 65(?)யும், 2 நாளைக்கு முன் பிரீசரில் வைத்த தாளிச்சாவும் வைத்து பரிமாறினேன்.ஆகா! ஓகோ! என்று பாராட்ட தொடங்கி விட்டார்கள்.என் கணவரும் ஆச்சர்யப்பட்டார்.

பக்குவமா நான் செய்தாலும் சொதப்பும் சமையல் இன்று பதட்டத்தில் செய்தும் எந்த குறையும் இல்லாமல் அமைந்தது.

இது தாங்க ப்ளாஸ்பேக் ஆப் மை இன்றைய ஸ்பெஷல்!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இந்த இழைல பதிவு பண்றதுக்கு எனக்கு ஸ்பெஷல் எதுவுமே இல்லப்பா. தினமும் ஒரே தான் இருந்தாலும் தோழிகளோட ஸ்பெஷல் படிச்சேன். நல்லாயிருக்கு. என் husband எப்ப பார்த்தாலும் பத்தி யோசிச்சுகிட்டே இருப்பார். அதிகமா சிரிக்க மாட்டார். நானும் பலதடவை சொல்லிருக்கேன். ஆனா சொல்லும் போதே டென்ஷன் ஆகி பாதிய சொல்லி பாதிலயே எந்திருச்சு போய்டுவேன். இன்னைக்கு அமைதியா சொல்லவந்தத சொல்ல நினைத்த மதிரியே சொல்லிட்டென். எப்ப பார்தாலும் மறுப்பு எதவது சொல்ரவர் இன்னைக்கு முயற்சி பன்ரேனு சொல்லிட்டார்.

மேலும் சில பதிவுகள்