பள்ளி சுற்றுலாக்கள்

அன்பு தோழிகளே ! சுற்றுலா என்றாலே அனைவருக்கும் இனிக்கும் விஷயம். அப்படி இருக்கும் போது பள்ளி நாட்களில் போன சுற்றுலா நாட்கள் இன்றும் பசுமரத்தாணி போல பதிந்து நிற்கும் அற்புதமான விஷயம். அதுபோல உங்கள் பள்ளி நாட்களில் நீங்கள் போன சுற்றுலாக்கள் பற்றியும், அந்த இடங்களைப்பற்றியும், அங்கு நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் பற்றியும் சொல்லுங்கப்பா. மறக்காம வீட்ல அம்மாவுக்கு தெரியாம அப்பாவும், அப்பாவுக்கு தெரியாம அம்மாவும் பாக்கெட் மணி குடுத்திருப்பாங்கல,எவ்வளவு குடுத்தாங்க? அதுல என்ன பண்ணீங்க? தப்பிக்க முடியாது ஆமா :)

கல்ப்ஸ்
மறக்க முடியாத நாட்களில், பள்ளி வாழ்க்கையும் ஒன்று, அதில் சுற்றுலா என்றாலே ஜாலிதானே, நாங்க கேரளா போனோம், அப்ப எங்க அம்மா, எனக்கு அனுமதி தரலை, அதனால என்னோட தோழிகள் சிலர் பவி வந்தாதான் வருவேன்னு சொல்லிட்டாங்க (நிஜமாதான்), உடனே எங்க க்ளாஸ் மிஸ் எங்க அம்மாக்கிட்ட பேசி அனுமதி வாங்கிட்டாங்க, அப்புறம் என்ன ஒரே ஜாலிதான், என்னோட ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் கூட இன்னுமும் பேசுவேன்.

அப்போ எங்க சார் சொன்ன ஒரு வாசகம், "ஜல புல ஜல புல ஜங்ஸ்" எல்லாரும் ஒரு தடவை சொல்லுங்க

அன்புடன்
பவித்ரா

என்ன பவித்ரா, இவ்வளவு சிம்ப்லா சொல்லி முடிச்சுட்டீங்க? விரிவா சொல்லுங்கப்பா. பொய் சொல்லாம சொல்லுங்க பாக்கெட் மணிய என்ன பண்ணீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

For typing this i worked very hard pa, net very slow, so i typed it more than 3 times, thats y cant able to type n tamil and also cant able to tell clearly. sorry pa, tell u abt it tomorrw

அன்புடன்
பவித்ரா

கல்பனா... டென்ஷன் பண்ணாதிங்க. நான் படிக்கும்போது டூர்'னு போனதே PG'ல தான். அதுவரைக்கும் என்னை யார்கூடவும் டூர் போக அனுமதிச்சதே இல்லை. அப்படி அடம் பிடிச்சு பெர்மிஷன் வாங்கி போன டூரும் சும்மா இல்ல... பஸ் எங்க ஊரை தாண்டும்போதே அழ ஆரம்பிச்சுட்டேன்... நான் அப்பா அம்மா இல்லாம டூர் வரல, வீட்டுக்கே போறேன்னு. நான் அழுத அழுகைய என் நண்பர்கள் இன்னும் சிரிப்பா சிரிக்கறாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா
ஹி ஹி ஹி, இப்ப மட்டும் எப்படி அப்பா அம்மாவ விட்டுட்டு இருக்கீங்க ஹி ஹி ஹி

அன்புடன்
பவித்ரா

அரட்டை அடிச்சா கல்பனா ஒதைப்பாங்க. [எப்படிலாம் தப்பிக்க வேண்டி இருக்கு... முடியலப்பா.]

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓகே வனி அக்கா,
குடு நைட்டு

அன்புடன்
பவித்ரா

நான் 8 -வது படிக்கும்போது எங்கஸ்கூலில் எக்ஸ்கர்ஷன்
கூட்டி போனாங்க. எங்க வீட்லபர்மிஷன் கிடைக்கலை. திரும்ப,
திரும்ப கெஞ்சி கேட்டு ஒரு வ்ழியா பர்மிஷன் வாங்கி ஃப்ரெண்ட்ஸ்
கள்கூட கொட்டமடிச்சுண்டு பஸ்ஸில் பாட்டுபாடிண்டு அரட்டை
அடிச்சுண்டு ஜாலியா போனோம். அம்பா சமுத்திரம் வந்தோடனே
வண்டி ப்ரேக் டவுன். முதல்ல நாங்க போரதா இருந்த இடமே
வேற. பஸ் நின்னுடுத்தா. அதனால எல்லாரும் அங்கியே இறங்கி0
பாவனாசம் வரை வேற்பஸ்ல போயி அங்கேந்து அகஸ்தியர் ஃபால்ஸ்
என்னுமிடம் போனோம். சோ,ன்னு கொட்டற அருவி பாத்தோடனே
எல்லாருக்கும் ஒரேகுஷி தாங்கலை. கூடவந்த சார், டீச்சர் எல்லாம்
பாத்த், பாத்துன்னு கூப்பாடு போடுராங்க அருவியோட சப்தம்
எங்களோட கூச்சலின் சப்தத்தில் அவங்க போட்ட கூப்பாடு எங்க
காதிலேயே கேக்கலை. இதுல வேடிக்கை என்னன்னா.ஒரு அப்பா, அம்மா
கூட அவங்க குழந்தைகளுக்கு பாக்கெட் மணியே கொடுக்காம, சாப்பிடும்
ஐட்டமாகவே ஏதாவது கொடுத்து விட்டிருந்தாங்க. ஆசை தீர 2 மணி
நேரம் அருவில குளிச்சோம் ஈரத்துணிகளை மாத்திண்டு அவங்க அவங்க
துணிகளை அலசிப்பிழிந்து பக்கத்தில் உள்ள மரக்கிளைகளில் காயப்
போட்டுட்டு வந்தா, எல்லாருக்கும் ஜோரா நல்ல பசி. அவங்கவங்க
மூட்டைகளை பிரிச்சாங்க. இட்லி,பொடிஎண்ணைதடவி, தோசை,பூரி
புளிசாதம் எலுமிச்சைசாதம் அப்பளாம் வடாம் மைசூர்பாகு,கேசரி
என்று ஏக வெரைட்டிகள். இருக்கர பசிலஎல்லாரும்வெளுத்துக்கட்டினோம்
அங்கேந்து கிளம்பி வேர பஸ் பிடித்து விக்கிரம்சிங்கபுரம்போனோம்.
தாய் சினீசில் சூப்பரா ஒருசினிமாவும் பார்த்துட்டு இரவு11 மணிக்கு வீடு
ரொம்ப ஜாலியா எஞ்சாய் பண்ணினோம். பள்ளிப்பருவத்தில் நடக்கும்
ஒவ்வொரு நிகழ்ச்சியும் இப்பக்கூட என்ன பசுமையா ஞாபகத்தில் வரது.
மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்வதற்கு நல்லவாய்ப்புதான்.
மறு நாள் லீவு விட்டாங்க. அதற்குஅடுத்த நாள் முத பெல் அடிச்சதுமே
டீச்சர் கூப்பிட்டு நாம் போய்வந்த இடங்கள்பற்றி எல்லாரும் ஒரு கட்டுரை
எழுதுங்க என்றார். இப்போ எழுதும் போது இருக்கிர ஆர்வம் அப்போல்லாம் இல்லை. ஐயோ கட்டுரையா நானில்லைப்பா என்று ஓடி
ஒளியத்தான் தோன்றியது...

பள்ளி நாளில் பிக்னிக் தான். எட்டயபுரம் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை போனோம்.ஜாலியதான் இருந்துச்சு. ஆனா மறுநாள் டீச்சர் வச்சுட்டாங்க ஆப்பு.பேப்பரை கொடுத்து "நான் சென்ற கல்விச்சுற்றுலா" நு கட்டுரை எழுத சொல்லிட்டாங்க.அப்புறமென்ன திருதிருன்னு முழிதான்.

நான் படிச்ச ஊர் குடியாத்தம். என்னோட பாட்டி வீட்டில இருந்து படிச்சேன். எனக்கு 5 வயசா இருக்கும்போதே என்னோட பாட்டி (அப்பாவின் அம்மா) என்னை அழைச்சுட்டு போய்ட்டாங்க. நான் 4வது படிக்கும் போது எங்க ஸ்கூல்ல டூர் கூட்டிட்டு போனாங்க. டூர் கட்டணம் 5.50 காசுதான். அந்த காசை எடுத்துட்டு போய் ஸ்கூல்ல குடுத்து டூர் லிஸ்டுல நம்ம பேர் வந்தா கிடைக்கும் பாருங்க ஒரு சந்தோஷம் ஆஹா.... ஆஹா..... ஆஹா....அந்த சந்தோஷத்துக்கு கோடி குடுத்தாலும் ஈடாகாது. அப்பவே நமக்கு டூர் போன உணர்வு இருக்கும். அப்புறம் டூர் சந்தோஷத்த பத்தி சொல்லவே தேவை இல்லை. இருந்தாலும் நான் சொல்லாம விடமாட்டேன். அதுக்கு தானே வந்திருக்கேன்.

ஸ்கூல்ல டூர் கூட்டிட்டு போறதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்கல்ல அப்ப தான நாங்க அவ்ளோ பெரிய தொகைய வீட்ல புரட்டனும்ல வங்க. நடக்கற வேலையா அது. எங்க பாட்டி வீட்ல பாட்டி, தாத்தா, சித்தப்பா, நானு இத்தன பேர் தான். அதுவும் எங்க சித்தப்பாகிட்ட பர்மிஷன் வாங்குறது இருக்கு பாருங்க. மணலை கூட கயிறா திரிச்சுடலாம், வானத்தை வில்லா வளைக்கலாம் அட, இவ்ளோ ஏங்க போறீங்க கிழக்குல உதிக்கிற சூரியனை கூட மேற்குல டிரான்ஸ்பர் பண்ணலாம். சித்தப்பு கிட்ட அவ்ளோ ஈசியா பெர்மிஷன் வாங்க முடியாது. சித்தப்பு ஓவரா பயப்படுவாரு, இங்க போனா இப்படி ஆகும், அங்க போனா அப்படி ஆகும்னு பயந்து எங்கேயும் அனுப்ப மாட்டார் (ஸ்கூல தவிர)

எங்க பாட்டி தான் எனக்கு எது வேணும்னாலும் சித்தப்பு கிட்ட சண்டை போட்டு வாங்கி தருவாங்க. டூர் போறதுக்கும் அப்படித்தான். எங்கள மாதிரி பசங்களுக்காக தான் முன்கூட்டியே 6 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிடறாங்க போலிருக்கு. அட, அப்பதானேங்க பாட்டி சண்டை போட ஆரம்பிச்சு டூர் போற நாளுக்கு முன்னாடியே சண்டை முடிஞ்சு பணமும், பர்மிஷனும் குடுத்து அனுப்புவாங்க. அட, நீங்க நினைப்பீங்க, இவ்ளோ பாசமுள்ள பாட்டி பேத்திக்காக சண்டையெல்லாம் போடுறாங்க ஒரு 5.50 பைசா இருக்காதான்னு. அப்போல்லாம் பாட்டி கிட்ட காசு இருந்துச்சா, இல்லையான்னுலாம் எனக்கு தெரியாதுங்க, அறியாத வயசுல்ல அதுதான்.

ஒரு வழியா பாட்டி சண்டை முடிஞ்சு, வெற்றி எங்கப்பக்கம்னு முடிவாகி ரூ.5.50 பைசாவை சித்தப்பு குடுத்துடுவாரு. அப்புறம் அதை ஸ்கூல்ல டீச்சர்கிட்ட குடுத்து டூர் லிஸ்டுலயும் நம்ம பேரு வெற்றிகரமா வந்துடும். அப்படி வந்த பேர சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒரு ஒரு தோழியையா கூப்பிட்டு காண்பிப்போம். அது ஒரு அல்ப சந்தோஷம்ங்க. கிளாஸ்ல டீச்சர் இல்லாதப்ப டூரை பத்தி தோழிகளுக்குள்ள பெரிய மீட்டிங்கே நடக்கும். என்ன டிரஸ் போட்டுட்டு போறது, என்ன சாப்பாடு கொண்டு போறது, என்ன நொறுக்ஸ் கொண்டு போறது, எவ்வளவு பாக்கெட் மணி வாங்கிக்கறது, போற இடத்துல என்ன வாங்குறது இது போல நிறைய. தினம் தினம் புதுசு புதுசா டிஸ்கஸ் பண்ணுவோம்.

ஒருவழியா டூர் போற நாளும் வந்திடும். டூர் போற முந்தின நாளே பாட்டி புளியோதரை (அ) எலுமிச்சை சாதம், உருளை கிழங்கு பிரை, மசாலா சப்பாத்தி (அ) இட்லி, தக்காளி தொக்கு (அ) வேர்க்கடலை சட்னி இப்படி ஏதாவது ரெண்டு ஐட்டம் பண்ணித்தருவாங்க. அத பண்றதுக்கு பாட்டி எப்பதான் சமையல் ரூமுக்கு போவாங்களோன்னு காத்துகிட்டு இருப்பேன். பாட்டி ஒரு 9 மணியளவில நுழைந்து சிட்டு மாதிரி ஒரு மணி நேரத்துல எல்லாம் முடிச்சு வாழை இலைய தணலில காண்பிச்சு ஐட்டங்கள அழகா அளவா பேக் பண்ணி வச்சுடுவாங்க. அது தவிர மிக்சர், முறுக்கு, பால்கோவான்னு நொறுக்ஸ் தனியா இருக்கும். ஒரு சின்ன வாட்டர் பாட்டில்ல தண்ணி ஊத்தி வச்சிடுவாங்க. இத எல்லாம் பாத்துட்டு தூங்க போவேன். தூக்கமே வராது. எப்படா 5 மணியாகும்னு பார்த்துட்டு இருப்பேன். தவறி நான் தூங்கிட்டாலும் பாட்டி எழுப்பி விட்டுடுவாங்க. அப்புறம் சுடு தண்ணில குளிச்சு முடிச்சு நைட்டே பார்த்து பார்த்து எடுத்து வச்ச டிரஸ்ச போட்டுட்டு, புது கம்மல், புது செயின், புது மோதிரம் (அட, எல்லாம் வளையல் கடை உபயம் தாங்க) கொலுசு மட்டும் வெள்ளில போட்டுட்டு சும்மா கலக்கலா ரெடி ஆகி நிப்போம்ல.

அப்புறம் பாட்டி சித்தப்புவ எழுப்பி ஸ்கூல்ல கொண்டு போய் விட சொல்லி நச்சரிப்பாங்க. அப்படியே பாக்கெட் மணி ஏதாவது தரச் சொல்லுவாங்க. சித்தப்புவும் பாட்டி நச்சரிக்கறதுல சீ போடானு எழுந்து கிளம்பி பாக்கெட்ல தேடிப் பிடிச்சு 2 ரூபாவ எடுத்து (தூக்கி) தருவாரு. சிக்கனமா செலவு செஞ்சிட்டு மீதிய பத்திரமா எடுத்துட்டு வர சொல்லி 100 முறை சொல்லிடுவாரு.:(

பாட்டி, சித்தப்புவுக்கு தெரியாம 5 ரூபா தருவாங்க. சித்தப்பு பார்த்தாருன்னா அவர் குடுக்கற 2 ரூபாவுக்கும் ஆப்பு தான். ஸ்கூல் ரொம்ப தூரம் இல்லைங்க எங்க தெரு திரும்புனா வந்துடும். சித்தப்பு கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு அங்கே போய் ஒரு சின்ன பிரசங்கமே (இங்க இப்படி இருக்கணும், அங்க அப்படி இருக்கணும், இங்க போகாதே, அங்க நிக்காதே. இப்புடி) பண்ணிட்டு, பத்தாததுக்கு கிளாஸ் டீச்சர் (டீச்சர் தெரிஞ்சவங்க அதுதான்) கிட்ட போட்டு கொடுத்துட்டு சந்தோஷமா போய்டுவாரு.

எல்லா பசங்களும் வந்தபிறகு லிஸ்ட பார்த்து செக் பண்ணின பிறகு, சீட்ல எல்லா பசங்களயும் உக்கார (நுழைச்சி) வச்சு பஸ்ஸ எடுக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டும் (எங்களுக்கு இல்ல, டீச்சர்சுக்கு தான்)

டூர் ஸ்டார்ட் ஆய்டுசீங்களா? முதல்ல வேலூர் கோட்டை போவோம், போகும் போது ஜெயில்ல கைதிகள கூட்டிட்டு போற மாதிரி லைனா நிக்க வச்சு கூட்டிட்டு போவாங்க, ரெண்டு பக்கமும் வார்டன் மாதிரி டீச்சர்ங்க வருவாங்க (என்னங்க பண்றது வேலூர்ன்னவுடனே கைதி, ஜெயிலு, வார்டன்னு நம்மளயும் அறியாம வார்த்தைகள் வந்துடுது) அந்த லைன விட்டு கொஞ்சம் கூட வெளிய வராம லைன்லயே போகனும், இல்லாட்டி பிரம்படி தான். ஒரு பயத்துலயே சந்தோஷமா கோட்டைய சுத்தி பார்த்துட்டு, கட்டு சாப்பாட்டை பிரிச்சி சாப்டுட்டு கொஞ்ச நேரம் இளைப்பாறிட்டு திரும்பவும் கிளம்புவோம். இந்த முறை ஜலகண்டேஸ்வரர் கோயில். அப்புறம் அதே அடிமைதனத்தோட கோயிலையும் சுத்தி பார்த்துட்டு சாமி கிட்ட வேண்டிகிட்டு (அடுத்த பிறவில நாங்க டீச்சராவும், எங்க கிளாஸ் பசங்களா எங்கள கொடுமை படுத்தின டீச்சரே பசங்களாவும் வரணும்னு) அங்கே மதிய சாப்பாட்டை முடிச்சுட்டு, வேலூர் எக்ஸிபிஷனுக்குள்ள நுழைவோம்.

ஒவ்வொரு இடமா காண்பிச்சுட்டே வருவாங்க. நடுவுல விளக்கமும் தருவாங்க. செலவுக்கு குடுத்த பணத்துல ஸ்கூல் டீச்சரோட பாதுகாப்புல கம்மல், மணி, வளையல் இப்படி ஏதாவது வாங்குவோம். இன்னும் காசு இருக்கறவங்க ஜெயன்ட் வீல், ரங்கராட்டினம்,ரயிலு இப்படி ஏதாவது ஒன்னுல உக்காருவோம் டீச்சரோ தான்.அப்பவே மணி 9 ஆய்ட்டு இருக்கும். எல்லாருக்கும் தூக்கம் கண்ண கட்ட ஆரம்பிச்சிடும். தூக்க கலக்கத்துல அவங்க அவங்க பையை எடுக்கறதுக்கு பதிலா பக்கத்துல இருக்கறவங்க பையை மாத்தி எடுத்துக்குவோம் அது வேற விஷயம். திரும்ப ஒருவழியா பசங்க லிஸ்ட சரிபார்த்து அந்த பசங்கள் பஸ்ல நுழைச்சு வீடு வந்து சேர்றதுக்குள்ள...

(இன்னும் என்ன கதை வேண்டி கிடக்குது அது தான் வந்து சேர்ந்து உங்ககிட்ட கதை சொல்லிட்டு இருக்கேன்ல.. சரி, சரி கதை முடிஞ்சுடுச்சு எல்லாம் வேலய பாருங்க சும்மா மச மசன்னு உக்காந்துட்டு... யாராவது கத சொல்ல கிடைச்சா போதுமே) சும்மனாங்காட்டியும்... :-))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்