தேதி: May 27, 2010
இந்த தெர்மாக்கோல் வால் ஹேங்கிங் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர்கள் செல்வி. பத்மா, ரேவதி அவர்கள்.
தெர்மாக்கோல் ஷீட்
உல்லன் நூல் - மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு நிறங்கள்
ப்ரவுன்நிற ஃபேப்பரிக் பெயிண்ட்
ரிப்பன் லேஸ் - மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள்
செயற்கை இலைகள் - 8
ஃப்ளவர் லூம் (flower loom)
கம்
குண்டூசி
கத்திரிக்கோல்
ப்ரஷ்
மெல்லிய குச்சிகள்
கருப்பு ஸ்கெட்ச் பென்
கத்தி
பெரிய ஊசி
தெர்மாக்கோல் வால் ஹேங்கிங் செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரு செ.மீ உயரமுள்ள தெர்மாக்கோல் ஷீட்டில் படத்தில் காட்டியுள்ளது போல் பூ வாளியை ஸ்கெட்ச் பேனாவால் வரைந்துக் கொள்ளவும். வரைந்த பகுதியின் ஒரத்தை மட்டும் கத்தியால் வெட்டி எடுக்கவும்.

பூ வாளியின் மேல் இருக்கும் அரைவட்ட பகுதியின் ஒரத்திலிருந்து ஒரு இன்ச் அளவு இடைவெளிவிட்டு அதனுள்ளே ஒரு அரைவட்டத்தை வரையவும். இப்போது உள்ளிருக்கும் அரைவட்டத்தை மட்டும் கத்தியால் வெட்டி எடுக்கவும்.

ப்ரவுன் நிற ஃபேப்பரிக் பெயிண்டை கொண்டு பூ வாளியின் அடிப்பகுதி மற்றும் நடுப்பகுதியை பெயிண்ட் செய்துக் காயவிடவும். அதன் பின்னர் பெயிண்ட் செய்த நடுப்பகுதியிலிருந்து அடிப்பகுதி வரைக்கும் உள்ள வடிவத்திற்கேற்றவாறு குச்சிகளை உடைத்து கம் தடவி அதன் ஓரங்களில் ஒட்டிக் கொள்ளவும். இப்போது நடுப்பகுதியில் மூன்று பாகம் இருப்பதுபோல் அதன் நீளத்திற்கேற்றாற் போல் குச்சிகளை உடைத்து ஒட்டவும். பிறகு, அதன் ஒவ்வொரு பாகத்திலும் படத்தில் உள்ளதுப்போல் குச்சிகளை உடைத்து டிசைன் செய்து கொள்ளவும்.

ஃப்ளவர் லூம்மில் சிறிய பூ செய்வதற்காக நடுவிலுள்ள ஏதாவது ஒரு குச்சியில் மஞ்சள்நிற உல்லன் நூலை கட்டி ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். பிறகு முடிச்சுப் போட்டிருக்கும் குச்சியிலிருந்து அதன் எதிரே உள்ள குச்சியில் நூலை சுற்றாமல் அதன் பக்கத்தில் உள்ள குச்சியில் நூலை சுற்றவும். இப்போது அந்த நூலை அதன் எதிரே உள்ள குச்சியில் சுற்றவும்.

இதேப்போல் உல்லன் நூலை ஒவ்வொரு குச்சியிலும் சுற்றி சுற்றி எடுக்கவும்.

மேற்சொன்னது போல் ஐந்து அல்லது ஆறு முறை சுற்றி முடிந்ததும், முடியும் இடத்தில் அந்த நூலைக் கொண்டு அந்த குச்சியில் ஒரு முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். மீதி நூலை கத்திரிக்கோலால் நறுக்கி விடவும்.

பெரிய ஊசியில் கருஞ்சிவப்புநிற உல்லன் நூலை தேவையான அளவு எடுத்து இரட்டையாக கோர்த்து வைக்கவும். அந்த இரட்டை நூலில் ஏதாவது ஒரு நூலில் மட்டும் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். இந்த நூலில் முடிச்சுப்போட்ட பகுதியை இடது கையால் பிடித்துக் கொண்டு, ஊசியை ஃப்ளவர் லூம்மில் சுற்றியிருக்கும் பூவின் அடிவழியாக உள்ள துளையில் விட்டு மேல்வழியாக இழுக்கவும். பிறகு ஊசியை ஏதாவது ஒரு பூவிதழ் பகுதியின் இடைவெளியில் விட்டு அடிவழியாக கொண்டு வந்து நடுவிலுள்ள துளையில் விட்டு மேல்வழியாக இழுக்கவும்.

இதேப் போல் ஒவ்வொரு பூ இதழின் இடைவெளியிலும் நூலை சுற்றி எடுக்கவும்.

இன்னும் ஒரு முறை பூவிதழ்களின் இடைவெளியில் சுற்றி முடிந்ததும் பின்புறமாக நூலை கொண்டு வரவும். முன்பு இடதுகையால் பிடித்து வைத்திருக்கும் நூலையும், இதையும் சேர்த்து இரண்டு முடிச்சுப்போட்டுக் கொள்ளவும்.

ஃப்ளவர் லூம்மின் அடிவழியாக ஒவ்வொரு இதழையும் கழற்றி விடவும்.

இதுப்போல் மொத்தம் ஏழு பூக்கள் செய்து வைத்துக் கொள்ளவும்.

பூ வாளியின் கைப்பிடியின் ஒரு பக்கத்தில் மஞ்சள் மற்றும் பச்சைநிற ரிப்பன் லேஸை வைத்து விலகாமல் இருப்பதற்கு குண்டூசியை சொருகி விடவும். பிறகு இந்த இரண்டு லேஸையும் சற்று இறுக்கமாக மாறி மாறி சுற்றி கொண்டு வந்து முடியும் இடத்தில் குண்டூசியை சொருகி விடவும். இப்போது பூ வாளியில் பெயிண்ட் செய்யாத பக்கத்தில் இலைகளை முதலில் வைத்து அதன் மேல் மூன்று பூக்களை வைத்து குண்டூசியால் சொருகி வைக்கவும்.

மீதி இருக்கும் பூக்களையும், இலைகளையும் படத்தில் உள்ளது போல் வைத்து குண்டூசியால் பின் செய்துக் கொள்ளவும்.

பூ வாளியின் கைப்பிடியில் சிவப்பு ரிப்பன் லேஸைக் கொண்டு சிறிய போவ் போல் செய்து குண்டூசியால் பின் செய்துக் கொள்ளவும். மிகவும் அழகாகவும், சுலபமாகவும் செய்யக்கூடிய தெர்மாக்கோல் வால் ஹேங்கிங் தயார்.

Comments
ரேவதி, பத்மா..
ரேவதி, பத்மா... ;) நீங்களுமா??? ரொம்ப ரொம்ப சூப்பர். அந்த பூ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள். இனி அடிக்கடி இப்படி குறிப்பு குடுங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பத்மா & ரேவதி
கலக்கல் கைவேலை பத்மா & ரேவதி. ;)
பூக்கள், படங்கள் எல்லாமே அழகு. இப்போவாவது பெயரைப் போட்டீர்களே. ;) பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். ;)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
அன்பு பத்மா, ரேவதி , உங்க
அன்பு பத்மா, ரேவதி , உங்க தெர்மோகோல் வால் ஹேங்கிங் சூப்பர். ப்ளவர் லூம் மேலும் கைவேலைக்கு தேவையான பொருட்கள் சென்னையில் எங்கே கிடைக்கும்.?
Save the Energy for the future generation
நன்றி
ஹாய் வனிதா மேடம்,
நல்லா இருக்கீங்களா? ரொம்ப நன்றி வனிதா மேடம். நிச்சயம் நேரம் கிடைக்கும் போது இன்னும் நிறைய கைவினை குறிப்புகள் கொடுக்கிறோம். எனக்கு ஒரு டவுட் அது என்ன நீங்களுமா????? னா புரியல மேடம்.
ஹாய் இமா மேடம்,
நலமா? பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி. இது வரை வெளியான எங்களுடைய கைவினை குறிப்புகள் ஒவ்வொன்றிலும் பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
ஹாய் இந்திரா மேடம்,
எப்படி இருக்கீங்க? நன்றி மேடம். ப்ளவர் லூம் நாங்க இங்க ஒரு கைவினைப் பொருட்கள் எல்லாம் விற்கும் ஒரு கடையில் தான் வாங்கினோம். நீங்களும் சென்னையில் அந்த கடைகளில் கேட்டு பாருங்களேன் நிச்சயம் இருக்கும். இல்லைனா சென்னையில் உள்ள அறுசுவை தோழிகள் யாரிடமாவது கேட்டு பாருங்களேன் இந்திரா மேடம்.
இது யாரு?
ஆஹா! ஒவ்வொருத்தரா வெளியே வர்றாங்க. ;)
இது யாரு? பத்மாவா, ரேவதியா? ;)
இன்னும் நிறைய கைவேலை எடுத்துவிடுங்க.
- இமா க்றிஸ்
பத்மா & ரேவதி...
//எனக்கு ஒரு டவுட் அது என்ன நீங்களுமா????? //
அதுவா... ஒன்னுமில்லை பத்மா & ரேவதி... பாப்பி தான் இதெல்லாம் செய்வாங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன்.. நீங்களும் செய்வீங்கன்னு இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன். அண்ணா தன்னை சுற்றி டீம்'அ நல்லா செலெக்டடா வெச்சிருக்கார். :)
நான் நலமா இருக்கேன். நீங்க நலமா? அப்பறம் முக்கியமான விஷயம் "மேடம்" வேணாம்... வனிதா'னே உரிமையோட கூப்பிடுங்க. நானும் சின்ன பொண்ணு தான்.. சந்தேகம் இருந்தா பாப்பிய கேட்டு பாருங்க ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
craft super
unga craft super
kandippa seithu parpen.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
really superb ... definitely
really superb ... definitely i'll try this...
expecting more creatives.....
very nice
Hi,
The craft looks very nice.I will also try.
I need one help, i cant able to copy this page.why like this. am i need to install any software to copy this page.
Pls suggest me.
Thanks Padma
All is Well
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta