கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

காலேஜ் முடிந்து பிரிந்து ரொம்ப நாளைக்குப் பிறகு மூன்று நண்பர்கள் ஒன்றுகூடினார்கள். ஏதாவது பார்ட்டி வைத்துக்கொள்ளலாமென்று கடைக்குச் சென்றார்கள்.
நண்பர் A 3 பீர் -க்கு காசு கொடுத்தார். நண்பர் B 5 பீர் -க்கு காசு கொடுத்தார். நண்பர் C கிட்ட அப்போ காசு இல்லை. தன்னோட பங்கை மறுநாள் தருவதாகச் சொன்னார். மறுநாள் நண்பர் C, 800 ரூபாய் எடுத்து வந்து நண்பர் A கிட்ட கொடுத்து இரண்டு பேரையும் பிரித்து எடுத்துக்கச் சொன்னார். நண்பர் A 3 பீரின் பங்காக 300 ரூபாய் அவருக்கு எடுத்துக்கொண்டு மீதி 500 ரூபாயை நண்பர் B யிடம் அவரின் 5 பீரின் பங்குக்காக கொடுத்தார்.

நண்பர் B அதை ஒப்புக்கொள்ள மறுத்து எனக்கு 700 ரூபாய் வேண்டும் என அடம் பிடித்தார். இதில் யார் சொல்வது சரி? ஏன்?

அன்புடன்,
இஷானி

நண்பர் B சொல்வதுதான் சரி. ஆளுக்கு 800 ரூபாய் என்றால், மொத்தம் 2400 ரூபாய், இதில் A, 3 beer, 900 ரூபாய் கொடுத்திருக்கிறார், A, 5 beer, 1500 ரூபாய் கொடுத்திருக்கிறார், எனவே A 100 மட்டும் எடுத்துக்கொண்டு, 700 B அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.

இதுவும் கடந்து போகும்.

சரியான விடை யோகலெஷ்மி. நீங்க கணக்குல புலின்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

அன்புடன்,
இஷானி

நன்றி இஷானி. புலி எல்லாம் இல்ல. ஆனால் கொஞ்சம் பிடிக்கும்.

இதுவும் கடந்து போகும்.

the simple maths logic.use the number 8 for 8 times. use any operations(+, -, * ,/). the answer coming must be 1000. try it.

888 + 88 + 8 + 8 + 8 = 1000

அன்புடன்
பவித்ரா

888+88+8+8+8=1000

888+88=976+8+8+8=1000

first 888 (3 eights) 88 (2 eights) and remaining 3 are separetly added.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

correct.
Lynn and Fred purchased a house for $84,000. Six years later they sold it for a 15% loss. What was their selling price?

71400

மேலும் சில பதிவுகள்