அறுசுவை தமிழ் கவிச்சங்கம்

இந்த த்ரெட்டை ஆரம்பம் செய்வதற்கான நோக்கம் யாதெனில் அறுசுவையில் இப்போது நிறைய கதாசிரியர்கள்.கவிஞர்கள் உருவாகி வருகின்றனர்..பொதுவாய் அதிகம் வரும் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் விமர்சனங்கள் குறைவு.ஏதும் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்ற பயம் இருக்கலாம்..
அதை போக்கும் முகமாக நம்மில் யாராவது ஒருவரை அல்லது இருவரை விமர்சனக்குழு அங்கத்தினாராக இருந்து கதைகளில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி அவர்களது படைப்புக்கள் வருங்காலங்களில் சிறந்ததாக அமைய உதவலாம் என்று நினைத்தேன்...இதில்யாரை விமர்சனக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கலாம் என்று உங்கள்து கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.(கண்டிப்பாக வனிதா அக்கா,ஆமினா போன்று எல்லாத் துறையிலும் சிறந்தவர்களாக இருந்தால் நன்றாயிருக்கும் என்பது என் எண்ணம்)
மேலும் கதை கவிதை அனுப்புவது பற்றிய விவாதங்களை இங்கே தொடரலாம்...

நட்புடன்
ஷேக் முகைதீன்

நல்ல தலைப்பு ஷேக் அண்ணா

அன்புடன்
பவித்ரா

என்ன பவி நல்ல தபைப்புன்னு சொல்லி எஸ்கேப் ஆகுறிங்க...உங்கள் கருத்துக்களை எங்கே பதிவு செய்யுங்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தப்பா நினைக்காதீங்க, நீங்க என்ன கேட்கறீங்கன்னே எனக்கு புரியலை, யாருமே பதிவு போடலையா, அதான் நான் போட்டேன்.

விமர்சனக்குழு தேர்வு செய்யணுமா?

அன்புடன்
பவித்ரா


கதைல இருக்கற கொறைகளை இங்க சொல்லுங்கோனு சொல்ரார்னு நெனைக்கறேன்
(இதானானு நேக்கு தெர்ல)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அதுதான் மாமி எனக்கும் புரியலை,

அன்புடன்
பவித்ரா

ஆமாம் பவி இரண்டு ஆளை தேர்ந்தெடுத்து அவர்களை விமர்சனம் செய்ய சொல்லலாம்....இப்போது புரிகிறதா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அப்ப எங்க கருத்து எல்லாம் வேஸ்ட்னு சொல்றீங்களா?

Don't Worry Be Happy.

புரியுது ஆனா நீங்கள் இந்த இழையை ஆரம்பித்ததை யாராவது வேண்டாம்ன்னு சொல்லுவாங்களோன்னு தோணுது, நீங்க என்னை தவறாக நினைக்க வேண்டாம்.

அன்புடன்
பவித்ரா

ஜயலட்ஷ்மி மேடம் அப்படி சொல்லவில்லை..வாசகர்கள் மற்றும் நண்பர்களின் கமென்ட்ஸ்கள் ரொம்ப ரொம்ப முக்கியம்!
அத்துடன் இந்த விமர்சன்க்குழு அப்படி ஒன்றை இனைக்கலாமா என்றுதான் ஐடியா கேட்கிறேன்..தவறாக எடுக்க வேண்டாம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அச்சசோ என்ன சேக் இது கருத்து கேட்டுட்டு மன்னிப்பு எல்லாம் கேட்கலாமா.
விமர்சனக்குழு இருக்கிறதுனால தப்பே இல்லை.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்