அரையிருளாய் எரியும் வண்ண விளக்கு
நடுங்கும் நிழலுடன் நனைந்த நான்
அரைகுறையாய் துவட்டிய துண்டை
உன் அவசரக் குளியலுக்கு அபகரித்துப் போவாய்
முதுகின் பின்னால் உன் குறும்புப் புன்னகை
என் இடைதழுவும் விரல்நகங்களில் தெரியும்
கழுத்தில் முடி விலக்கும் உன் மூச்சுக்காற்று
நீ கவனமாய் ரசிப்பதை எனக்கு உணர்த்தும்
நேற்று இரவு தொடக்கம் எண்ணி
பதறும் மனம் வெட்கப்பட்டு
அடுத்து என்ன ஆவல் கொண்டு
தயங்கும் விரல் நகர்த்தையில்
எப்போதும் போல் அவகாசம் தந்து
நீ இப்போதும் என் அவஸ்தை ரசிப்பாய்
எட்டித் தள்ளும் என் பொய்க்கோபம்
உன்னைத் தோல்வி ஏற்று தொடரச் செய்யும்
மணவறை முதல்தொடுகைப் போல்
மறுபடியும் என்னை சிலிர்க்கச் செய்யும்
கொதிப்பாய் வரும் இரு மூச்சு ஓசை
அமைதி இரவின் நிசப்தம் கலைக்கும்
இருவர் மட்டுமான ஏகாந்தம்
இப்போது மட்டும் ரொம்பப் பிடிக்கும்
ஈரக்கூந்தல் சிந்தும் முத்துத்துளிகள்
உன் மார்பில் பட்டுத் தெறிக்கும்
அணைத்த பொழுது நாணம் போல்
அதுவும் மெல்ல மறைந்து போகும்
உன் இரவுக் குளியலின் சோப்பு வாசம்
விடியல் பொழுதில் என்மீது வீசும்
ஒவ்வொரு விடியல் பிறக்கையிலும்
நானும் புதிதாய் பிறந்திடுவேன்
எத்தனை நாள் பிறப்பாய் என்று
இறைவன் பொறுமை இழந்தானோ
இனிக்கும் இரவு நினைவுகளை
சோம்பல் காலையில் டீயுடன் அருந்தி
பறக்கும் முத்தம் கொடுத்தே
அன்றும் பணிக்கு உற்சாகமாய் சென்றாய்
எதற்கோ எங்கோ சென்ற நீ
இரட்டை கோபுரச் சரிவில் சிக்கி
இரண்டு நாட்கள் சென்ற பின்பு
என்னிடம் கட்டிக் கொடுக்கப்பட்டாய்
ஆறடி கட்டிலும் போதாது என்ற நீ
மூன்றடி பையுக்குள் அடங்கியது எப்படி!
இறுகப் பற்றிய செல்போனில்
கடைசியாய் என்னை ஏன் அழைத்தாய்?
இடிந்த கட்டிடம் சுமை தாளாமல்
பகிர்ந்துகொள்ள என்னை அழைத்தாயோ
இல்லை இறுதி மூச்சில் இமை மூடி
நேற்று இரவுநாடகம் நினைத்தாயோ
என்ன அவசரம் என்னவனே..
எண்ணிவிடும் பொழுதுகள் மட்டும்
என்னுடன் இருந்துவிட்டு
எத்தனையோ மாற்றங்களை
என்னுள்ளே விதைத்துவிட்டு
அத்தனையும் ஏமாற்றங்களாய்
விளைய விட்டது நியாயமா?
இனிமை ராத்திரிகள் இனி இல்லையென
பொய்யாய்கூட நீ சொன்னது இல்லை
தனிமை இராத்திரிகள் கொடுமை கணவா
உன் நினைவுகள் மட்டும் போதாது
இனி நீயில்லை என்னும் நிஜம்
என்னையும் மெல்லக் கொல்லும்
- ப்ரியசகி
Comments
அர்த்தமுள்ள கவிதை!
self-confidense is the key to open the door of happiness in your life
ஹாய் ப்ரியசகி,
அற்புதமான கவிதை , அர்த்தமுள்ள கவிதை. எத்தனை உள்ளங்கள் இப்படி வேதனைப்பட்டனவோ? பிரிவின் வழியை அழகாக எழுதியுள்ளீற்கள். வாழ்த்துக்கள்.
self-confidense is the key to open the door of happiness in your life
கண்ணீர் வரைந்த காதல் ஓவியம்!
பிரியசகி, காதலின் சுகத்தை மென்மையாகவும்,பிரிவின் துயரை மனதை அழுத்தும் சோகம் ததும்பவும் கொடுத்திருக்கிறீர்கள். மனதில் நிலைக்கும் கவிதை வரிகள். வாழ்த்துக்கள்!!!
கவிதை
நெஞ்சை தொட்டதிந்த கவிதை.படிக்கும்பொழுதே கற்பனை செய்து கொள்ளும்படி உள்ளது வார்த்தைகளின் அழகு...கடைசியில் தொன்டை அடைத்து விட்டது...
தளிகா:-)
நெஞ்சுக்குள் வலி
யாரிந்த பிரியசகி??புதிதாக அறுசுவை வருபவர்களா??உங்க கவிதை நெஞ்சுக்குள் ஒரு வலியை ஏற்படுத்துது.பாரட்டும் அளவிற்கு எனக்கு கவிதை ஞானம் இல்லை.எழுதுறதுக்குதானே ஞானம் வேண்டும்.பாராட்ட தேவையில்லையே?கவிதை நன்றாக இருக்கு.நிறைய எழுதுங்கள்.
அறுசுவை உறுப்பினர்
ப்ரியசகி அறுசுவையின் உறுப்பினர்தான். அவரது நிஜப் பெயரை வெளியிட அவருக்கு விருப்பம் இல்லாததால், ப்ரியசகி என்ற புனைப்பெயரில் வெளியிடச் சொல்லிவிட்டார். கவிதை சொந்தமாக இருக்கையில் புனைப்பெயரிலும் எழுதலாம் என்பதுதான் இந்த பகுதிக்கான விதி. ஆகையால் அவரது நிஜப்பெயரை இங்கே வெளியிடவில்லை.
வார்த்தை கூட வரவில்லை எனக்கு!!!
அன்புள்ள பிரியசகி,
என்னால் அழுகையை கட்டு படுத்தமுடியவில்லை.
சோகத்தை இப்படி கூட சொல்லமுடியுமா?
இது முழுக்க முழுக்க !
வார்த்தை கூட வரவில்லை எனக்கு!
ஒரு இரும்பு கரம் அழகிய ஓவியம் ,சின்ன புறா வை சிதைப்பதை போன்ற உணர்வு!!
இங்கே ஆயிரம் தோழிகள் உள்ளோம் உங்களுக்கு!
நேரில் ஆருதல் இல்லாவிடினும் வார்த்தையால் அன்பை பொழிய!!
ஈரம் கசியும் விழியுடன் விடை பெறுகிறேன்!!
அன்புள்ள பிரியசகி
அன்புள்ள பிரியசகி,
கவலை வேன்டாம் கண்ணீர் துடை என்ட்ரு சொல்ல மனமும் வார்தையும் இல்லை. மிகுந்த கனமுல்ல மனதுடன் , உங்கள் மனம் என்ட்ரும் நல்ல நினைவுடன் வாழ , வல்ல இரைவனை பிரார்திக்கிரென்.
எல்லாவர்ரிக்கும் இறைவன் போதுமானவன்.
கொத்துக் கொத்தாய் சாவுகள்
ஐயோ, நெஞ்சைப்பிழியும் சோகம். பிரியசகி உன்னைப்போல் எத்தனை பெண்கள் அன்புக் கணவனை இழந்து, எத்தனை குழந்தைகள் தந்தையை, தாயை இழந்து, சகோதர சகோதரிகளை இழந்து. இறைவா கண் இல்லையா உனக்கு என்று கேட்கத் தோன்றுகிறது. ஆசையுடன், ஆர்வத்துடன் கவிதையைப் படிக்க ஆரம்பித்தேன். இது போன்ற கவிதைகளைப் படித்து ஒரு தீவிரவாதியாவது திருந்தமாட்டானா. உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தையே இல்லையே தோழி. உங்கள் மன ரணம் ஆற ப்ரார்த்திக்கிறேன் தோழி. மனம் பாரமாகி விட்டதம்மா.
அன்புடன்
ஜெயந்தி
அன்புள்ள பிரியசகி
எங்கள் இதயமும் அலுகிரது.ரொம்ப அழகாக
துயரின் பிரிவை கவிதையாய் கொடுத்து இருக்கிரீர்கள்.
வாழ்த்துக்கள்.
கவிதை
கவிதை சொந்த வாழ்க்கையில் நடந்திருக்கனும்னு இல்லை ...அதனால் அவசபட்டு யாரும் கருத்துக்களை சொல்லிடக் கூடாதேங்கர பயத்தில் இந்த பதிவைப் போடரேன்
தளிகா
கவிதை
நானும் இதைத்தான் அவசரமா எழுத வந்தேன்.அவர் எழுதியிருப்பது கவிதைதானே??
அதே நினைப்பு தான்...
சொந்தக்கவிதை என்று அட்மின் சொன்னதற்காக அனுபவமும் சொந்தமானது என்று நினைத்து எழுதியவரைக் காயப்படுத்திவிட்டார்களோ என்று என் மனதிலும் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டிருப்பது நிஜம் தான்...
உண்மை
இது அவரது சொந்த அனுபவம் அல்ல. அவரின் சொந்த கவிதை. என்னுடைய வார்த்தைகளில் தவறு எதுவும் இருந்ததா என்பது தெரியவில்லை.
அவர் கேட்டறிந்த ஒரு நிகழ்வை வைத்து இந்த கவிதையை எழுதியுள்ளதாக தெரிவிக்கின்றார். சகோதரிகள் இதை அவரது அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
நீக்கிவிடலாமே...
தவறாகப் புரிந்துகொண்டு எழுதப்பட்ட கருத்துக்களை நீக்கிவிடலாமே...
உண்மை என்னவென்று நமக்கு தெரியாதே????
மிக அருமையான கவிதை ..ஆனால் அதை ப்ரியசகியின் சொந்த கதை என்று நாம் அவசரப்பட்டு சொல்லக்கூடாதோனு தோனுது ...அங்கே நடந்தவை கேட்டவைகளை நினைத்து இப்படி ஓரு கவிதை அவர்கள் எழுதி இருக்கலாம் அல்லவா? உண்மை என்னவென்று நமக்கு தெரியாதே????
அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!
நீக்கத் தேவையில்லை
கருத்து தெரிவித்தவர்கள் எந்த நோக்கத்தில் சொல்லியிருக்கின்றார்கள் என்ற உண்மை நமக்கு தெரியும் என்பதால், அதை நீக்கவேண்டிய அவசியம் இல்லை. கருத்துக்களில் தவறு எதுவும் இல்லை.
அந்த கவிதைப் பாத்திரத்துக்கு அவர்கள் தெரிவித்த அனுதாபம் அது. அவருடைய படைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் சொல்லலாம். அவ்வளவுதான். ப்ரியசகி இதை மிக எளிதாக எடுத்துக்கொண்டார். கருத்து கொடுத்தவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டாம். உங்கள் அனுதாபங்கள் அனைத்தும் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களை போய் சேரும்.
கவிதை
கவிதை
மிகவும் அருமையாக இருந்தது வால்துல்லக்கல்
Be Happy
Be Happy
வார்த்தைகள் இல்லை பாராட்ட!!
அன்புள்ள ப்ரியசகி,
மிகவும் அற்புதமான படைப்பு. படித்து முடித்ததும் இதயம் கனத்து விட்டது. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை மிக அழகாக நியாபகப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் ப்ளெஸ்ஸிங் என்று எடுத்து கொள்ள வேண்டும் என்ற கருத்துதான் எனக்கு நியாபகம் வந்தது. மிக மிக அற்புதமான கவிதை. தொடர்ந்து படையுஙகள்.
அன்புடன் உமா
நெஞ்சைத் தொட்ட கவிதை...
பிரியமான பிரியசகி,
அருமையான கவிதை. படித்து முடித்தப் பின் அசையவே 5 நிமிடங்களாயிற்று.
அந்த சம்பவம் உங்க மனச எவ்வளவு தூரம் பாதிச்சிருந்தா நீங்க இப்படியொரு கவிதைய எழுதியிருப்பீங்க. இதுபோன்ற கவிதைகளை எழுதிகிட்டேயிருங்க. அப்ப தான் உங்க மனசில இருக்குற பாரமும் கொஞ்சம் குறைந்தது போலாகும். கற்பனையேயென்றாலும் நிஜத்தில் நடந்தது போல் சொல்ல ஒரு திறன் வேண்டும், அதை நீங்கள் கைவரப் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி. இதுபோன்ற அருமையான கவிதைகளுக்கு வாய்ப்பளித்த அட்மின் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
நல்ல கவிதைகள் எங்கே
ரசிக்கிறமாதிரி கவிதைகளை கொடுத்துட்டு சட்டுனு நிறுத்தியது வருத்தமாய் இருக்குது. மீன்டும் எழுதுங்க. ஆவலுடம் எதிர்பார்கிறோம்
விரைவில்
மன்னிக்கவும். நேற்றுதான் சிஸ்டம் பிரச்சனைகள், நெட் பிரச்சனை என்று எல்லாவற்றையும் சரி செய்து மீண்டும் வழக்கமான பணிகளை தொடர்ந்தோம். இன்று மீண்டும் ப்ராட்பேண்ட் பிரச்சனை. தற்போது டயல் அப்பில் தற்காலிகமாக பணி புரிகின்றோம். பக்கங்கள் திறப்பதற்கு மிகவும் நேரம் எடுக்கின்றது. எதையும் சரியாக செய்ய இயலவில்லை. நாளை பிரச்சனை சரியாகிவிடின் நேயர்கள் அனுப்பியுள்ள கவிதைகளை வெளியிடுகின்றோம்.
மனதை பிசைந்த கவிதை
உருக்கமான வரிகள் மனதை என்னவோ செய்கிறது.. மீண்டும் மீண்டும் படிக்க வைக்கின்ற அருமையான கவிதை. இதற்கு பிறகு புதிய கவிதைகள் எதுவும் வரவில்லையே என்ன காரணம்? என்னுடைய கவிதைகளை அனுப்புவது எப்படி?
Karpanai ella Kavithai
Kavithaiku poi azhakuyenbathal kuda ; poiyana varikal ellama unmai unarvin uchathil erundhu vadithaa unmai varikalou..
Eravai thavirkka mudiyadhu
Thanimaiyai thavirkalam
muyanruparungal.
Living the good life: eat right and stay healthy
Living the good life: eat right and stay healthy
Fantasticc
மிகவும் அருமையான கவிதை. நெஞ்சுக்குள் ஒரு வலி இதனை படித்த பின்பு. வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை.வாழ்த்துகள்.தொடர்ந்து எழுதுங்கள்
ப்ரியசகி,
நல்ல கவிதை.முன் பாதி புன்னகைக்கவும்,பெருமூச்சு விடவும் (ஒரு கன்னி பையன் கஷ்டம்,யாருக்கு புரியிது?) வைத்தாலும்.பின் பாதி மனதை கனமாக்கி விடுகிறது.
வாழ்த்துகள்.தொடர்ந்து எழுதுங்கள்
தனிமை இராத்திரி..
அழகான வரிகள். கவிதை முடிவு மனதைக் கனக்கவைத்துவிட்டது. வாழ்த்துக்கள் ப்ரியசகி.
- இமா க்றிஸ்
.
.
அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).
very nice. really i am
very nice. really i am crying
ப்ரியசகி
என்ன ஒரு அற்புதமான கவிதை. இத்தனை நாள் இதை படிக்காமல் எப்படி இருந்தேன். ப்ரியசகி உங்க கவிதை வரிகள் நெஞ்சை கசக்கி பிழிகின்றது. உண்மையிலே இதை அனுபவிப்பவரின் மனம் என்ன பாடுபடும். Realy superb
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
தோழி ப்ரியசகிக்கு,
ப்ரியசகி,
கண்ணை கலங்க வைத்துவிட்டது தோழி உங்கள் கவிதை.தோழி ஏனோ நான் வாய்விட்டு அழுகிரேன்.எத்தனை பெண்கள் இதை அனுபவித்துக்கொண்டிருப்பார்கள்.அப்பப்பா நினைக்கவே மனது வலிக்கிறது.