தேசத்தலைவர்கள்(63வது சுதந்திர தினவிழா)

63 வது வருட சுதந்திர தின விழா கொண்டாட போகிறோம். நாம் திருகுமரன், வ.உ.சி அவர்களின் தியாகத்தை பற்றியும் அவர்களின் நாட்டுபற்று பற்றியும் நிறைய படித்து இருக்கிறோம், கேட்டும் இருக்கிறோம். அவர் குடும்பத்தை பற்றிய இன்னும் சில செய்திகளை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
கொடி காத்த குமரன் அவர்கள் திருமண முடிந்து 3 மாதங்கள் மட்டுமே அவர் மனைவியுடன்(திருமதி. ராமாயி அம்மாள்) வாழ்ந்திருக்கிறார். அதன் பிறகு நாட்டிற்காக அவர் இன்னுயிர் துறந்தார். ஆனால் அவரின் மனைவியோ தன் கணவன் இறந்த பிறகும் தன்னந்தனியாக பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்.
திரு. வ.உ.சிதம்பரனார், இவரை பற்றியும் நாம் அறிந்திருப்போம், அறியாத ஒரு செய்தி, இவர் சுதேசி கப்பல் வாங்க நிதி திரட்டுவதற்காக மும்பை சென்று இருந்தார். கப்பலுடன் தான் வருவேன் என்ற சபதத்துடன் சென்றார். அந்த நேரத்தில் அவருடைய குழந்தைக்கு உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அவருக்கு தந்தி வந்தது ஆனால் அவர் அதையும் பொருட்படுத்தாமல் தன் வேலைகளில் மும்மரமாக செயல்பட்டு கப்பலுடன் திரும்பினார்.
அடுத்து மற்றொரு நிகழ்ச்சி, திரு. வ.உ.சி அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்றும் அதை அந்தமான் ஜெயிலில் நிறைவேற்றப்படும் என்றும் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை கேட்ட திரு. வ.உ.சி அவர்கள் சகோதரருக்கு மன நிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாக மாறினார்.
நேற்று ஒரு புத்தகத்தில் படித்த செய்தி தான் இது அதை இங்கு உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்பினேன். வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு நமது நாடு எப்படி சுதந்திரமடைந்தது என்றும் அதற்காக எத்தனை பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்றும், தண்டனைகள் அனுபவித்தார்கள் என்றும் தெரிவதில்லை அதை யாரும் அவர்களுக்கு சொல்வதும் இல்லை. இதை நம் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. தோழிகள் இதைப் போல் தாங்கள் படித்த, கேட்ட செய்திகளை இங்கே பதிந்து உங்கள் சுதந்திர தாகத்தை வெளிப்படுத்துங்களேன். வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்.

நல்ல பகிர்வு தோழி. ஆனால் எந்த புத்தகம் என்றும் குறிப்பிடுங்கள். ஒரு முறை அறுசுவை மன்ற விதிமுறைகளை படித்தால் நான் ஏன் சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள்.

நன்றி கௌரி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா நலமா? அப்படியே எடுத்து காப்பி செய்து பேஸ்ட் செய்ய தானே கூடாது படித்ததை தான் நான் என் நடையில் தான் சொல்லி இருக்கேன். அதில் ஏதுவும் தவறில்லையே விதிகளிலும் அதை தான் சொல்லி இருக்கிறார்கள். அறுசுவை என் குடும்பத்தில் ஒரு அங்கம். அட்மின் அவர்கள் ஒவ்வொரு முறையும் மன்ற விதிமுறைகளை பற்றி மற்றவர்களுக்கு சொல்வதை நான் படித்திருக்கிறேன். நான் எப்போதுமே விதையை மீற மாட்டேன்.

நன்றி கௌரி. அந்த புத்தகத்தின் பெயரையும் குறிப்பிடலாமே என்றுதான் சொன்னேன். உங்களை வேதனைப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்க பதிவைப் பாத்தவுடன் எனக்கு தோணிணது இதுதான் ;

இப்ப இளைஞர்கள் சாலைமறியல் போன்ற போராட்டம் செய்யும்போது, கலைந்து போக சொல்லி போலிஸ்காரர்கள் தடியடி நடத்துறாங்க இல்லை. அப்ப எல்லாரும் எப்படி அடி தாங்க முடியாம ஓடராங்க. இது நாம T.V ல பாத்துட்டு ஐயோ பாவம் எப்படி அடி வாங்கறாங்க நு பரிதாபப்பட்டிருக்கோம்.

நினைச்சுப்பாருங்க அந்தக் காலத்துல சுதந்திர போராட்ட வீரர்கள் மறியல் செய்யும்போது இதே மாதிரி தானே தடியடி நடந்திருக்கும். ஆனா ஒருத்தர் கூட ஓடாம அத்தனை அடியையும் தாங்கிட்டு அங்கேயே அமர்ந்திருக்காங்களே. கண்டிப்பா அந்த அடியெல்லாம் அவங்க மேலயும் நங்கு நங்கு நு தான் விழுந்திருக்கும். அவங்களுக்கும் மண்டை ஒடைஞ்சிருக்கும், ரத்தம் ஒழுகிருக்கும். ஆனா எதற்கும் பயப்படாம வலிய தாங்கிட்டு இருந்திருக்காங்கனா அவங்க மனவலிமை எப்படிபட்டதாய் இருந்திருக்கும். சுதந்திரம் என்கிற வேட்கைதானே அவங்க மனவலிமைக்கு காரணம்.

கௌரி நீங்க படிச்ச செய்திகள் பல பேருக்கு தெரிஞ்சிருக்கலாம். ஆனா சரியான சமயத்தில் ஞாபகம் படுத்துனதுக்கு உங்களைப் கண்டிப்பா பாராட்டலாம்.
இன்னும் அரிய பல விஷயங்கள் அந்தப் புத்தகத்தில இருக்கலாம். அதையும் எங்களோட பகிர்ந்துகொள்ளுங்கள். ஆவலோடு இருக்கிறேன்.

Don't Worry Be Happy.


சுதந்திரத்தை

சுதந்திரமாய் அனுபவித்து

சுத்ந்திர வர்த்தைகளை

சுதந்திரத்தோடு சொல்ல வரும்

சுதந்திர பெண் மக்காள்!

உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்து சொன்னேன் முன்னே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வ.உ.சிதம்பரனார் எனக்கு மிகவும் பிடித்த சுதந்திர போராட்ட வீரர். வ.உ.சி அவரது தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியில் வரும் பொது அவரை பார்க்க அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாருமே சிறைக்கு வரவில்லை. திரு சுப்பிரமணியம் சிவா மட்டும் தான் வந்திருந்தார். அவர் தன்னுடைய கடைசி நாட்களில் சொத்துகளை எல்லாம் இழந்து மிகவும் கஷ்ட்டபட்டார் என்றும் படிக்கும் போது எனக்கு அழுகையே வரும். வ.உ.சி தைரியமும், நாட்டுபற்றும், தன்மானமும், நினைத்ததை செய்து முடிக்க வல்ல ஆற்றலும் கொண்ட மாபெரும் தலைவர். அவரை பற்றிய வரலாற்று செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

தொலைக்காட்சியில் போடும் சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு சுகந்திரத்தை போற்றும் இன்றைய காலக்கட்டத்தில் தேசத் தலைவர்கள் என்ற தலைப்பில் அதுவும் தேச தலைவர்கள் என்றால் காந்தி, நேரு, பட்டேல், போன்றவர்கள் மட்டும் தான் என்ற திரும்ப திரும்ப நம்ப வைக்கப்படும் நேரத்தில் வ.உ.சி, குமரன், சுப்பிரமணியம் சிவா போன்றவர்கள் நினைவுப்படுத்தும் உங்கள் பதிவு அருமை.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

கௌரி நீங்க சொன்ன தகவல் சிலருக்கு தெரியாததுதான் (எனக்கும்) 63வது சுதந்திரதினத்தை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதிரிகளுக்கும் வாழ்த்துக்கள். நம் நாடு இன்னும் ஒரு சில விஷயங்களுக்கு அடிமை பட்டுகிடப்பது மாறி விரைவில் நல்லனிலைமைக்கு வர நான் ஆண்டவனை பிறார்திக்கிறேன்.

அன்புடன்
நித்யா

மேலும் சில பதிவுகள்