கர்ப்பிணிப் பெண்களின் உணவு

கற்பிணிப் பெண்கள் முதல் மாதங்களில் பிஸ்கட் வகைகள், கேக், குளிர் பானங்கள் அருந்தலாமா?

காலை உணவு அருந்தாமல் விட்டால் ஏதும் தீமை உண்டா?
(பால் மட்டும் குடித்தால்)

தயவு செய்து என்ன உணவுகள் உண்ணலாம் அல்லது கூடாது என்பதை எனக்கு உதவி செய்யுங்கள்?
(கனடா நாட்டுக்கு ஏற்ற மாதிரி)

நீங்கள் பதில் தந்தால் நான் எனது நண்பிக்கு தெரியப்படுத்துவேன்.

நன்றி

சகோதரி அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா.உங்கள் நண்பி எப்படி உள்ளார்.
பொதுவாகவே குழந்தை உண்டான உடன் நம்முடைய உடலில் நிறைய மாற்றங்கள் வரும்.வாந்தி வருவது போல் இருக்கும் ஆனால் வராது

சில சமயம் வாந்தி வந்து கொண்டே இருக்கும் எதும் சாப்பிட முடியாது சாப்பிட்டால் உடனே வாந்தி வந்துவிடும்

நம்மால் சாதாரண சமயம் இருப்பது போல் இருக்க இயலாது அதும் முதல் 3 மாதங்கள் சொல்லவே வேண்டாம் ரெம்பவும் அசதியாக இருக்கும்.

சில சமயம் அதிகமாக தூக்கம் வரும் சில சமயம் தூக்கமே வராது இன்னும் இந்த மாதிரி நிறைய இருக்கும்.

இது கஷ்டமாக இருந்தாலும் ஒரு வித சுகம் ஏன் என்றால் எல்லாவிதமான கஷ்டத்தயும் தாங்கி கொண்டுதான் ஒரு தாய் குழந்தையையை பெற்று எடுக்கிறாள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த 10 மாதம் வரை எல்லாவற்றையும் தாங்கி அவள் காத்திருந்து குழந்தையை பெற்ற பின் அந்த பிள்ளையை பார்த்தவுடன் அவளுடைய எல்லா கஷ்டமும் மறந்து போய்விடும்.

இது எல்லாம் நான் எதுக்கு உங்களிடம் சொல்கிறேன் என்றால் உங்கள் நண்பியால் சாப்பிட முடியவில்லை வாந்தி வருவது போல் இருக்கிறது என்று எதையும் சாப்பிடாமல் இருந்து விடவேண்டாம். வாந்தி வந்தால் வரட்டும் இருந்தாலும் சாப்பிடவும் சில சமயம் சாப்பிடும் போது குமட்டுதல் இருந்தால் புளிப்பானது எதையாவது சிறிது சாப்பிட்டு கொள்ள சொல்லவும். ஊறுகாய் அல்லது உங்கள் நண்பிக்கு பிடிச்சது எதுவோ அதை சாப்பிட சொல்லவும் டென்ஷனாக இருக்ககூடாது எப்பொழுதும் ரிலாக்ஸாக இருக்கனும்.

ஜூஸ் குடிக்கனும் டயர்டாக இருக்கும் போது ஜூஸ்கள் குடித்துவரலாம்,ஆரஞ்சு ஜூஸ்,குமட்டுதலுக்கு எழுமிச்சை பழத்தை நுகர்ந்து வரலாம் அதன் மணம் குமட்டுதலை குறைக்கும்.

வயிற்றை மட்டும் எப்பொழுதும் காலியாக போட்டுவிட கூடாது உள்ளே ஒரு உயிர் இருக்கிறது அதற்க்கு தேவை என்று சாப்பிட முடியாவிட்டாலும் கொஞ்சமாவது சாப்பிடனும்.

வாழைப்பழம் சாப்பிடலாம் பொதுவாக இந்த சமயத்தில் மலசிக்கல் வரும் அதனால் தினமும் இரவு படுக்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாம்.

பிஸ்கட் சாப்பிடலாம்.கேக் ,ஐஸ் க்ரீம் இது எல்லாம் அவர்களுக்கு பிடித்து இருந்தால் சாப்பிடட்டும்.ஏன் என்றால் எல்லா கர்பிணி பெண்களுக்கும் ஒரே போன்று எல்லாம் பிடித்து விடாது.

நான் குழந்தை உண்டாகி இருக்கும் போது நிறைய ஜூஸ் ,ஐஸ் க்ரீம் தான் சாப்பிட்டேன். ஆனால் என் தோழி ஒருவர் குழந்தை உண்டாகி இருக்கும் போது இதை எல்லாம் தொடவே மாட்டார் வாந்தி வருவது போல் இருக்குது என்பார்.அதனால் உங்கள் தோழிக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடட்டும்.

சிலருக்கு இனிப்பாகவே பிடிக்கும்.சிலருக்கு காரமாகவே பிடிக்கும்.இன்னும் சிலருக்கு புளிப்பாகவே பிடிக்கும் .

அதனால் உங்கள் தோழியை வயிற்றை மட்டும் காலியாக வைக்க வேண்டாம்.காலையில் பால் மட்டும் குடித்தால் போதாது கொஞ்சமாவது டிபன் ஏதாவது சாப்பிட சொல்லவும்.

அவர்களுக்கு எது பிடிக்கும் காரமாகவா அல்லது இனிப்பாகவா அல்லது புளிப்பாகாவா என்று சொல்லவும் நான் அதுக்கு தகுந்தது போல் எது எல்லாம் சப்பிடலாம் என்று சொல்கிறேன்.

சாப்பிட கூடாது என்றால் எனக்கு தெரிந்தது அன்னாசி பழமும்,முந்திரி பழமும் (க்ரேப்ஸ்) ,பேரீதம் பழம் சூடு என்பார்கள் அதாவது மலச்சிக்கல் வரும்

மாதுளை பழம் சாப்பிடலாம் பால் நிறைய குடிக்கவும் முக்கியமாக தண்ணீர் அதிகமாக அருந்தவும்.

வயிற்றை சாப்பிடாமல் காயப்போட்டால் வயிற்றுவலி வந்து விடும்.பசிக்கவிடாமல் எதையாவது சாப்பிடவும்.

சாப்பிட நேரம் ஆகிவிட்டால் இடையில் பிஸ்கட்டாவது சாப்பிடனும் .இல்லை என்றால் வாயு தொல்லை ஏற்பட்டு விடும் அதனால் கவனமாக இருக்க சொல்லவும்.

எனக்கு தெரிந்ததை சொல்லி விட்டேன் மேலும் எதுவும் சந்தேகம் என்றால் கேட்கவும்.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

நான் நலம்

என் நண்பி முந்திரியப்பழம் சாப்பிடுகிறவா. நீங்கள் கூறி இருக்கிறீர்கள் சாப்பிடக்கூடாது என்று. ஏன் கூடாது என்பதை தயவு செய்து கூறுங்கள்.

என் நண்பிக்கு இப்போது 26 வயது. அவாவுக்கு போன வருடம் கற்பம் தரித்து 3 மாதம் ஆகியவுடன் ultersound எடுத்துப் பார்க்கும் போது குழந்தைக்கு heart beat இல்லை என்பது தெரிய வந்தது.
அதனால் நண்பி இப்போது திரும்பவும் கற்பம் தரித்துள்ளார். அதனால் அவா என்ன என்ன சாப்பிடுவது என்று குழம்பிய நிலையில் உள்ளார்.
அது தான் உங்கள் உதவியை நாடியுள்ளேன்.

நன்றி

சகோதரி அவர்களுக்கு இப்பொழுதுதான் உங்கள் கேள்வியை பார்தேன் எனக்கு 2.5 ஒரு பையன் இருக்கிறான் அவனை வைத்துக்கொண்டு எதுவும் டைப் பண்ண இயலாது அதனால் அவன் தூங்கும் போது தான் அறுசுவைக்கே என்னால் வரமுடியும் அதனால் தவறாக நினைக்க வேண்டாம்.

நான் குழந்தை உண்டாகி இருக்கும் சமயம் முந்திரி பழம் ஏன் சாப்பிடக்கூடாது என்று நான் என் அம்மாவிடம் சொல்லி டாக்டரிடம் கேட்கசொன்னேன் அப்பொழுது டாக்டர் அவர்கள் (இந்தியாவில் என் அம்மா இருக்கிறார்கள் நான் ஜப்பானில் இருக்கிறேன் ) திராட்சை பழத்தில் நேரடியாக பூச்சி மருந்துகள் தெளிக்க படுகிறது அதனால் கர்ப்பம் தரித்திருப்பவர்கள் அதை சாப்பிடக்கூடாது என்று சொன்னார்களாம் அதனால் நான் சப்பிடுவதை நிறுத்திவிட்டேன் உங்கள் நண்பியையும் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவும்.

அப்புறம் உங்கள் நண்பிக்கு முதலில் 3 மாதம் கர்ப்பம் தரித்து அவர்களுக்கு இல்லாமல் போனது பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள் எனக்கு தெரிந்த நண்பி இங்கு( ஜப்பானில்)உங்கள் நண்பியை போலதான் 3 மதம் கர்ப்பம் தரித்து குழந்தைக்கு இதய துடிப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள் இப்பொழுது 5 வருடம் கழித்து அவர்கள் திரும்பவும் கர்ப்பம் தரித்து உள்ளார்கள் வயது 35 இப்பொழுது 8 மாதம் ஆகிறது இன்றுதான் அவர்கள் சொந்த நாடான கொழும்புவுக்கு போய் இருக்கிறார்கள்.இந்த குழந்தை நன்றாக இருக்கிறது எதுவும் பிரச்சனை இல்லை பெண் குழந்தை என்பதும் தெரிந்து விட்டது அவர்கள் சதோஷமாக பிள்ளை பெற நீங்கள் வேண்டிக்கொள்ளவும்.

இது ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் உங்கள் நண்பி பழையதையே நினைத்து இதுவும் அதே போல் ஆகிவிடுமோ என்று கவலைபட்டு வீணான டென்ஷனை உண்டாக்கி கொள்ள வேண்டாம் ஏன் என்றால் பயம் இருக்கும் அவர்களுக்கு நீங்கள் தான் எதுக்கும் கவலை படக்கூடாது தைரியமாக இரு என்று சொல்லவும். நல்ல சாப்பிடும்படி சொல்லவும்.

எனது நண்பி ஒரே பழையதை நினைத்து அதையே என்னிடம் கவலைப்படுவார் நான் தினமும் அவர்களுக்கு போனில் எதையும் நினைக்க வேண்டாம் கவலை படவேண்டாம் அதை மறந்து விடுங்கள் நீங்கள் இப்பொழுதுதான் புதிதாக கர்ப்பம் தரித்து இருப்பதை போல சந்தோஷமாக இருங்கள் என்று சொல்வேன் .அவர்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்கு வயது கிடையாது இருந்தாலும் நான் அவர்களுக்கு எனக்கு தெரிந்ததை சொல்லி கொடுப்பேன் எனக்கும் அவர்களுக்கும் உள்ள ஊர் 2 மணி நேரம் டிராவல் பண்ணனும் அதனால் அடிக்கடி பார்க்க முடியாது போனில்தான் பேசிகொள்வேன்.ஆனால் கண்டிப்ப எனக்கு டைம் கிடைக்கும் போது அவர்கள் வீட்டுக்கு போய் பார்த்து விட்டுதான் வருவேன்.

இது ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நீங்கள் உங்கள் நண்பி என்றுதான் சொல்லி இருக்கிறீர்கள் அதனால் அவர்கள் அருகிலே எப்பவும் உங்களால் இருக்க முடியாது இருந்தாலும் உங்களால் முடிந்ததை அவர்களுக்கு செய்யவும் முக்கியமாக தைரியம் அதை நீங்கள்தான் அவர்களுக்கு கொடுக்கனும் அவர்கள் கணவரிடமும் சொல்லி நல்ல படியாக பார்த்துக்கொள்ள சொல்லவும் 3 மாதம் வரை நல்ல ரெஸ்டில் இருந்தால் நல்லது அதன் பிறகு பயப்பட தேவையில்லை.

பூண்டு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம். கொஞ்ச நாளைக்கு வாயு சாமான் எதுவும் சாப்பிட வேண்டாம் அதாவது உருளை கிழங்கு,வாழைக்காய்.சிப்ஸ் அய்டம் இது மாதிரி,

வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

நன்றி

வணக்கம் தாரணி, சகோதரிகள் கூறியதுபோல் உங்கள் நண்பியை பழையதை மறந்து,புதிதாக கர்ப்பம் தரித்ததாக நினைத்து கொள்ளுமாறு கூறவும்.எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்[காரணம் எனக்கும் கனடாவில் போனவருடம் குழந்தை கிடைத்தது] மாதுளம்பழம் சாப்பிட்டால் வாந்திதன்மை குறைவாக இருக்கும், அதனைவிட கேக் போன்ற இனிப்புப்பொருட்களை குறைத்து சாப்பிடுவது நன்று, காரணம் பின்னர்[7ம்மாதம்] இரத்தத்தில் சீனிச்சத்து கூடிவிட்டது என்று கவலைப்படவேண்டி வரும்[நான் அனுபவித்தபடியினால் கூறுகின்றேன்] எனக்கு தெரிந்ததை நேரம்கிடைக்கும் பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.நன்றி.

THuSHI

நன்றி சகோதரி !

உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி சகோதரி
என் கேள்விக்கு விரைவில் பதில் அனுப்பியதுக்கு நன்றி நன்றி

வணக்கம் lakshana சகோதரி

உங்கள் அறிவுரைகளையும் என் நண்பியிடம் கூறியுள்ளேன். நன்றி சகோதரி!

Hi All,

Is it advisable to travel to India(USA-India) during pregnancy(4 months). Kindly Please give me suggestions.

சகோதரி அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா.4 மாதம் என்று சொல்லி இருக்கிறீர்கள்.என்னுடைய வாழ்த்துக்கள்.

நான் எனது அனுபவத்தை பற்றி கூறுகிறேன் நான் ஜப்பானில் இருந்து 3 மாதத்தில் இந்தியாவிற்க்கு பயணம் செய்தேன்.டாக்டர் டிராவல் பண்ணலாம் என்றார்கள் ஆனால் போகாமல் இருந்திருக்கலாம் எப்படியும் அப்பொழுது விசா முடிந்து விட்டது இந்தியா போய்விட்டு தான் விசாவை புது பிச்சிவிட்டு வரனும் என்கிற நிலமை எப்படியும் போய் ஆக வேண்டும் வேற வலி இல்லை அதனால் போனோம் ஆனால் இந்தியா போய்விட்ட பின்னடி நான் பட்ட வேதனைகள் கொஞ்சம் அல்ல உங்களை பயமுறுத்துவதற்க்காக சொல்லவில்லை.

இத்தனைக்கும் நான் ஹாங்காங் போய் 2 நாள் ரெஸ்ட் எடுத்தேன் திரும்ப சிங்கப்பூர் போய் 1 நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டுதான் இந்தியா போனேன்.

நான் அங்கு போனதற்க்கு பின்னாடி திரும்ப ஜப்பான் வர முடியாத நிலமை ஆகிவிட்டது ப்ளைட்டில் டிராவல் பண்ணியதால் ப்ளீடிங் ஆகிவிட்டது ஊருக்கு போனதில் இருந்து குழந்தை பெரும்வரை பெட் ரெஸ்டில் தான் இருக்க வேண்டும் என்று டாகடர்கள் சொல்லி விட்டார்கள்.திரும்பவும் ப்ளைட்டில் டிராவல் பண்ணக்கூடாது என்றும் சொல்லி விட்டார்கள். குழந்தை பெற்றதற்க்கு பின்னாடிதான் திரும்ப ஜப்பான் வந்தேன் .

இது ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நீங்கள் கண்டிப்பாக இந்தியா போகத்தான் வேண்டும் என்றால் வேற வலி இல்லை என்றால் போகத்தான் வேண்டும் என்றால் போய்விட்டு வரவும் அதும் ஒரே சமயம் டிராவல் ப்ண்ணாமல் ரெஸ்ட் எடுத்து சொல்லலாம்.

அப்படி போகனும்னு இப்ப அவசியம் இல்லை என்றால் நான் சொல்றது போகாமல் இருப்பது தான் நல்லது நீங்கள் யோசித்துக்கொள்ளவும்.

நன்றி

hi seyedkatheeja

Thankyou for your suggestion and writing me your experience. Iam a bit scared to travel because this is my frist pregnancy and I dont want to take risk.

thanks
Lekha

Because now pregnent now in 5 weeks 4days. I want to the result what our friend asked above same query am also waiting the for the same plz. help me.

மேலும் சில பதிவுகள்