இன்றைய ஸ்பெஷல் டாபிக்

இன்றைய ஸ்பெஷல் என்றதும் எல்லோரும் சமையலுன்னு நினைத்தீர்களா? அப்படின்னா ஏமாந்துட்டீங்கப்பா,
நானும் ஒரு இழை தொடங்கலாம்ன்னு தோணிச்சு, அதனாலதான்.
தினமும் நமக்கு நாமே செய்த ஏதாவது ஒரு செயல் மிகவும் பெருமையா இருக்கும் இல்லையா? அந்த மாதிரி தினமும் செய்வதில் பிடித்ததை நாம் நம் அறுசுவை தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளதான் இந்த இழை. தயவு செய்து இங்கும் உங்களது பதிவுகளை வந்து போடுங்கோகோகோகோ

கௌரி நான் பாசாகி 10 நாள் ஆச்சு, லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டான உங்க வாழ்த்துக்கு நன்றி, ஏற்கனவே எல்லாருக்கும் அல்வா கொடுத்திட்டேனே. உங்களுக்கும் தருகிறேன்

அன்புடன்
பவித்ரா

ஆஹா ரொம்பா லேட்டா சொல்லிட்டனோ, சரி சரி இந்த வாழ்த்தையும் வச்சிக்கோங்க பவி. ஆனா எனக்கு பழைய அல்வா வேண்டாம்.

இன்றைய என்னோட ஸ்பெஷல் என்ன தெரியுமா. எல்லாரும் ஆர்குட்டு
ப்ளாக்ஸ்பாட்டுனெல்லாம் சொல்ராளே என்னதுன்னு போயி எட்டிப்பார்த்தேன்.
சமத்தா ரெண்டுலயும் பேர்பதிவும்( யாரையும் கேக்காம) நானே பண்ணிண்டேன்.
அப்ப்ரமா அதுல என்ன செய்யரதுன்னு புரியாம திரு,திரு தான். நீதான் ஏதானும் சொல்லேன்

நல்ல விஷயம் தான், ஆனா அதைப்பத்தி இங்கு வேண்டாம், நீங்க ஆஷிக்கோட கம்ப்யூட்டர்- 2 வில் கேளுங்கள் இல்லையென்றால் நான் சாயங்காலம் உங்களுக்கு இதை பற்றி தனியா சொல்கிறேன். என்னோட மெயில் ஐடிக்கு உங்களோட ஆர்குட் ஐடிய அனுப்பி வைங்க, இங்க வேண்டாம். அப்புறம் பிளாக் பத்தி I HAVE NO IDEA மாமி தான் சொல்லணும்

அன்புடன்
பவித்ரா

உடனே பதில் தந்ததுக்கு நன்றி மெயில்ல காண்டாக்ட் பன்ரேன்


நேக்கு தெரியாம போச்செ!
தெரிஞ்சுருந்தா அன்பூ ஆம்ஸ்க்கு
ஒரு கூடை ரெட் பிளம்ஸ் கொரியர் பண்ணிருப்பேனே.
(இப்போ எங்க ஊர்ல அதான் சீப் ஹி ஹி ஹி ............)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வாழ்த்துக்களுக்கு நன்றி கௌரி.

உண்மையிலேயே பாஸாயிட்டேன். அதான் சொல்லாம இருக்க முடியாததால் இந்த இழையை கொண்டுவந்தேன்.

மாமி!
காலைல தானே சொன்னேன். இப்பவே அட்ரஸ் தரேன். உடனே கத்தி’ல போட்டுவிடுங்க. பிளைட்ல பறந்து வந்துறும். இப்ப எங்க ஊர்ல அதான் காஸ்ட்லி ஹி..ஹி....ஹி

பவி,கௌரி
B.A (economics)-1 year ல :)
மெட்ராஸ் யுனிவர்சிடி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


ஆமினா அவர்கள்
B.A (economics)-
மெட்ராஸ் யுனிவர்சிடி ல
பாஸாயுட்டாங்கோ! யுட்டாங்கோ! ங்கோ!(ஹி ஹி ஒன்னும்மில்லை எக்கோ)

எல்லாரும் ஸ்வீட் எடுங்கோ!
கொண்டாடுங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நீங்க வெற்றிகரமா B.A. (Economics) முடிக்க என் வாழ்த்துக்கள்,

ஆனால், அதோடு நின்று விடாதீர்கள், இன்றைய காலகட்டத்தில் Economicsக்கு நல்ல value இருக்கு

அன்புடன்
பவித்ரா

உங்க பதிவை இப்ப தான் பார்த்தேன்.

நீங்க சொன்னது கேட்டு எனக்கு அப்படியே புல்லரிக்குது தெரியுமா?

என் படிப்பை கேட்டி பாஸிட்டிவா சொன்ன முதல் ஆள் நீங்க தான் :)

ஏன்னா நிறைய பேர் திட்டுனாங்க:(
ஏன் இந்த பாடம் எடுத்தன்னு!

சின்ன வயசுல இருந்தே எனக்கு புடிச்ச பாடம் அது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்