பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க இங்கே வாருங்கள்

அனைத்து அறுசுவை தோழிகள், தோழர்கள், சகோதர, சகோதரிகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்கலாம். தனியாக பெயர் போட்டு ஒவ்வொருவரின் பிறந்த நாளுக்கு ஒரு ஒரு இழை தனியாக ஆரம்பித்தால் அதில் அதிக பதிவுகள் வருவதில்லை, அது மட்டுமன்றி அந்த ஒரு நாள் மட்டும் தான் அந்த இழைக்கு வேலை, மற்ற தினங்களில் அந்த இழை தூங்கி கொண்டு தான் இருக்கிறது.

எனவே பிறந்த நாள் வாழ்த்தை இங்கே தெரிவிக்கலாம் வாங்க.

அன்புக்குரிய ராதாக்காவுக்கு (30.8.2010)

என் இனிய பிற்ந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கணவர் மற்றும் குழந்தையோடு நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
பவித்ரா

நல்லாருக்கியா? நல்லா யூஸ்ஃபுல்லான இழை இதுலயே இனி எல்லாரோட பிறந்தநாளைக்கும் விஸ் பன்னிரலாம் தோழிகளே ஓகேவா???

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஓ பவி அப்படியா சொன்னதுக்கு நன்றிடா... ராதா மேடம் உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்... என்னைக்கும் எல்லா நாட்களும் சந்தோஷமாக இருக்க என் பிரார்த்தனைகள் என்னைக்கும் உங்களுக்கு உண்டு...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ராதா மேடம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பவி நல்ல இழைபா அடுத்த மாதம்தான் நம் அருசுவை தோழிகள் நிறையபேருக்கு பிறந்தநாள் வருது வாழ்த்திடுவோம்.

அன்புடன்
நித்யா

அருமை சகோதரி ராதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் வளமும் நலமும் பெற்று ஆனந்த வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவன் ஹரிஹரசுதனை வேண்டுகிறேன்.

அன்புடன்
THAVAM

அருமை சகோதரி ராதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் வளமும் நலமும் பெற்று ஆனந்த வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவன் ஹரிஹரசுதனை வேண்டுகிறேன். பிறந்த நாள் வாழ்த்துகளுக்கென்று தனி த்ரெட் ஆரம்பித்து உதவிய சகோதரி பவித்ராவுக்கு நன்றிகள்.

அன்புடன்
THAVAM

ராதா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலமும் பெற்று வளமோடு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Don't Worry Be Happy.


பட்டி நடுவருகு

பிறந்த நாள் பரிசாக

பட்டாடை வாங்க

பட்டினம் போனேன்!

பார்ப்போர்கள் சொன்னார்கள்! கவிதை

பாடுங்கள் என்றேதான்!

பாடினோம் யாம் உமக்கு!

ப(பா)ட்டுதான் என நினைத்து!

பல்லாண்டு பல்லாண்டு! வாழிய நீர் எம் தோழி!

பலகோடி நூறாயிரம் வருடமே வாழியவே!

என்பதே என் வாழ்த்து!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அன்புத்தோழி ராதாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கு இந்த ஆண்டு பலவெற்றிகள்,பலசந்தோஷங்கள் நிறைந்த ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

"கலையாத கல்வி,குறையாத வயதும்,
கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத கணவனும்,
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும்,மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியும்,
கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும்."

இந்த 16 செல்வங்களும் பெற்று வாழ்க நீவீர் வாழியவே.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

யாருக்கோ இன்று பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறார்களே நாமும் பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் என்று வந்தால் இங்கு என்னடா என்றால் அனைவரும் எனக்கு தான் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளீா்கள்.....ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... நன்றி பவி....
தோழிகள் லதாவினீ, நித்யா,ஹேமா, ஜெயலஷ்மி,மற்றும் அன்புமாமி மற்றும் தவமணி அண்ணா அனைவரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றிப்பா............இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல..........தேங்க்யு வெரி மச்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்