வளைகாப்பு

ஹாய் அக்கா,
எனக்கு இப்போ ஆறு மாசம்.அடுத்த மாதம் வளைகாப்பு வைப்பாங்க.
என்ன மாதிரி வளையல்,மெகந்தி வேற சிம்பிள் மேக் அப் போடலாம் .


அரும பொண்ணுக்கு வளை காப்பு!

அத்தான் மொகத்துல புன்சிரிப்பு!

அறுசுவைக்கே கலகலப்பு!

அல்லாரும் வருவாங்க இங்கேப்பு!

தந்தானே தன தானெ! தான தையனா தனதானே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் சுமதி முதலில் வாழ்த்துக்கள்.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. நம்ம தோழிகள் வந்து கண்டிப்பா பதிவு போடுவாங்க.. எனக்கு அத பத்தி அதிகம் தெரியாது...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மாமி பெரியவா நீங்க மொத பதிவ போடனும்னுதான் வெயிட்டிங்க். வளைகாப்பு மேட்டர் இல்லையா;-)

வளைகாப்புக்கு நல்லா ஸ்ட்ராங்கான கண்ணாடி வளையல் வாங்கிக்குங்க. டெலிவரி வரைக்கும் ஒடையாம இருக்கணும்பாங்க. உடையாம இருக்க நாம கேர்ஃபுல்லா இருப்போம் இல்லையா அதுக்குதான்.

மெகந்தி கோன்ல கிடைக்கும். அரைச்சுப் போட்டாதான் குளிர்ச்சி. நம்ம வனிதா நிறையா நீங்களும் செய்யலாம் பகுதியில கொடுத்து இருக்காங்க பாருங்க.

மேக்கப், நான் நல்லா ஹெவி மேக்கப்தான் போட்டேன். ஏன்னா அப்புறம் நமக்கு அலங்கார மேக்கப் போட சான்ஸ் கிடைக்காது பாருங்க.
நெத்திச்சுட்டி, ஒட்டியாணம், வங்கி இன்னும் கல்யாணத்துல என்னெல்லாம் போடாம மிஸ் பண்ணிங்களோ எல்லாத்தையும் போட்டுக்குங்க.

ஃபோட்டோக்கு அழகா தெரிஞ்சா போதும்.

அரோக்கியமான அழகான குழந்தை பெற வாழ்த்துகள்

Don't Worry Be Happy.

எல்லோருக்கும் நன்றி

சுமதி, முதன்முதல் தாயாகப் போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். வளைகாப்பு அன்று உங்கள் உடல்நிலை பொறுத்து அழகு ஆபரணங்கள் மேக்கப் போட்டுக் கொள்ளவும். ஏனென்றால், என்னுடைய சீமந்தம் அன்று, எனக்கு உடம்பெல்லாம் ஒரு அலர்ஜி போன்று வந்து மிகவும் சிரமப்பட்டேன். பட்டுப்புடவை கனம் வேறு, மேக்கப் ஒரு பக்கம். எப்போதடா நிகழ்ச்சி முடியும் என்று காத்திருந்து வீட்டிற்கு போனவுடன் வளையல் முதல் கொண்டு அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து ஒரு சாங்கியத்திற்காக 2 கண்ணாடி வளையல்களை கையில் போட்டு வைத்தேன். அதிக கண்ணாடி வளையல்கள் போடும் போது, நீங்கள் ஒரு பக்கமாக கையை ஊன்றி படுக்கும்போது சிரமமாக இருக்கும். வளையல் உடைந்து கையை கிழிக்கும் அபாயமும் உண்டு எனவே உங்கள் உடல்நிலை வசதிப்படி, நீங்கள் மேக்கப், வளையல் மற்றும் இன்னபிற சாதனங்களை போட்டுக் கொள்ளவும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுமதி,
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஜெயலக்ஷ்மியும்,கல்பனாவும் அழகா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. என்னுடைய வளைகாப்புக்கு நான் ஒட்டியானம் தவிர அனைத்து நகைகளும் போட்டுக் கொண்டேன். பிறகு இந்த வாய்ப்பு அமையாது அல்லவா? function சில மணி நேரங்கள் தானே நடக்கும், அதனால் சிரமமாக இருக்காது.

உங்கள் வளையல் சத்ததை, வயிற்றில் இருக்கும் உங்கள் குழந்தை கேட்டுக் கொண்டே இருக்கும் என்று சொல்லுவார்கள்.
அதனால் கண்ணாடி வளையலை போட்டுக் கொண்டே இருங்கள்.
தலைக்கு செய்யும் எல்லா அலங்காரங்களும் செய்து கொள்ளலாம். சடை தைப்பது, பில்லை, நெத்திச்சுட்டி, ஆரம், வளையல்கள், கொலுசு எல்லாமே அணிந்து கொள்ளுங்கள். மேக் அப் போட்டுக் கொள்வது உங்கள் விருப்பம். எளிமையாக போட்டுக் கொண்டால் நல்லாயிருக்கும்.

மேலும் சில பதிவுகள்