முதலாம் பிறந்த நாள்......எப்படி கொண்டாடலாம்????

என் மகளுக்கு முதலாம் பிறந்த நாள். நாங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இந்தியா என்ற தீம் வைக்கலாம் என்றுள்ளோம். சுவரலங்காரம் புடவை வைத்து செய்யலாம் என்று முடிவு செய்துள்ளோம். அப்புறம் கேக் மயில் அல்லது புலி அல்லது தாமரை வடிவம். பலூன் எல்லாம் மூவர்ணம் தான். புடவை வைத்து எப்படி எல்லாம் (wall decorations) அலங்காரம் செய்யலாம் என்று சொல்லுங்கள். என்ன மாதிரியான பொழுதுபோக்கு விளையாட்டு வைக்கலாம். மேலும் நீங்கள் எப்படி உங்களின் குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடினீர்கள் என்று பகிர்ந்து கொள்ளுங்கள்.

லாவண்யா

லாவண்யா எப்படிருகீங்க? உங்களுடன் பேசி ரொம்ப நாளாச்சு.நீங்க இப்போ தான் பிரசவத்துக்கு போறேன்னு சொன்ன மாதிரி இருக்கு அதுக்குள்ளே பிறந்த நாள் வந்துடுச்சா!!!!
பாப்பா பேரு என்ன?
சரி விஷயத்துக்கு வரேன்... நீங்களே அழகா இன்விடேஷன் பிரிபேர் பண்ணுங்க, அதை கொடுத்து எல்லோரையும்(எங்களையும்) இன்வைட் பண்ணுங்க.அதுல பாப்பாவோட அழகான சேட்டைகளை படமா எடுத்து ஓட்டுங்க. Bow வையுங்க.
வீட்டுல புடவையை ஒரே பக்கமா கொசுவம் போல் படித்து ஒரு முனைய சுவரில் பின் பண்ணிட்டு மறுமுனையை இரண்டு பக்கமும் விரிச்சு தனி தனியாக பின் பண்ணிடுங்க இது ட்சைனர் சேரி இருந்தா நல்ல இருக்கும்.
மூன்று கலர் பலூன் வாங்கி ஊதி சேரி களுக்கு இடையில ஓட்டுங்க. பலூனும் வாசகங்கள் பதித்ததா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

கேக் நீங்களே செய்றதா இருந்தா உங்க இஷ்டம் போல பூந்து விளையாடுங்க அதுல எனக்கு அனுபவமே இல்லை.
குழந்தைகளுக்கு நிறைய கேம்ஸ் வால்மார்ட் போன்ற இடங்களில் நீங்க பார்டி சப்ளைஸ் இருக்கும் இடத்தில் பார்தீங்கனா நிறைய இருக்கும். அப்புறம் உங்களுக்கு தெரிஞ்ச வேறு சின்ன கேம்ஸ், பினாட்டா(சாக்லேட் கட்டி ஒரு பொம்மையில உரி போல அடிக்க செய்தல்) இதெல்லாம் செய்யலாம். அமெரிகன்ஸ் ஃபேஸ் பெயிண்டிங்க்ஸ் வைப்பாங்க. நீங்க இந்திய முறைப்படி ஹென்னா ஆர்டிஸ்ட் வைக்கறதுன்னா வைக்கலாம்.
அப்புறம் பார்ட்டிக்கு வரும் குழந்தைகளுக்கு மறக்காம சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள்,சாக்லேட்ஸ் போட்டு ஒரு கிஃப்ட் கொடுத்துடுங்க.
இன்னும் நிறைய இருக்கு...யோசிச்சு சொல்றேன்.

ஆமா சின்ன குழந்தைய வச்சிட்டு கிருஷ்ண ஜெயந்திக்கே ஒரு கலக்கு கலக்கிடீங்கபோலருக்கு நான் உங்க மெனுவை பார்த்துட்டனே!!! பிறந்த நாள் பார்ட்டிக்கு என்ன ஸ்பெஷல் கட்டாயம் என்னை கூப்பிடுங்க...........உங்க சமையல் வேற வித்தியாசம் வித்தியாசமா கலக்குவீங்க.........எனக்கு நினைச்சு பார்க்கவே ஆசையாயிருக்கு லாவண்யா.........

ஆமாம் உமா....இப்போ தான் போன மாதிரி இருந்துச்சி.....ஒரு வருடம் போயே போச்சு.....
உங்க ஐடியா எல்லாமே சூப்பர்....நானும் சாரியை அப்படிதான் பின் பண்ணலாம் என்று யோசித்தேன். வளையல் வைத்து ஏதாவது செய்யலாமா?
ஹென்னா பைண்டிங் ஐடியா தூள்......பினியாடா கட்டாயம் உண்டு.....குடி பாக்சும் (goody bags) உண்டு....
நான் கேக் எல்லாம் செய்து வரவங்களை டெஸ்ட் பண்ண விரும்பலை.....ஆர்டர் தான் பண்ண போறேன்....
குழந்தை இருகிறதால கிருஷ்ணா ஜெயந்திக்கு செய்யனும்னு செய்தேன். அறுசுவை தோழிகள் இல்லாமலா.....எல்லோரையும் கூப்பிட்டா போச்சு.....நீங்க வேற பக்கத்துலே இருக்கீங்க.....
வேற ஐடியா ஏதாவது தோணினாலும் சொல்லுங்க.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பார்ட்டி காப்ஸ்... வாங்காமல் விதம் விதமாகச் செய்து கொள்ளலாம், நேரு தொப்பி, பாரதி தலைப்பாகை, மகாராஜா தலைப்பாகை, மணிமுடி இந்தமாதிரி அட்டையில் செய்யலாம்.

முகமூடிகள் கூட, இந்தியா தொடர்பான பறவைகள் விலங்குகளின் முகங்கள் வெட்டி எலாஸ்டிக் போட்டு எடுக்கலாம்.

கிஃப்ட் பாக்ஸ், கொடி வர்ணங்களில் கலர் கடதாசியில் செய்யலாம். கான்ஃபிடி எழுத்துக்கள் கிடைக்குமானால் குழந்தை பெயர் / தாங்யூ / தேதி இப்படி ஒட்டலாம். பழைய முத்திரைகள் ஒட்டி அழகு படுத்தலாம்.

விரும்பினால் ஸ்டென்சில் தயார் செய்து கொண்டு ஒவ்வொரு பையாக அடித்து எடுக்கலாம். அதிகம் தேவை இராது இல்லையா?

இன்னொரு யோசனை.. காகிதத்தில் இந்திய நாணயங்களை பென்சில் பின்பக்கம் அல்லது கடும் வர்ண க்ரயான் கொண்டு பரவலாக ட்ரேஸ் செய்து கொள்ளுங்கள். பிறகு தேவையான வர்ணக் கடதாசிகளில் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு அன்பளிப்புப் பைகள் செய்யலாம். இந்தியா தொடர்பான படங்கள் உள்ள கிஃப்ட்ராப்ஸ் கிடைக்கும் இல்லையா? அப்படிக் கிடைத்தாலும் இதற்குப் பொருத்தமாக இருக்கும், சுலபமாகவும் இருக்கும்.

அன்பளிப்புகள் கூட பார்த்துப் பொருத்தமாகத் தெரிவு செய்துகொள்ளுங்கள்.

இங்கு நியூசிலாந்து / அவுஸ்திரேலிய நாணயங்கள் போல அமைந்த சாக்லேட்டுகள் கிடைக்கும். அப்படி இந்திய நாணயங்கள் கிடைக்குமா! இலங்கையில் நாணயங்கள் வடிவில் இனிப்புகள் கிடைக்கும். அப்படி ஏதாவது கிடைத்தால் பார்ட்டிக்குப் பொருத்தமாக இருக்கும்.

நீங்களே பேக் செய்வீர்களானால் ஒரு காலி tincan எடுத்து இந்தியா வடிவத்தில் நெளித்து எடுத்து குக்கி கட்டராகப் பயன்படுத்தி குக்கீஸ் பேக் செய்யலாம்.

என்ன சிற்றுண்டிகள் செய்யப் போகிறீர்கள்?

விளையாட்டுக்கள்,,, இந்தியாவில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகள்.. நிறைய இருக்குமே. ;) இதெல்லாம் எனக்குத் தெரியாது சொல்ல. ம்.. குளம்கரை, சங்கிலிவேலி விளையாடுவாங்களே அப்படி ஏதாவது.

பொழுதுபோக்குகள்... நீங்கள் அழைக்க இருக்கும் குழந்தைகள் எந்த வயதுக்குள் இருப்பார்கள்? காகிதத்தில் பெல்ட்(belt) / சங்கிலி இப்படி சுலபமாகச் செய்யக் கூடிய க்ராஃப்ட்ஸ் செய்யவைக்கலாம். போட்டி போல உட்கார்ந்து செய்வார்கள். ஒரு பெரியவர் உட்கார்ந்து மேற்பார்வை செய்தால் போதும்.

‍- இமா க்றிஸ்

இமாம்மா அருமையான யோசனைகள். இதுக்கு தான் அனுபவசாலிகள் வேண்டும்னு சொல்றது. நீங்கள் கொடுத்த யோசனை எல்லாம் பார்த்தாலே பார்ட்டி மூட் வருது. இதெல்லாம் படிக்கும் போது தான் தெரியுது எவ்ளோ வேலை செய்ய வேண்டும் என்பது......இந்த தீம் கொஞ்சம் இல்லை நிறையவே வேலை வாங்கும் போல.....இருந்தாலும் பரவாயில்லை....எல்லோரையும் மாதிரி முதல் பிறந்தநாளுக்கு கார்ட்டூன் தீம் வைக்க இஷ்டம் இல்லை.....
உங்களின் இந்த அன்பான யோசனைகளுக்கு நன்றி.....மேலும் எதாவது தோணினாலும் கூறுங்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா, இமாம்மா நிறைய சொல்லிட்டாங்க....இதைவிட வேற ஏதாவது ஐடியா கேட்பீங்க!!! மலைச்சுபோயிடீங்க போலிருக்கே!!!
சரி பாப்பா பேரு என்னன்னு கேட்டேன்? எப்போ பிறந்தநாள் பார்டி எல்லாம்?

நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட். இம்மாம்மா எல்லாத்தையும் கவர் பண்ணிடாங்க. என் பொண்ணு பேரு ஸ்ரீரம்யா. பார்ட்டி எல்லாம் அக்டோபர் கடைசிலே அல்லது நவம்பர் முதல் வாரத்தில்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அது ஒன்றும் பெரிய வேலை இல்லை லாவண்யா. திட்டமிடல் தான் பெரிதாக இருக்கும். ஆரம்பித்தால் கடகடவென்று வேலை முடிந்து விடும். இதில் ஏதாவது ஒன்றில் மேலதிக விபரம் வேண்டுமானால் கேளுங்கள். (அப்பாடா! :-) அட்மின் சார், நோட் திஸ்.)

வேறு ஐடியா... வெளிநாடு என்பதால் எது பண்ணினாலும் கேள்வி கேட்க ஆட்கள் இருப்பார்கள், பதில் ரெடியாக இருக்க வேண்டும். ;) கிஃப்ட் பாக்ஸ் கைவினைப் பகுதியில் இருக்கும், பாருங்கள்.

வருவது எல்லோரும் இந்தியக் குழந்தைகளாக இருந்தால் எளிமையாக குட்டி க்விஸ் (மூன்றில் ஒரு விடை தெரிவது போல் வேண்டுமானாலும்) வைக்கலாம்.

முதலாவது பிறந்தநாள் ஒருமுறைதானே வரும். ;) கலக்குங்க.

‍- இமா க்றிஸ்

இதை முதலில் செய்ய ஆரம்பியுங்க. நான் பின்னேரம் வந்து பேசுகிறேன். ;)

‍- இமா க்றிஸ்

முதல் பிறந்தநாள் திட்டங்கள் !
எனக்கு தெரிஞ்சு ரெண்டு குட்டீஸ் பிறந்தநாள் (மருமகள்/மருமகன்) விழா நடத்தி இருக்கேன் ...

பெரிய சார்ட் போர்டில் குழந்தையில் 12 மாதங்கள் ஒவ்வொரு போட்டோ ஒட்டி விழாவுக்கு வரும் அனைவரையும் ஆட்டோகிராப் போட சொல்லுங்க.

இதே மாதிரி வீடியோ வாழ்த்து... குடும்பமா வாழ்த்து சொல்ல சொல்லி ரொக்கார்ட் பண்ணுங்க‌

முத‌ல் பிற‌ந்த‌நாள் என்ப‌தால் ஒரு வார‌த்துக்கு முன்ன‌மே விழா அன்று இருக்கும் ஸ்கெடியூலிலே தூங்க‌ சாப்பிட‌ செய்யுங்க‌.

என் ம‌ரும‌க‌ள் ஒரு மாத‌ம் முன்பே ஹேப்பி பெர்த்டே பாட்டை கேட்டு கேட்டு அவ‌ளே ஹேப்பி ஹேப்பி என்று அழ‌காய் பாடினாள் முத‌ல் பிற‌ந்த‌நாள் அன்று.

போட்டோ/வீடியோ எடுக்க‌ யாரையாவ‌து நிய‌மித்து விடுங்க‌ .. க‌டைசி நேர‌த்தில் சொல்லாம‌.. நீங்க‌ தான் போட்டோ எடுக்க‌ணும் வீடியோ எடுக்க‌ணும் என்று சொல்லி அவ‌ங்க‌ளுக்கு ஒரு பேக்க‌ப் ஆளையும் ரெடி ப‌ண்ணுங்க‌..

இந்திய‌ முறைப்ப‌டி என்றால்.. குழ‌ந்தைக‌ள் த‌விர‌ வ‌ரும் பெரிய‌வ‌ர்க‌ளுக்கு தாம்பூல‌ பை ‍ ஐடியா இமா சொன்ன மாதிரி பிரின்ட் போட்டு கலர் காப்பி எடுத்து செய்யலாம்.. ( வெற்றிலை பாக்கு ப‌ழ‌ம்/ இனிப்பு / போட்டொ பிரேம்/கிஃப்ட்) த‌ர‌லாம்.

கேக் வெட்டும் போது க‌ன்ஃபெட்டி ( பேர் ம‌ற‌ந்திடுச்சி) ப‌ற‌க்க‌ விட‌லாம்.. வீடியோவில் அழ‌கா இருக்கும்..

வ‌ர்ர‌வ‌ங்க‌ளுக்கு வ‌ரும் போதே ஒரு சின்ன‌ ட்ரேயில் ப‌ன்னீர் /ச‌ந்த‌ன‌ம் / புஷ்ப‌ம் வைக்க‌லாம்..

முக்கிய‌மா பிளான்.. முத‌ல் ஆப்பிடைச‌ர் / அப்புற‌ம் மெயின் சாப்பாடு / அப்புற‌ம் கேக் வெட்ட‌ற‌து / அப்புற‌ம் போட்டோ செஷ‌ன் என்று..

பிளானுக்கேத்த‌ மாதிரி உண‌வையும் வ‌ருவிக்க‌லாம்... எல்லாம் டிஸ்ப்ளே செய்தால் ப‌சியா இருக்க‌வ‌ங்க‌ எல்லாத்தையும் ர‌வுண்ட் க‌ட்டிடுவாங்க‌...

ந‌ல்லா பாட‌ற‌வ‌ங்க் இருந்தால் த‌மிழ்/ஹிந்தி பாட‌ல்க‌ள் பாட‌ சொல்ல‌லாம்...

மெயினா சாப்பிட்டு ரிலாக்சா இருக்கும் போது குழ‌ந்தைக‌ள் நிக‌ழ்ச்சி வைக்க‌லாம்..

இல்லைன்னா பார்ட்டி பாட‌ல்க‌ள் போட்டு டடிரெயின் ஓட்ட‌லாம்.. ரொம்ப‌ ஜாலியா இருக்கும்...

என்னை கேட்டா முத‌ல் பார்டி தீம் உங்க‌ளுக்காக‌ ரெண்டில் இருந்து தான்குழ‌ந்தைக‌ள் எஞ்சாய் ப‌ண்ணுவாங்க‌...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் அன்று அவள் பிறந்ததில் இருந்து எடுத்த போடோஸ் ஒரு ஆல்பம் மாதிரியோ அல்லது frame போட்டோ அவளுக்கு நீங்கள் பரிசளிக்கலாம். உ.இம் பிறந்த அன்று முதலில் எடுத்தது, முதல் rolling over, முதல் ஸ்மைல், முதலில் உட்கார்ந்தது, தவழ்ந்தது, நின்றது, நடந்தது, முதல் பல் , மற்றும் சில சிறப்பு போடோஸ் இதை arrange பண்ணி பார்ட்டி ஹாலிலும் பெரிதாக வைக்கலாம். பர்த்டே அன்று எதாவது usualla இல்லாம எதாவது ஸ்பெஷல் costume போடலாம். நீங்கள் இந்திய சம்பந்தப்பட்ட தீம் செலக்ட் பண்ணியிருப்பதால் நம்ம இந்தியன் traditional டிரஸ் பண்ணலாம். கேக் வெட்டும் சமயத்தில் party poppers வெடிக்க செய்யுங்கள். முடிந்தால் நமது அணைத்து இந்திய மொழிகளிலும் வாழ்த்து வாசங்கள் தயாரித்து display பண்ணலாம்.
உங்கள் மகளுக்கு advanced பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்