டெலிவரிக்கு பின் மாதவிடாய் பிரச்சனை

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எனக்கு கடந்த டிசம்பர் மாதம் 2வது குழந்தை பிறந்தது.தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.5மாதங்களிலேயே பீரியட்ஸ் வந்துவிட்டது.முதல் 2 மாதம் ஹெவி டிஸ்சார்ஜ் ஆகவும் 3ம் மாதம் குறைவாகவும் இருந்தது.இதற்கிடையில் papsmear செய்துகொண்டேன்.அதன்பின் மீண்டும் பீரியட்ஸ் வந்தது.ஆனால் முதல் 2 வாரங்கள் மிகவும் குறைவே.சில் நாட்கள் இருக்கும்.சில நாட்கள் இராது.ஆனால் இப்போது 1வாரமாக ஹெவி டிஸ்சார்ஜ். G.P யிடம் கேட்டதற்கு தாய்ப்பால் கொடுப்பதினால் ஏற்படும் ஹார்மோன் மாற்றமே இதற்கு காரணம் என்றார்.முதல் டெலிவரியின் போது இவ்வாறு ஏற்பட்டதில்லை.(அப்போது 50:50 தாய்ப்பால்:ஃபார்முலா) 4-5 நாட்களில் நின்று போகும் மாதவிடாய் இப்போது 1வாரம் மேலாக பாடாய்படுத்துகிறது.சாதரணமாக இந்நேரத்தில்வரும் வயிற்றுவலி இத்தடவை இல்லை.papsmear செய்துகொண்டதால் இப்படி உள்ளதா என்று தெரியவில்லை.

உங்களில் யாருக்காவது இவ்வாறு ஆனதா? எதனால் என்று என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இங்கே கேட்கலாமா என்று தெரியவில்லை.தவறு இருப்பின் மன்னிக்கவும்
அன்புடன் அனு

அனுஷா, கண்டிப்பாக இத்தளத்தின் மூலம் உங்களது சந்தேகங்களை கேட்கலாம். இதற்கு முன்பும் இதைப் பற்றிய பதிவுகள் தளத்தில் உள்ளன. அதில் சென்று பாருங்கள்.

மேலும், பொறுமையாக இருங்கள் நமது தோழிகள் வருவார்கள். உங்களது கேள்விக்கு விடை சொல்ல. எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை.

இதற்கு tamilconsult.com இத்தளத்தில் பார்த்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிரேன்.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

//papsmear செய்துகொண்டதால் இப்படி உள்ளதா என்று தெரியவில்லை.//
நிச்சயம் இப்படி இத்தனை நாள் ஆகாது.

மீண்டும் GP யிடம் போய்க் காட்டுங்கள்.

‍- இமா க்றிஸ்

அனு,
நீங்கள் சொல்லி இருப்பது பற்றி எனக்கு தெரியவில்லை.தெரிந்த தோழிகள் வந்து பதில் சொல்லுவார்கள்.

நீங்கள் குழந்தைக்கு பாலூட்டுவதாக சொல்லி இருக்கிறீர்கள்.இந்த நேரத்தில் அதிக உதிரப் போக்கு நல்லதல்ல.ரத்த சிவப்பணு மற்றும் ஃபெரட்டின் அளவுகள் குறைய வாய்ப்புகள் அதிகம்.இவை,உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ரொம்ப அவசியமானது.நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது தான் சரி.

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.உடல்நிலை சரியில்லாததால் பதில் அளிக்க இயலவில்லை.பார்வையிடுவதோடு சரி.இன்று என் மகன் டே கேர் சென்றிருக்கிறான்.அதனால் கொஞ்சம் ஃப்ரீ.இல்லாவிட்டால் அவனை வைத்துக்கொண்டு லாப்டாப் பக்கம் வர முடிவதில்லை.நேற்று தான் G.P யிடம் சென்றேன்.அவர் லூப் வைத்துக்கொள்ளுமாறு ப்ரிந்துரைத்துள்ளார்.லூப் வைத்துக்கொண்டால் ப்ளீடிங் குறையுமாம்.ஹார்மோன் பிரச்சனைதான் காரணமென கூறினார்.அதற்குமுன் ஸ்கேன் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.இனிமேல்தான் செய்யவேண்டும்.

உடனடியாக ப்தில் அளித்த ரங்கல்ஷ்மி,இம்மா,ஹர்ஷா உங்களுக்கு நன்றி..நன்றி..நன்றி

அன்புடன் அனு

மேலும் சில பதிவுகள்