சிற்பம் - தண்டாயுதபாணி

சிற்பம்

வரைந்தால் ஓவியம்-அதுவே
செதுக்கினால் சிற்பம்
மனிதக்கடவுள் சிருஷ்டித்த மகத்துவம்
காலத்தால் அழியாது-அது
வார்த்தையால் வருணிக்க இயலாது
மன்னன் முதல் மண்மூடி கிடப்பவன் வரை
மறக்க முடியாத வரலாறு-அது
கையின் கலைவண்ணம் மட்டுமல்ல
மனதின் செயல் வண்ணமும் கூட
சிந்தனையின் செலவு-அது
தான் சிற்பத்தின் வரவு
வணக்கத்திற்குரியது
சிற்பம் செதுக்கியவனை விட
செதுக்கப்பட்டவருக்கே முக்கியத்துவம்
பெற்றோரை மறந்த பிள்ளைகள் போல்
மரத்தை மறந்து பழத்தை
ருசிப்பது போல் ரசிக்க வைக்கும் சிற்பம்

- தண்டாயுதபாணி

Comments

தண்டாயுதபாணி சிற்பம் போல் உங்க கவிதையை அழகா செதுக்கியிருக்கீங்க, அழகா இருக்கு, வாழ்த்துக்கள்

Don't Worry Be Happy.

சிற்பம் கவிதை நன்றாக உள்ளது தண்டாயுதபாணி வாழ்த்துக்கள். அறுசுவையின் உங்களின் முதல் படைப்பு. இன்னும் பல கவிதை எழுதிட வாழ்த்துக்கள்.

நல்ல கவிதை. மேலும் பல நல்ல கவிதைகள் படைத்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

முதலில் அறுசுவைக்கு உங்களை வரவேற்கிறேன், நல்ல கவிதை, மேலும் பல படைத்திட வாழ்த்துக்கள். உங்கள் கவிப்பணி தொடரட்டும்.

அன்புடன்
பவித்ரா

அருமையானா கவிதை................

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சிற்பம்..

அழகான கவி.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சிற்பம் கவிதை அருமை. பாராட்டுக்கள். தொடந்து கவிதை எழுத வாழ்த்துக்கள்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நல்ல கவிதை பா..அறுசுவைக்கு உங்களை அன்போடு அழைக்கிறேன்...உங்களை பற்றி தெரிந்துகொள்ள ஆசை படுகிறேன்..முடிந்தால் அரட்டையில் சந்திக்கலாம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்