ஆமினா கவிதைகள்

அறுசுவை

எட்டும் தூரத்திலும்
தோழிகளின்றி வாடினேன்-இன்று
எட்டு திசைகளிலும்
பலரை அறிமுகமாக்கினாய்-இது
உன்னால் மட்டுமே!

அன்னிய நாட்டில்
வேற்றுமொழி பிரதேசத்தில்
தனிமையில் தவித்தேன்
தோள்கொடுக்க நீ
ஒத்துழைத்ததால்
எங்கும் தனியொருத்தியாய்
வலம் வருவேன்-இது
உன்னால் மட்டுமே!

வலியில் துடித்தால் சட்டென
வீட்டு வைத்தியம் சொல்வாய்

பிரச்சனையில் தத்தளித்தால்
பிரார்த்தனையால் கரைசேர்ப்பாய்

என்னறிவை மெருகேற்ற
கல்வியை கற்பித்தாய்

கற்றபின்னும் தனித்திருந்தால்
வேலைக்கு செல்ல
கட்டளையிடுவாய்

பிறந்தநாளுக்கு அம்மா கூட
வாழ்த்திட மறந்திடுவாள்-நீயோ
முதல் வாழ்த்தோடு காத்திருப்பாய்

கணவனும் கூட கதைக்க
மறுத்து விடுவான்-நீயோ
என்னை நாள் முழுவதும்
பேச சொல்லி ரசிப்பாய்

உன்னிடம் கதைத்ததை
ரகசியம் காக்காமல்
கதைமலராய் அனைவருக்கும்
பரிசளிப்பாய்

என் பல சந்தேகங்களை
மன்றத்தில் தீர்ப்பாய்-சொல்ல
முடியாத சந்தேகத்தை
அன்பான செல்வியக்கா மூலம்
முற்றுபுள்ளி வைப்பாய்

என் சமையலின்
அரிச்சுவடி நீ தான்-இன்று
எதை செய்யவேண்டுமென
பட்டியல் இடுபவளும்
தோழியே நீயே தான்

என் சமையலறையில்
ஆட்சி செய்வதும் நீ தான்-இன்று
கைவினையால் வீட்டை
அலங்கரித்ததும் நீயே தான்

விமர்சனம் தந்து
திரையரங்கு அனுப்புவது நீ தான்-எனக்கு
ஊர் சுற்றி காண்பித்த
வழிகாட்டியும் நீயே தான்

கால சக்கரத்தின் சுழற்சிதனில்
என் சிந்தனையை
செம்மையாக்கியது நீ தான்-இனியொரு
பணி செய்ய
பணித்ததும் நீயே தான்

என் அழகுக்கு அழகு சேர்க்கும்
அழகுநிலையம் நீ தான்-என்
ஆரோக்கியத்திற்கு
முழுகாரணம் நீயே தான்

என் கதையின்
முகவரி நீ தான்-இன்று
என் கவிதைக்கு
கருவும் நீயே தான்

கண்ணை மூடிய பிறகும்
கனவில் நீ தான்-முதலில்
கண்விழித்து பார்க்கும் உருவம்
கண்மணியே நீயே தான்

உணவின்றி இருந்திட இயலும்
உன்னையன்றி இருந்துவிட முடியுமோ?
நீரின்றி வாழ்ந்திட முடியும்
நீயின்றி என் நாட்கள் நகர்ந்திடுமோ?

தூக்கம் தொலைத்தும்
இருந்துவிட முடியும்
துக்கம் துடைப்பவளே
உன்னையன்றி இருந்துவிட முடியுமோ?

எல்லாமும் நிறைந்தவளே!
கவி வரியின் உள்ளார்ந்த
ஆழத்தை அறிந்திட
நக்கிரனை அழைத்தாலும்
அவன் வாதத்தில்
என் வரிகள் வென்றுவிடும்!

என் அன்புக்கு உரியவளே!
கவிதைக்கு பொய் அழகு
என சொன்னவனிடம்
இதை காண்பித்தாலும்
அவன் கூற்றை
என் உண்மை மொழிகள்
மாற்றிவிடும்!

என் உயிர் தோழியே!
என்றும் உன்னிடன்
பிரியாத உறவுதனை
இறைவனிடம்
கையேந்தி கேட்கிறேன்.

என் கையினை தட்டிவிடாமல்
தேனினும் இனியவளே
நீயும் அந்த வரத்தை
தந்தருள்வாயாக!

என்னவனாய் எண்ணினேன்!

நீ வந்து போன
ரகசியத்தை-நான்
அறியவில்லை என்றாலும்
உன் பாத சுவடுகள்
காட்டிவிடும்!

நீ வருவதையும்
தென்றல் காற்றில்
மிதந்துவரும்-உன்
அற்புதமான வாசனை
முன்கூட்டியே
சொல்லிவிடும்!

என்னை காண-நீ
எட்டி பார்த்து
விளையாட்டாய் மறைவதை கூட-நீ
விட்டு சென்ற தடயங்கள்
ஆங்காங்கே சிதறல்களாய்
தெரிந்துவிடும்!

உன் வரவுக்காக
பல நாள்-நான்
வாசலில் கதியாய்
கிடப்பதை அறிந்தும்-நீ
சில நாள் வராமல்
பொய்ப்பாய்.

ஆனாலும்
முயற்சியை கைவிட
மனம் மறுத்துவிடும்!

நீ வருகின்ற
ஒரு நாளுக்காக
வருடம் முழுவதும்
புத்திசுவாதினம் இல்லாதவளாய்
இதயம் புலம்பும்!

நீ வந்த பிறகோ
நீ செய்கின்ற
பல சில்மிஷயங்களை
பொறுக்க முடியாமல்-உன்னை
விட்டு விலகி
வீடு வர
கால்கள் ஓடும்!

அவ்வாறு
ஓடி சென்றாலும்
வழி நெடுகிலும்-நீ
துரத்தி வருவாய்

வாய் வார்த்தையால்
உன்னை துரத்தினாலும் கூட-நீ
தீண்டும் சுகத்திற்காக
மலரினும் மெல்லிய என்
ஸ்பரிஷம் ஏங்கும்!

ஆனால்
அனுமதிக்கு கூட காத்திருக்காமல்
என்னை உச்சி முதல் பாதம் வரை
முழுவதும் தீண்டிய பிறகே
உன் குறும்புகள்
முடிவுக்கு வரும்!

யாரும் அறியாமல்
நாம் இணைந்ததை
எப்படியோ
எல்லோருக்கும்
தெரிந்துவிடும்!

ஆயிரம்
வாய்வசை வாங்கிய பிறகும்
மருந்தை உட்கொண்டாவது
மீண்டும் மறுநாள்
நாம் இணைவோம்!

பெண்ணாய்
பல கவிஞன் -உன்னை
வர்ணித்த போதும்
மங்கையாய்
இருப்பதினாலோ என்னவோ
மழையே!
உன்னை
என்னவாய் மட்டுமே
எண்ணினேன்!

Comments

ஆமினா இரண்டு கவிதையும் சூப்பர், சூப்பர். அறுசுவைய உங்கள் கவிதை வரியால் பாடிட்டீங்க. மழை கவிதை அருமை. வாழ்த்துக்கள் ஆமினா.

ஆமி

இரண்டு கவிகளுமே அழகு.. அறுசுவை பற்றி எழுதிய விதம் மிக அழகு.. வாழ்த்துக்கள்
சும்மா பாராட்டி, வாழ்த்தி போர் அடிக்குது ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமீனா, ரொம்ப நல்லா இருந்தது... இரண்டில் எது சிறந்தது என பட்டிமன்றமே வைக்கலாம்... தொடந்து எழுதுங்கள் ஆமீனா.... சூப்பர்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

கவிதையை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.......
ரொம்ப நாளாச்சேன்னு நானும் மறந்துட்டேன். மறக்காம போட்டுட்டீங்க:)
மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வினோஜா
முதல் ஆளாக வந்து பாராட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி. கவிதை பிடித்துப்போனதில் மிக்க சந்தோஷம். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்...

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரம்யா
உங்களுக்கு நன்றி சொல்லியே என் கீபோர்டில் உள்ள 5 வார்த்தைகளும் மறஞ்சு போச்சு:(
மிக்க நன்றி பா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரங்கா
அந்த பட்டிக்கு நடுவர் நீங்க தானே?
மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து எம்மை வாழ்த்துவதற்கு:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாவ் சூப்பர் ஆமினா! அறுசுவையைப் பற்றிய ஒவ்வொரு வரியும் உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறில்லை. வாழ்த்துக்கள் ஆமினா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//கண்ணை மூடிய பிறகும்
கனவில் நீ தான்//

நல்ல வரிகள் ஆமி, நான் கூட பல நாட்கள் உண்மையிலேயே பதிவு வருவதையெல்லாம் கனவில் கண்டிருக்கிறேன்

//என் உயிர் தோழியே!
என்றும் உன்னிடன்
பிரியாத உறவுதனை
இறைவனிடம்
கையேந்தி கேட்கிறேன்.

என் கையினை தட்டிவிடாமல்
தேனினும் இனியவளே
நீயும் அந்த வரத்தை
தந்தருள்வாயாக! // ஒரே வார்த்தை சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் ஆமி. வாழ்த்துக்கள்.

//ஆயிரம்
வாய்வசை வாங்கிய பிறகும்
மருந்தை உட்கொண்டாவது
மீண்டும் மறுநாள்
நாம் இணைவோம்!// அடுத்த கவிதையில் இந்த வரிகள் அருமை ஆமி. ஆமி நிஜமா சொல்றேன், ரொம்ப அழகா எழுதறீங்க. நல்ல எதிர்காலம் இருக்கு ஆமி. முயற்சியுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

ஆஹா.... உண்மையில் இது கவிசிவா தானா? இந்த பக்கம்லாம் குட்டி தலை வருமா?
மிக்க மகிழ்ச்சி... ரட்டிப்பு சந்தோஷம்
ஸ்பெஷல் நன்றி......
தொடர்ந்து உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹி ஹி ஆம்ஸ் குட்டித் தலை கவிதைப்பக்கம் வரும் கதைப்பக்கம் மட்டும்தான் போகாது ஏன்னா குட்டித்தலைக்கு கதை படிக்கப் புடிக்காது :)

சில கவிதைகள் மனதைத் தட்டும் அப்படிப்பட்ட கவிதை இது. அதான் உடனே பாராட்டிட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கு கூட நைட் தூங்கும் போது சமீபத்திய கருத்துக்களில் யாரோ என்னை அழைப்பது போல தெரியும். உடனேயே எழுந்து பார்ப்பேன். சில நேரங்களில் என் தூக்கம் தொலைக்க(வா..வா...ன்னு கனவுல டிஸ்டர்ப் பண்ணும்) செய்வதும் அறுசுவை தான். தூகம் இல்லாத நேரத்தில் துணை வருவதும் என் தோழி அறுசுவை தான்....
அதே மாறி காலைல அறுசுவையை ஒபன் பண்ணிட்டு பாத்துட்டு அப்பறமா தான் டீ போட போவேன். அந்த அளவுக்கு நானும் என் அறுசுவையும் க்ளோஸ்:)

என்ன சொல்ல பவி... உன் இந்த வார்த்தைகள் எனக்கு புது தெம்பு கொடுக்குது. சத்தியமா இப்ப வரை எந்த கதையோ,கவிதையோ எழுதல. என்னமோ கொஞ்ச நாளா விருப்பம் இல்ல. இப்ப திரும்பவும் வந்துருக்கு.உங்கள் அனைவரின் இந்த வாழ்த்துக்கள் என்னை திரும்பவும் எழுத வைக்க தூண்டுது.
மிக்க நன்றி!!!!!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஓ அப்படியா தல!
நான் தான் கவனிக்கலையா...!!

//அப்படிப்பட்ட கவிதை இது// வானத்துல இருக்கேன் தல. அப்பறமா வந்து பதில் சொல்றேன். பின்ன என்ன? கவியரசி என் கவியை பாராட்டும் போது மகிழ்ச்சி பிறக்காதா?
மிக்க மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

போதையளிக்கும் கவித் தூறல் கற்பனைக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் கவிதைத்தூறல் பெருமழையில் நனைவது சுகம்.
அடுத்தது; அறுசுவை உங்கள் கற்பனை பிரமாதம். மிகவும் ரசித்து படித்தேன் ஆமினா.

அரட்டை அடிக்கும் நம் உறவுகளை
கண்ணில் கண்டதில்லை
வாய்விட்டு போசியதில்லை
உள்ளஉணர்வுகள் பதிவாய்
வெளிப்படும் என் இனைய
இதய உறவுகளுக்கு

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ggj

யோகராணி மிக்க நன்றி உற்சாகமூட்டும் பதிவுக்கு! அழகாய் கதை எழுதும் உங்கள் எழுத்துக்கு கண்டிப்பாக கவிதையும் செதுக்க முடியும் தானே? சீக்கிரம் அழுப்புங்க கவிதையை!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அலி பாத்திமா
என் அக்காவின் பெயரும் செய்யதலி பாத்திமா :)
நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலையே? அடுத்த முறை தமிழில் எழுதி சொல்லுங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமிமிமி கவிதை சூப்பரோ சூப்பர் எனக்கு இந்த வரி மிகவும் பிடித்து இருக்குபா

கண்ணை மூடிய பிறகும்
கனவில் நீ தான்-முதலில்
கண்விழித்து பார்க்கும் உருவம்
கண்மணியே நீயே தான்

உணவின்றி இருந்திட இயலும்
உன்னையன்றி இருந்துவிட முடியுமோ?
நீரின்றி வாழ்ந்திட முடியும்
நீயின்றி என் நாட்கள் நகர்ந்திடுமோ?

மழை கவிதை சூப்பர்

நஸ்ரின்

அது ஏன் எக்ஸ்ட்ரா 2 மி!! எக்கோ கேட்கும் படி கூப்பிட்டீங்களோ?

மிக்க நன்றி பா. தொடர்ந்து படிங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிதை பிடித்த சந்தோஷதுளத்தான் அமிமி போட்டு இருக்கேன் நான் கூப்பிடுவது லக்நோவரைகும் கேகனும்ல அதான்

நஸ்ரின் கொஞ்ச நேரத்துல என்னைய அம்மியாக்க பாத்துட்டீங்களே!!!
அன்னைக்கு கூப்பிட்டது தூக்கத்துல கூட கேட்டுச்சு தெரியுமா? தொடர்ந்து படிங்க. மிக்க நன்றி.......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமீனா..இப்போதுதான் இந்த இரண்டு கவிதைகளைப் படித்தேன்.
இரண்டுமே அருமை.
மொத்த வரிகளுமே நெஞ்சைத்தீண்டின.
அன்புடன் பாராட்டும்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

ஆமினா உங்க கவிதைகள் நல்லா இருக்கு.

மிக்க நன்றி தேன் மொழி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி அபிதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா