பயனுள்ள அரட்டை பாகம் 3

போன அரட்டையில் யாரும் அவ்வளவா பேசல:( சமுதாயத்துல என்ன நடக்குதுன்னு இன்னும் சில பேருக்கு தெரியலையோ என்னவோ. இன்னும் தெரிஞ்சவங்க அதுல பேசலாம்.

இன்றைய தலைப்பு “விருப்பங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்”
என்னன்ன பிடிக்கும்னு சொல்லுங்க பாக்கலாம். என்ன பிடிக்குமோ எத வேண்டுமென்றாலும் சொல்லலாம். நிறைவேறிய விருப்பங்களும், நிறைவேறாத விருப்பங்களும் சொல்லலாம்.

இனி இதுலையே பேசுங்க பா.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் தான் ஃபர்ஸ்ட்டு :) ஹேய் டண்டணக்கா டணக்குணக்கா விசில் அடிச்சுக்கோங்க :)

எனக்கு கடலோரத்தில் இருக்கும் ரெஸ்ட்ராண்டில் உட்கார்ந்து டின்னர் சாப்பிட பிடிக்கும். எப்பவும் சாப்பாட்ட பத்தின நினைப்பான்னு கேட்கக் கூடாது. ஏன்னா இது அறுசுவை அக்காங்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமி..

எனக்கு நிறைய விருப்பம் இருக்கு. ஒரு பெரிய லிஸ்ட்டே. இருக்கு. மழைல நனைஞ்சா புடிக்கும். ஆனா அண்ணா எல்லாம் நீ என்ன பெரிய மணி ரத்தினம் பட ஹீரோயினானு கேட்பாங்க.:( . என்ன கொடும சார் இது.. ஹீரோயின்னா தான் மழைல நனையினுமா ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நிலா சோறு மொட்டை மாடியில் உர்க்கார்ந்து சாப்பிட பிடிக்கும்,அதும் நிறைய உறவினர்களோட, அப்புறம் மழை வரும்போது காபி,பஜ்ஜி சாப்பிடனும், கைக்கு மருதாணி வெச்சிக்கணும், யாராவது வீட்ல வராண்டா இருந்தா போதும் ரிலேடிவ் வீட்ல அங்க உக்காந்து எல்லாரும் நல்லா அரட்டை அடிக்கணும்.

ஹ்ம்ம் இது மாதிரி நிறைய இருக்கு.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மலைபிரதேசத்தின் குளிருக்கு இதமா சுக்கு காப்பியும் மிளகாய் பஜ்ஜியும் சூடா சாப்பிட பிடிக்கும். (கவி அடங்கு மகளே அடங்கு நீ சாப்பாடு ராமின்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடப் போகுது)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி

கவலைபடாதிங்க.. பிடிச்சது என்னனு யாராவது கேட்டாலே சாப்பாட பத்திதான் கேக்கறாங்களோனு நினைக்க வேண்டியிருக்கு.. ;) நானும் அப்படித் தான்

ஹேமி

மழை வரும் போது உங்களுக்கு பஜ்ஜி வேணும்னு எனக்கு தெரியுமே ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தம்பி கூட சண்டை (செல்லமாக) போட பிடிக்கும், மழையில் நனைந்து கொண்டே கப்பல் விட பிடிக்கும். இன்னும் இருக்கு..

அன்புடன்
மகேஸ்வரி

//மழை வரும் போது உங்களுக்கு பஜ்ஜி வேணும்னு எனக்கு தெரியுமே//

எப்படிடா கண்டுபுடிச்சா, அந்த ரகசியத்த எனக்கும் சொல்லுடா.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

எனக்கும் என் தம்பிகூட சண்டைபோட பிடிக்கும் என்னக்கு நாங்க சண்டை போடலயோ அன்னைக்கு மழை இடியுடன் புயல் மழை வருமே.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஆளில்லா பீச்சில் கடல் அலை காலைத் தழுவ தன்னந்தனியே காலாற நடக்கப் பிடிக்கும்

மழையில் நனைய பிடிக்கும். ஆனா அதன் பின்னாடி வர ஜலதோஷமும் காய்ச்சலும் பிடிக்காது :(

அருவியில் குளிக்கப் பிடிக்கும்

கணவரோடு லாங் ட்ரைவ் போக பிடிக்கும். பிரச்சினை என்னன்னா போகும் போது ஜாலியா போவேன். திரும்பும் போது சும்மாவே உட்கார்ந்து போறதால டயர்டாகி நான் தூங்கிடுவேன். அவர் ட்ரைவ் பண்ணத்தானே செய்யறார் என்னத்த டயர்டாக இருக்கு. அதனால் கவனமா ஓட்டிட்டு வருவார் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்