மினி குளிர் சாதன பெட்டி

தோழிகளே, ஒரு சிறிய (மினி) குளிர் சாதன பெட்டி பற்றியும் அதன் விலை பற்றியும் எனக்கு டீடெயில் தேவைப்படுகிறது. எது நல்லா இருக்கும்னு சொல்லுங்களேன்.நான் கேட்பது MICROWAVE OVEN விட கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கும். எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள். இரண்டு அறைதான் இருக்கும் அதில். தெரிந்தவர்கள் உதவவும்.

கொஞ்சம் இங்கயும் வந்து உங்க கருத்துக்களை சொல்லுங்கள் தோழிகளே:))

அன்புடன்
பவித்ரா

பவித்ரா மேடம்,
எனக்கும் அதை பற்றி தெரியாது. கொஞ்சம் பொறுமையா இருங்க. நம்ம தோழிகள் யாராவது வந்து சொல்லுவாங்க.

ரொம்ப நன்றிப்பா, பார்ப்போம், யாராவது வராங்களானு. வலையில் தேடினேன், நிறைய இருக்கு, இது பெஸ்ட்னு தெரியலை. ஒரு ஆளுக்கு மட்டும் தான், அதனால சின்னது போதுமேனு தான் இங்க கேட்டேன்.

அன்புடன்
பவித்ரா

கூகிளில் ’MINI REFRIGERATOR’ என்று டைப் செய்து தேடுங்கள்.
நான் பார்த்தேன். நிறைய மாடல்களின் படம் பார்த்தேன் நெட்டில்.
நீங்களும் பாருங்கள்.
அன்புடன்
ஜெமாமி

பவித்ரா. நீங்க சொல்வதுபோல சின்ன குளிர் சாதன்ப்பெட்டி நான் பக்கத்து வீட்ல பாத்திருக்கேன். 2 ரூம் தான் இருக்கு 7000 ருபா ஆகும். ஹெயைர் கம்பெனி(புதுசு) மாடல் நன்னா இருக்கு. அவங்க வீட்ல பெரிசுகூட இருக்கு. ஆனா கூட சின்னதும் வச்சிருக்காங. பால், தயிர் கொஞ்சமா காய்கறி வைக்க உபயோகமா இருக்கு

பார்த்தேன், மாமி, நிறைய மாடல் இருக்கு, அதனால தான் யாராவது யூஸ் பண்றவங்க கிட்ட கேட்டா சொல்லுவாங்களேனு தான் இங்க கேட்டேன்.

அன்புடன்
பவித்ரா

சந்திரா தானே உங்க பெயர். அப்படியா, ரொம்ப நன்றிப்பா! ஆனா எனக்கு 7000 கொஞ்சம் ஜாஸ்திப்பா! நீங்க சொன்ன மாதிரி பால், தயிர், மாவு, பழங்கள் ஏதாவது, தேங்காய், இது மட்டும் வைக்க தான், அதனால தான் சின்னதா பார்க்கிறேன். மிக்க நன்றி. நானும் வலையில் haier பார்த்தேன், அதில் 4000 ரூபாய்க்கு இருக்கு.

அன்புடன்
பவித்ரா

பவி அக்கா,நானும் வாங்கலாம்னு கேட்டு இருக்கேன், என் வீட்டில் கு.ச பெட்டி இல்லை ஆனால் கடை காரர்களே மிக சிறியது 7000 ஆகும் அதற்கு கூட பணம் போட்டு 7000+5000=12000 கொடுத்து பெரியதே வாங்கினால் அதோட பயன் அதிகமா இருக்கும்,,, பெரியது இருந்து படுக்கை அறை, போன்ட்ற இடதில் சிறியது பயன் படுத்தினால் நல்லது

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

முதல்ல கைய காமிங்க, ம்ம் அப்படிதான், ஒரு அடி வாங்கிக்கோங்க, பவி அழகாயிருக்கா, இல்லை பவி அக்கா அழகாயிருக்கா, நான் குட்டி பொண்ணுதான் சோ நோ அக்கா, மரியாதையெல்லாம் மனசில் இருந்தா போதுமானது :)).

இப்ப மேட்டருக்கு வரேன். எங்க வீட்டில் பெருசு இருக்கு விமலா, நான் வேலை செய்யும் இடத்தில் அத்தியாவசிய பொருட்களை வைக்க மட்டும் ஒன்று வாங்கலாமானு ஒரு எண்ணம், அதான்.

அன்புடன்
பவித்ரா

ஆ,,,, வலிக்குது பவி,,, அடிக்காதீங்க நான் பாவம்ல தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன்,,,,சரி செல்லம்,,, பாருங்க ஒரு தடவை வாங்குரோம் so பாத்து வாங்குங்க சரிய மா

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

மேலும் சில பதிவுகள்