இன்றைய ஸ்பெஷல் டாபிக்

இன்றைய ஸ்பெஷல் என்றதும் எல்லோரும் சமையலுன்னு நினைத்தீர்களா? அப்படின்னா ஏமாந்துட்டீங்கப்பா,
நானும் ஒரு இழை தொடங்கலாம்ன்னு தோணிச்சு, அதனாலதான்.
தினமும் நமக்கு நாமே செய்த ஏதாவது ஒரு செயல் மிகவும் பெருமையா இருக்கும் இல்லையா? அந்த மாதிரி தினமும் செய்வதில் பிடித்ததை நாம் நம் அறுசுவை தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளதான் இந்த இழை. தயவு செய்து இங்கும் உங்களது பதிவுகளை வந்து போடுங்கோகோகோகோ

இன்றைய ஸ்பெஷல் பவிக்கு பிறந்த நாள் அதனால அவதொடங்கிய இழையை
மேலே கொண்டு வந்தேன்

இன்னிக்கு என்ன ஸ்பெஷல் தோழிகள் வந்து சொல்லுங்கள்

யாருடா அது, என்னோட இழையை மேல கொண்டுவந்திருக்கான்னு பார்த்தா, நீங்களா??, ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா :))

இன்னிக்கு என்னோட ஸ்பெஷல் என்னவென்று நீங்களே சொல்லிட்டீங்க!, ஆபீஸில் நிறைய பேர் வந்து விஷ் பண்ணினாங்க, ரொம்ப சந்தோஷமா இருந்தது. காலை முதல் நிறைய போன் கால்ஸ், வீட்டில் என் தோழி ஒரு விஐபி’கு கூட பிறந்த நாள் அன்று இத்தனை கால் வருமானு தெரியாதுனு சொல்லி கிண்டல் பண்ணினா:))

ஆபீஸ் வந்தா எங்க மேனேஜர், மேடம் நீங்க போன பக்கத்திலேயே உட்காந்துக்கோங்க, ஒரு நிமிஷம் அங்க இங்க போனாலும் கால் வருதுன்னு சொன்னாரு.

அறுசுவைக்கு வந்தா, முந்தாநாள் முதலே எல்லாரும் வாழ்த்த ஆரம்பிச்சாச்சு, இன்னிக்கு நிறைய வாழ்த்து சொல்லிருக்கீங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

அம்மா, 12 மணிக்கு கூப்பிட்டாங்க, நல்ல தூக்கம் பேச முடியலை, திரும்ப அம்மா, 5.20, 5.55ன்னு போன் போட்டிருக்காங்க, நாம தான் கும்பகர்ணியாச்சே, ம்ஹூம், எழும்பவே இல்லை, 7 மணிக்கு பார்த்தா வருத்தமா போச்சு;((, அப்புறம் போன் பண்ணி வீட்டில் பேசினேன்:))

ஒரு விஷயம் மட்டும் நடக்கலை ;((, வருஷாவருஷம் “உதவும் கரங்கள்”கு பணம் அனுப்பிடுவேன், அங்கிருந்து யாராவது ஒரு குழந்தை போன் பண்ணி பேசும், இந்த முறை தீபாவளி அது இதுன்னு செலவு ஆகிவிட்டதால், அங்க பணம் அனுப்பமுடியலையே ஒரு வருத்தமா இருக்கு ;((

மற்றபடி எனக்கு சந்தோஷம்:))

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்