கெட் டு கதர் சந்தோஷங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),

இல்ல இல்ல, இப்ப தான் தவல்றோம் நு வெச்சுகலாம். இன்னும் எட்டு கூட எடுத்து வெக்கலையே !!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சனியன்று ரம்யாக்கிட்ட பேசினேன், பாவம் வைரல் ஃபீவராம், பெட்டோடு ஒட்டிட்டு இருக்கேன் பவி’னு சொன்னாங்க, வருத்தமா போச்சு;((.

எல்லாரும் நல்லா என் ஜாய் பண்ணினீங்கனு பதிவு பார்த்தாலே தெரியுது, பாபு அண்ணா, அப்படியே போட்டோவும் போட்டுடுங்க :))

அன்புடன்
பவித்ரா

கல்யாண பொண்ணுக்கு ஒடம்பு சரி இல்லையாம. அதுனால அவங்க லீவ்..... நேத்து tired ல சௌமியன் ஆபீஸ் கு லீவ் ஒ என்னமோ???

பவி இல்லாதது பெரிய குறை. அண்ணா கிட்ட கேட்டுகிட்டே இருந்தோம்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பவி,

அடடா, கெட் டு கெதர்ல கலந்துக்கணும்னு ரொம்ப ஆசையாக இருந்தாங்களே ரம்யா!

சீக்கிரம் குணமாகணும் அவங்களுக்கு. நானும் மெயில் அனுப்பறேன் அவங்களுக்கு.

சுகந்தி,

நேத்து காலையிலருந்து இருப்பு கொள்ளலப்பா இங்க எல்லாருக்கும். சிரமத்தப் பாக்காம வந்து கலந்துகிட்டு இருந்திருக்கலாம்னு தோணிட்டே இருந்தது.

நீங்க ஆஃபிஸ் வேலைக்கு நடுவில, கொஞ்சம் கொஞ்சமாக டைப் பண்றீங்கங்கறது தெரியுது. அதுதான் தாங்க்ஸ் சொன்னேன்.

தொடர்ந்து சொல்லுங்க, எல்லோரும் காத்துட்டு இருக்கோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

பவி,

நீங்களும் கலந்துக்கப் போறதாக சொன்ன நினைவு, ஏன்ப்பா போகலையா?

அன்புடன்

சீதாலஷ்மி

சுகந்தி கெட் டூ கெதர் கொண்டாட்டம் சூப்பரா என்ஜாய் பண்ணிங்க போல. கலந்துக்கிட்டவங்க எல்லோரும் ஒரு பதிவு போட்டாங்க. செளமியன் சார் நேத்து அதிகமா பேசிட்டாங்களா இன்னைக்கு அவங்க வந்து ஒரு பதிவு கூட போடயில்லையே. அப்புறம் யார் அதிகம் பரிசு வாங்கினாங்க.

நீங்க என்னை விட ஒரு வயது மூத்தவரா ஆஹா, இத்தனை நாளா இது எனக்கு தெரியலயே!.

அன்புடன்
THAVAM

இது யாரு தவமணி தம்பியா :). என்னப்பா கெட் டுகதரில் எல்லாரும் இலந்தவடையோட சேர்த்து பொய்யாப்பழம்(கொய்யா இல்லை பொய்யாதான்) சாப்பிட்டீங்களா. இப்படி புளுகறீங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வீட்டில் அனுமதி கிடைக்கலை சீதாம்மா;(((((((((((

ரொம்பவே மிஸ் பண்ணினேன், தவமணி அண்ணாக்கூடவும், லதா கூடவும் பேசினேன், அவ்வளவுதான். நான் எப்படி ஆபீஸில் இருந்து அறுசுவைக்கு வருகிறேன் என்று கூட செல்வியக்கா கேட்டதா தவ்ஸ் அண்ணா சொன்னாரு!!

அதெல்லாம் ஒரு பிஸினஸ் ட்ரிக்ஸ் தான் :))

//பவி இல்லாதது பெரிய குறை. //சுகி ;((((((((

அன்புடன்
பவித்ரா

நான் மைக் புடுச்சு கேட்டேன். எப்படி பவி பேங்க் ல வேலை பாத்துட்டு, இப்படி பதிவு போடா முடியுது நு. அப்பறம் தான்,அந்த ரகசியத்த அண்ணா சொன்னாரு
பவி,உண்மையாவே குறை தான். நம்பு பா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்