பென்குயின் செய்வது எப்படி?

தேதி: November 3, 2010

5
Average: 4.5 (12 votes)

 

முட்டை ஓடு - ஒன்று
பேப்பரிக் பெயிண்ட் - கருப்பு மற்றும் வெள்ளைநிறம்
கருப்புநிற ஃபோம் ஷீட்
ஐ ட்ராப்ஸ் மேல் மூடி - ஒன்று
பெயிண்ட் ப்ரஷ்
பெவிக்கால்
பஞ்சு

 

முட்டை ஓடுடையும், ஐ ட்ராப்ஸ் மூடியையும் சுத்தமாக கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்.
முட்டையின் நடுவில் 8 செ.மீ அளவுக்கு இடைவெளி விட்டு விட்டு மற்ற இடம் முழுவதும் கருப்பு நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிட்டு எடுத்து கொள்ளவும்.
நடுவில் உள்ள இடைவெளியில் வெள்ளைநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
பென்குயின் தலைப்பகுதிக்கு ஐ ட்ராப்ஸ் மூடி முழுவதும் கருப்பு நிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
இப்போது கருப்புநிற ஃபோம் ஷீட்டை எடுத்து படத்தில் உள்ள வடிவத்தை போன்று பென்குயினின் இறக்கையையும், கால்களையும் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
முட்டையில் பெயிண்ட் முழுவதும் காய்ந்ததும் ஐ ட்ராப்ஸ் மூடியின் உள்பக்க ஓரம் முழுவதும் பெவிக்கால் தடவி, அதை முட்டையில் மேல் பக்கத்தில் ஒட்டி, நன்கு காய விடவும். பென்குயின் மூக்கு முட்டையின் இடது பக்கத்தில் கருப்புநிற பெயிண்டின் ஓரத்தில் வருவதுபோல் ஒட்ட வேண்டும்.
பின்னர் இரண்டு இறக்கைகளின் கூர்ய முனையை வலது, இடது பக்கத்தில் ஒட்டவும். முட்டையின் அடியில் கால்களை ஒட்டவும். கண்ணுக்கு வெள்ளைநிற பெயிண்டால் ஒரு புள்ளி வைக்கவும்.
ஒரு சிறிய அட்டையில் பஞ்சை பனிக்கட்டிகள் போல் பரப்பி வைத்து அதன் நடுவில் இந்த பென்குயினை வைத்து ஒட்டவும். மிகவும் எளிதான பென்குயின் ரெடி. வெகு சீக்கிரத்தில் இதனை செய்து விடலாம்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த பென்குயின் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

wow!super.

செண்பகா சூப்பர்! உங்களுக்கு தெரியாத கைவேலையே கிடையாது போல இருக்கே!

பென்குயின் மிக அருமையாக செய்து இருக்கீங்க. நல்ல பொறுமை உங்களுக்கு.

அப்படியே எனக்கு பார்சல் பண்ணி விடுங்க. எனக்கு இப்படி எல்லாம் செய்ய பொறுமை இல்லை.

செண்பகா எப்படி இருக்கீங்க. பாபு சார் , நவீனா குட்டி எல்லோரும் நலமா?. நவீனா குட்டி இதெல்லாம் உங்களை செய்ய விடுறாங்களா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சூப்பரா இருக்கு... ஒரு சமயம் என் பையனோட ரிசைக்ளிங் எக்ஷ்சிபிசன்ல ஒருத்தங்க இந்தமாதிரி முட்டை ஓட்டில பெண்குயின் பண்ணியிருந்தாங்க. எனக்கு அவங்க எப்படி பண்ணினாங்கன்னு தெரியலை, ஆனா பாக்கவே ஆசையா இருந்துச்சு, இப்ப தெரிஞ்சாச்சு தேங்க்ஸ் செண்பகா;-)

வீட்டில பண்ணி சோகேஸ்ல வைச்சிருவேன்;)

Don't Worry Be Happy.

ஹை! பென்குயின் ரொம்..ப க்யூட்டா இருக்கு.

‍- இமா க்றிஸ்

கொஞ்ச நாள் முன்னாடி கொடுத்த முட்டை ஓட்டில் பூச்செண்டு....அதையே நான் இன்னும் செய்யலை....அதற்குள்ளாகவே இன்னொன்னா?? இன்னோவோ போங்கோ எதனை தடவை தான் சொல்றது.....உங்களுக்கு நிறைய திறமை இருக்கிறது, அழகா இருக்கு, குழந்தை வைத்துகொண்டு எப்படி தான் டைம் கிடைக்குது அப்படீன்னு....

வாழ்த்துக்கள்.
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

செண்பகா உங்க கை பட்டா எல்லாமே அழகாயிடுது. இதுவும் அழகா இருக்கு.
பென்குயின் செய்த நீங்க பெண்குயின் தான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஸ்கூலில் சொல்லி கொடுத்து ஒரு முறை செய்தேன். ஆனா ஒரு பொண்ணு சட்டுன்னு பிடுங்கியதில் உடைந்துவிட்டது.

இப்ப பையன் ஒடச்சுடுவான். காலமும் ,நேரமும் கூடி வரும் போது செய்றேன் செண்பகா :)

அழகா இருக்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக அழகாக செய்திருக்கிறீங்க செண்பகா.

Hi nijamave simple super pa..

பெண் குயின் செய்த பென்குயின் மிக அழகு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செண்பகா..,தங்கள் கை வண்ணம் மிக அழகு.
சிம்பிளாகவும் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
(செண்பகாவின் அந்த கண்ணம் எங்கே போய் விட்டது?)

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பென்குயின் சூப்பர்.செய்து பார்க்கிரேன்.அது நவீனாகுட்டிதானே ரொம்ப அகழகாஇருக்காங்க.திருஷ்டிசுத்திபோடுங்க.(என் கண்ணே பட்டிருக்கபோகுது)

hi akka, indha penguin supera iruku. nanunm try pannen nalla iruku. enaku indha madhiri neraya katru kudunga.
with regards
swetha

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

senbaga akka,
nenga seitha anaithume super,,,,,,,,,
pappa romba queet a iruku,,,,,
thanks,,,aka