"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"
அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்
கேள்விக்கென்ன பதில்
இந்த கேள்விக்கு யாரும் விடை சொல்லலியே. முயற்சி பண்ணுங்க பா.
இதுவும் கடந்து போகும்.
டிரெயின்கள்
இரண்டு டிரெயின்கள் எதிர் எதிர் திசையில் நின்னுகிட்டு இருக்கு. ஆனால் எப்படி மோதாமல் இருந்திருக்கும்?
Life
கல்யானி
ஹாய் கல்யானி ரயில் நின்னுக்கிட்டு இருக்கும் போது மோதாது, சரியா.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
யோகலட்சுமி
யோகலட்சுமி, மாம்பழ புதிருக்கான பதிலை நீங்களே சொல்லி விடுங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மாம்பழ புதிர்
79 மாம்பழங்கள்.
மிகச்சரியான விடை
சுகானி மிகச்சரியான விடை. வெரி வெரி குட்.
இதுவும் கடந்து போகும்.
என்ன கூறியிருப்பார்
இடம்-சென்னை விமான நிலையம்.
காலை நேரம்.
சுமார் 9 மணியளவு.
விமான நிலையம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
உள்நாட்டு விமான நிலையப் பகுதியில் பயணிகள் பெருமளவில் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள்.
அங்கே சமூக ஆர்வலர் ஒருவர் நின்றுகொண்டு பயணிகளுக்கு புகை பிடிப்பதனால் ஏற்படும் தீங்குகளைப்பற்றியும், உடல் நலக்குறைவுகள் குறித்தும் அச்சடித்த பிரசுரங்களை வினியோகித்துக்கொண்டிருந்தார்.
அப்போது விமான நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே வந்த ஒருவர், வெளிப்பக்கம் ஒரு ஓரமாக ஒருவர் நின்றுகொண்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.
மிகவும் ரசித்து புகையை உள்ளே இழுத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே ஊதி அனுபவித்துக்கொண்டிருந்தார்.
சமூக ஆர்வலர் அவர் பக்கம் வந்தார்.
“அய்யா….உங்களைப் பார்த்தால் மிகவும் கண்ணியம் மிக்கவராகத் தெரிகின்றது.இப்படி சிகரெட் குடிக்கலாமா???இது உங்கள் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிப்பதாயிற்றே????...” என்றவர் மிகவும் சாதுர்யமாக தனது உரையாடலைத் தொடர்ந்தார்.
“ பாருங்கள்…நீங்கள் குடிப்பது மிகவும் விலை உயர்ந்த சிகரெட் போலத் தோன்றுகிறது. ஒரு பாக்கெட் என்ன விலை என்று கூற இயலுமா?” என்றார்.
புகைத்துக்கொண்டிருந்தவர், “ ஒரு பாக்கெட் 500 ரூபாய் விலை” என்றார்.
சமூக ஆர்வலருக்கு ஒரே மகிழ்ச்சி. தான் தொடர்ந்து பேச ஒரு நல்ல விஷயம் கிடைத்துவிட்டது என்று எண்ணியவர், “ ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைக்கின்றீர்கள் , எவ்வளவு காலமாகக் புகைக்கின்றீர்கள்“ என்றார்.
அதற்கு அவர்,” நான் கடந்த 35 ஆண்டுகளாகப் புகைக்கின்றேன். தினமும் எவ்வளவு குறைவாகப் பார்த்தாலும் 6 பாக்கெட் செலவாகின்றது. எனக்கு மிகுதியான நண்பர்கள்” என்று பதிளளித்தார்.
சமூக ஆர்வலர் தனது தொண்டையைக் கனைத்துக்கொண்டு,” அய்யா…ஒரு நாளைக்கு 3000 ரூபாய் புகைப்பதற்குச் செலவழிக்கின்றீர்கள்.35 ஆண்டுகளாக இது நடக்கின்றது.ஒரு குத்து மதிப்பாகக் கணக்குப் பார்த்தால் ஒரு பெரும் தொகை இதற்காகச் செலவழித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.உங்களுக்கு இந்தப் புகைப் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால், நீங்கள் இப்போது வந்திறங்கிய விமானத்தையே உங்களுக்குச் சொந்தமாக வாங்கி வைத்துக்கொள்ளலாம் அல்லவா?கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள்” என்றார்.
புகைத்துக்கொண்டிருந்தவர்,” புன்முறுவல் பூத்தார்.
சமூக ஆர்வலரைப் பார்த்து ஏதோ கூறினார்.
சமூக ஆர்வலர் அவருக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திகைப்புடன் வேறு இடத்துக்கு நழுவினார்.
அன்பர்களே புகைத்துக்கொண்டிருந்தவர் சமூக ஆர்வலரிடம் என்ன கூறியிருப்பார்???????????
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
யோகராணி
யோகராணி
நான் வந்த விமானம் என்னுடையதுதான் என்று கூறியிருப்பார். சரியா?
யோகரானி
இந்த விமானத்தில் வந்து போகும்போதே இவ்வளவு குடிக்கிறேன்,விமானமே என்னுடையதாக இருந்தால் எவ்வளவு குடிப்பேன் என்று கூரியிருப்பார். சரியா யோகா.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
i cant understand,
i cant understand this maths. can u explain this again madam,
thanks