தேன்மொழி கவிதைகள்

பனை மரம்

சுவை நீ சுமந்து, நாங்கள்
சுகமாய் வாழ, நலம் வழங்கும்
பனைமரமே! பரம்பொருளே!
பணிந்தே உனக்கொரு வணக்கம்

பல கோடி மக்களுக்கு இது துணை
பனையின் பயன்களுக்கு ஏது இணை?
பனை மரம் தரும் பதநீர்
பலரும் பெறும் உயிர் நீர்

வீடுகளுக்கு உத்திரமாய் உயர்ந்து
உறுதிக்கு உத்திரவாதம் தரும் இது.
ஓலைகளால் கூரை வேய்ந்து,
ஓய்வெடுப்பார் வேளாளர் இங்கு.

மட்டை விசிறியோ காற்றளித்து,
மறக்க வைக்கும் உடற்களைப்பை.
ஓலைக் காற்றாடியுடன் ஓடினால்,
ஒரு மைலும் ஒரு நொடிப்பொழுதே.

வருடம் முழுதும் வற்றாத வளம்
வழங்கிடுமே இது, வாங்கி வந்த வரம்.
சுவையான நுங்கு, சூட்டைத் தணிக்கும்.
சுட்ட பனம்பழமோ தேனாய் இனிக்கும்.

பாங்காய் உண்டு மகிழ, பனங்கிழங்கு உண்டு.
பாட்டாய் வடிக்க, பயன் பல தரும்.
அதிசய மரம் இதுதான். அதிலும்,
அரிய வகை என்றும் அறிந்திடுவேன்.

கருப்பட்டிக்கென்றே பல அருங்குணங்கள்.
சோகைப் பிடித்த பெண்களுக்கு அருமருந்து
நம் காடு தோறும் பனையின் அணிவகுப்பு.
அழகு தருவது அதன் சிறப்பு.

- தேன்மொழி முகில்குமார்

மாலை நேரம்

அந்தி நேர மந்திரங்கள்
அலை அலையாய் ஒலிக்க,
இரவுக்கு இதுவே முன்னுரை
இனிய நல் முத்தாரமாய்.

காற்று எழுதும் கவிதையாய்
கலைந்தோடும் மேகங்கள்
கதிரவனின் மறைவால்
குவிந்திடும் மாற்றங்கள்

அத்தனை வண்ணங்களும்
அவசரமாய், கரிய உடை
அணிந்து கொள்ளும்,
அச்சாரமே மாலை நேரம்

வெப்பக்கதிர் வீச்சிலிருந்து,
விடுதலைக்காகத்தானே
வேண்டுகின்றோம் நாம்
வாடைக்காற்றின் இதத்தை.

காலை முதல், வேலையால்
களைத்துப் போன உடலை
தாலாட்ட வரும் மாலை
தவறாது வழங்கட்டும் கொடை.

- தேன்மொழி முகில்குமார்

Comments

தேன்மொழி

பனமரம் பத்தி அழகா சொல்லியிருக்கீங்க. எங்க ஊர் பக்கம் நிறையா இருக்கும். பள்ளியில் உடன் பயிலும் தோழிகள் விடுமுறை நாட்களில் அப்பாவுடன் வந்து கால் மூட்டை போட்டுட்டு போவாங்க. நாங்க போனாலும் உடனே ஆளை விட்டு மரத்தில் ஏற சொல்லி பறித்துப்போடுவார்கள்.
உங்க கவிதையை படித்ததும் அந்த ஞாபகம் வந்துச்சு.

மோனை சேர்த்து அழுதியது அற்புதம். திணிக்கப்பட்டது போல் இல்லாமல் இயல்பாகவே அமைந்தது போல் இருந்தது.

மாலை நேர வர்ணனையும் அருமை

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமீனா..வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.பனை மர பயன்களை நீங்களும் அனுபவித்ததால்,முதல் பதிவு கொடுத்திருக்கிறீர்கள்.சந்தோஷம்.சிறு வயதில் எனக்கும், பனை மரம் நிறைந்த எங்கள் கிராமம், மகிழ்ச்சியைத் தந்தது.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

கவிதைகளை வெளியிட்டுள்ள சகோதரர் அட்மினுக்கு என் நன்றி.

என்றென்றும் அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

தேன்மொழி,
உங்க பனைமரக் கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.நாங்க முதல் கிராமத்தில்தான் இருந்தோம்,உங்க கவிதை என்னை மறுபடியும் அங்க அழைச்சிட்டு போயிருச்சு.மாலை நேரக்கவிதை அந்த மாலை வேளை போலவே அழகா இருக்கு.கடைசி நான்கு வரிகள் எனக்கு பிடித்த வரிகள்.

அன்புடன்
நித்திலா

நித்திலா..உங்களை மறுபடியும் கிராமத்திற்கு அழைத்துச் செல்ல முடிந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன்.பாராட்டுக்கு நன்றி.உங்களுடைய அழகான வரிகள்,என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

****காற்று எழுதும் கவிதையாய்
கலைந்தோடும் மேகங்கள்
கதிரவனின் மறைவால்
குவிந்திடும் மாற்றங்கள்******

தேன்மொழி அக்கா இந்த வரிகள் நன்றாக இருக்கிறது..
பனைமரம் கவிதையும் அருமை..இன்னும் பலபல வகைகளில் உங்கள் படைப்புகளை தர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நன்றி ஷேக் தம்பி..உங்களுக்குப் பிடித்தமான வரிகளை என்னால் தர முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி. இடைவெளி விட வேண்டிய அவசியம் குறித்து,நீங்கள் ஆரம்பித்துள்ள, விடைபெறும் இழையில் பதிவிட்டிருக்கிறேன்
மீண்டும் சந்திப்போம்.
அன்பு அக்கா
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

தேன்மொழி உங்கள் பனைமரம் கவிதை மிக அருமை.
காதல் கவிதை காதலின் வர்ணணை என்றில்லாமல் அழகான பனைமர பயனை கவிதை நடையோடு சொல்லி இருப்பது சிறப்பாக உள்ளது.

அடுத்து மாலை பொழுது...

//அத்தனை வண்ணங்களும்
அவசரமாய், கரிய உடை
அணிந்து கொள்ளும்,
அச்சாரமே மாலை நேரம்\\

அழகான கற்பனை தேன்மொழி.

வழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நன்றி அப்சரா,
கவிதையை படித்து,உங்களுக்குப் பிடித்த வரிகளை குறிப்பிட்டு,'நல்ல கற்பனை'என்று பாராட்டு தந்த தங்களுக்கு, மீண்டும் என் நன்றி.
உங்கள் எழுத்துக்கள் என்றென்றும் தொடரட்டும்.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

தேன்மொழி, முதலில் என்னை மன்னியுங்கள். நான் இதுவரை கவிதை தொகுப்பு பக்கத்திற்கு வந்ததே இல்லை. கொல்லப்பட்டறையில் ஈக்கு என்ன வேலை இருக்க முடியும் என்ற தாழ்ந்த மனப்பான்மை தான் காரணம். பனை மரம் குறித்த கவிதை மிகவும் அற்புதம். ஆளரவம் இல்லாத மைதானத்தில் அனாதை போல நின்றிருக்கும் பனை மரத்தில் இருந்து விழும் பழத்திற்காகவே காலையில் மைதானத்தில் முதல் ஆளாய் இருப்போம். வெயில் காலத்தில் பாட்டி வீட்டில் லோல்படும் நுங்கையும், பள்ளி போகும் வழியில் வாங்கி உண்ணும் சுட்ட பனம்பழத்தையும் நினைவுகூற வைத்து விட்டீர்கள். அதற்கே பல கோடி நன்றிகள்.

அந்தி சாயும் இள மஞ்சள் நிற மாலை வெய்யிலோடு வீசும் தென்றல் காற்றுக்காக எத்தனை நாட்கள் ஏங்கி கிடப்போம் நானும் என் தங்கையும். அந்த நேரத்தில் கையில் ஒரு நல்ல பில்டர் காபியோடு சிறுந்தீனியையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்தால் போதும்.... ஆஹா..... அதுவல்லவோ சொர்க்கம்... மிகவும் உணர்ந்து கவிதை வடித்துள்ளீர்கள். உங்களுக்கு மனதார என் பாராட்டுக்களை அர்ப்பணிக்கிறேன். வாழ்த்துக்கள். இனிதே தொடரட்டும் உங்கள் கவிதை பணி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு கல்பனா.....
நிஜமாகவே அந்த அனுபவங்கள் இனிமையோ இனிமை. பனைமரம் பற்றி நான் எழுதும் போது,இதை படிப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று நினத்தேன்.இருந்தாலும் எழுதி விட்டேன்.
கோடைவிடுமுறை சமயம்தான் கிராமத்திற்கு போவோம்.
அந்த நாட்களைப் பற்றிய நினைவுகளை, நிறைய கவிதையாய் வடிக்கலாம்.
இப்போது நன்றி கூறி விடை பெறுகிறேன்.
ரொம்ப சந்தோஷம் என்னுடன் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு.
தொடரட்டும் நம் நட்பு
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

தேன்மொழி நான் கவிதை,கதையெல்லாம் படிப்பேன். ஆனா கருத்து போடமாட்டேன்.

தேன்மொழி உங்கள் கவிதை உங்க பெயருக்கு ஏற்றார் போல் தேன் போன்று உள்ளது.
பனையின் சிறப்பை அழகாக சொல்லி பனைமரத்தை பெருமைபட வைத்துவிட்டீர்கள்.
நன்றி தேன். வாழ்த்துக்கள்

உன்னை போல பிறரையும் நேசி.

அன்பு தேவி
பாராட்டுக்கு மிக்க நன்றி.பனைமரத்தைப் பற்றி எழுதி,அதைப் பற்றிய நினைவை நான் தூண்டியிருக்கலாம். பனைமரம் நிரம்பிய நாடு என்பதில் நாம் பெருமை பெறலாம்.
சின்ன கொட்டான்கள்,பனை ஓலைகளால் செய்யப்படுகின்றன.இவை அழகாகவும்,திடமானதாகவும் இருக்கின்றன.பயன்பாடும் அதிகம்
இதை நினைவு கூறமுடிந்ததற்கு சந்தோஷம்.
கருத்து தெரிவித்தமைக்கு என் கனிவான நன்றி
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

சில உரைநடை போக்குகள் காணப்படுகின்றன.கருத்து அருமை. கவிதைக்குறிய சந்த நயங்கள் குறைவு தான்...
படிக்கும் பொழுது கவிதை படிக்கின்ற இயல்பை ஏற்படுத்தவில்லை.பாராட்டுக்கள்.என்னுடைய விமர்சனம் தங்களை மேலும் மெருகூட்டும் என்று நம்புகிறேன்.

பிரேமா சதீஷ்
நன்றி. நிச்சயமாக உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வேன்.ஏனெனில் கருத்துக்களை கவிதையைப் போல் உரைநடை வடிவில்தான் கொடுத்திருக்கிறேன்.எனினும் தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
\என்னுடைய விமர்சனம் தங்களை மேலும் மெருகூட்டும் என்று நம்புகிறேன்./
நிச்சயமாக.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

அத்தனை வண்ணங்களும்
அவசரமாய், கரிய உடை
அணிந்து கொள்ளும்,
அச்சாரமே மாலை நேரம்

இந்த பத்தி என்னைக் கவர்ந்தது. கவித்துவம் மிளிர்கிறது.
மேலும் பல கவிதைகள். . . . . ?!?

நன்றி பிரேமா.என் மனதில் எழும் கருத்துக்களையும்,காணும் காட்சிகளையும் வார்த்தைகளால் வடிக்க முற்படுகிறேன்.அந்த முயற்சியை குறித்த கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்.
மகிழ்ச்சி.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

’ அந்தி நேர மந்திரங்கள் அலை அலையாய் ஒலிக்க’ இதன் பொருளை என்னால் உணரமுடியவில்லை.
விளக்கம் வேண்டுகிறேன்.’மந்திரங்கள்’ என்று தாங்கள் சுட்டுவது எதனை?
கவிதையின் பொருள் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியவேண்டுமல்லவா?உவமையாக இருந்தால் விளங்கும்படி அமைய வேண்டுமல்லவா?
தயைக் கூர்ந்து குறையாக எண்ண வேண்டாம்.
அன்புடன்
பிரேமா சதிஷ்

பறவைகளின் சத்தம்,காற்றில் மரக்கிளைகளின் சலசலப்பு என்று இது போல் மாலை நேரத்திற்கென்றே வரும் ஒலியலைகளைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். கிராமத்தில் நான் அனுபவித்தவை.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

தேன் மொழி
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது
அன்புடன்
பிரபா

தேன் மொழி
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது
அன்புடன்
பிரபா

அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.நான் எப்படி என் குரிப்புகளை இங்கு படைப்பது.

ஆளரவம் இல்லாத மைதானத்தில் அனாதை போல நின்றிருக்கும் பனை மரத்தில்,
மட்டை பந்து விளையாட வந்த சிறார்களும், மாட்டை ஓட்டி வந்த பெரியவரும் களைப்பாக அமறும் இடமே.....!

-பனைமர நிழல்.

Keep grow them, Keep irrigate them

@harry_blaze_mcc