3 வயது எடைகுறைவு

என் மகனுக்கு 3 வயது3மாதமாகிறது அவன் எடை 12.5 கிலோதான் உள்ளது அவன் டாக்டர் இந்த எடை குறைவு என்கிறார் எடை அதிகமாக நான் எந்த மாதிரி உணவுகளை கொடுக்க வேண்டும்?

ஒன்றும் கவலை வேண்டாம் , ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதாவது சத்தான உணவு கொடுத்து கொண்டே இருங்கள்

1. பால் முன்று வேலை ( ஒரு வேளைக்கு பாதம் ,பிஸ்தா சேர்த்து , முடிந்தால் முட்டையும் சேர்த்து கட்டியில்லாமல் காய்ச்சி தினம் இரவு படுக்க போகும் போது கொடுங்கள்.

2. ராகியில் (ஜலித்த ராகி மாவில்)( பாதம், முந்திரி, பொட்டு கடலை, கோதுமை மாவு,அரிசி மாவு கலந்து மிக்ஸியில் பவுடர் ஆக்கி கொள்ளுஙக்ள்.
தினம் க்காலையில் அரை டம்ளர் பால் முக்கால் டம்ளர் தண்ணீர் ஒரு மேசை கரண்டி கலவை மாவு கலந்து ஏலம், நெய், குங்குமப்பூ இரண்டு இதழ் சேர்த்து நன்கு பாகமாக குடிக்கும் பக்குவத்தில் காய்ச்சி தினம் கொடுக்கவும்

இந்த இரண்டும் கொடுத்தாலே ஓரளவுக்கு ஒரே மாதத்தில் கொஞ்சம் பூசினார் போல ஆகிவிடலாம் உங்கள் பையன்.

சீஸ் சேர்த்து பிரட் டோஸ்ட், முட்டை மைய்யானஸ் சேர்ந்து பிரட் சாண்ட்விச், பாம்பே டோஸ்ட் இனிப்பு டோஸ்ட். ( இரண்டு பிரட்டுக்கு ஒரு முட்டை முன்றூ மேசை கரண்டி பால் கொஞ்சம் சர்க்கரை, வென்னிலா எ\சன்ஸ் , பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கி பிரட்டை முக்கி பட்டரில் பொரித்து கொடுங்கள்,.

மற்றபடி தோசை, சப்பாத்தி, இட்லிக்கு மட்டன் குருமா வைத்து கொடுங்கள்.

தினம் வாழப்பழம், மற்ற பழ வகைகள், பிரஷ் ஜூஸ்

நீஙக்ல் எப்போதும் நார்மலா செய்யும் உண்வு வகைகளையும் கொடுங்கள்
ஒரு பாட்டலில் டிரை ஃபுரூட்ஸ் போட்டு கன்ணில் படும் படி வைத்து விடுங்கள்

( ஒல்லியாக இருப்பவர்கள் சதை வைக்கனும் என்று விரும்புகிறவர்களும் இதை போல் செய்யலாம்)
ஜலீலா

Jaleelakamal

hai jalila friend, ena unga frienda aakipingala, enaku 2 vayasu kulanthai. yaravathu thukkinal romba weight eillama eruppal, weight poda yenna unavu kudukkal.pls konjam help pannungalen,enaku yarum solla eilla friend

hi friend
dates milk soak pani grind pani kudunga, nalla wait poduva and iron strength kuda. na ye pappaku ippathan kudukaren. unga pappa yena weight iruka, daily one egg boil pani kudunga. try panuga.takecare bye.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

hai friend dates milk soak yapadi pandrathu friend.enaku theriyathu.daily egg sapdurura? na job ku poren friend.night la kudukala?pls konjam help pannunga.enaku theriyathu

hai jalila friend, ena unga frienda aakipingala, enaku 2 vayasu kulanthai. yaravathu thukkinal romba weight eillama eruppal, weight poda yenna unavu kudukkal.pls konjam help pannungalen,enaku yarum solla eilla friend

Jaleela Madam,

இதை 1 வயது குழந்தைக்கு கொடுக்கலாம? காரணம் என் மகளும் எடையும் கம்மியாகத்தான் இருக்கிறது.என் மகள் இப்பொழுது 1 வயது 3 நாட்களாகிறது. எடை மிகவும் குறைவாக உள்ளது 6.8 கிலோ.டாக்டர் அவள் எடை மிகவும் குறைவு 2 மாததிற்க்குள் எப்படியாவது எடை கூட வேண்டும் என்கிறார்.

நீங்கள் இந்த குறிப்பு, 1 வயது பிள்ளைக்கு கொடுக்கலாமா?
தயவு செய்து பதில் விளக்கவும்.

மிக்க நன்றி

Keerthisvary

Keerthi

ஜலிலா மேடம்
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நீங்கள் சொல்வது போல என் மகனுக்கு கொடுத்து பார்க்கின்றேன் இவனுக்கு ராகி பிடிக்கவில்லை சாப்பிடமாட்றான் மற்றபடி எல்லா சாப்பாடும் சாப்டுகிறான் உங்கள் ப்லொக் id மாறிவிட்டதா
ஏன் open ஆகவில்லை?
மீண்டும் தங்களின் பதிலுக்கு நன்றி

-

வாழு இல்லை வாழவிடு

half glass milk yeduthu athula seedless dates potu half hr soak panuga. then mixyla grind panuga and filter panitu innum oru half glass milk add pani kudunga. pappa nalla kudipa. mostly daytime la kuduka parunga.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

thanks friend.then night la enga pappa thoonga matingara.athukum yathavathu tips erukka?night thoonga 2am aaguthu.athan kekaren friend.na job ku porena, morning samaikka mudiyala.

மேலும் சில பதிவுகள்