உடனே வாங்க வாங்க இங்க

யாரை கூபிடுறதுனு ஒண்ணும் புரியல அதனால எல்லாரும் வாங்க வாங்க ..
அடுத்த மாதம் எங்கள் பிறந்தநாள் இது உங்கள்ள கொஞ்ச பேருக்கு தெர்யும்.

முதல் தடவையா கேக் செய்யலாம்னு ட்ரை பணினேன் ... வெண்ணிலா எசென்சு இல்ல ..பரவாயில்லைனு ..என்ன செய்யதேனு சொல்ல கூட முடியல அழுகை அழுகிய வருது ... ஏன்நா என் கேக் தீஞ்சு போச்சு(நடுவுல ,ஓரத்தில ,கொஞ்சம் எடம் மட்டும் ஓகே) ... அது மட்டும் இல்ல கட்டியா பிஸ்கட் மாதிரி இருக்கு ...
நான் microwave la 15 mins ல ஸ்மெல் கொஞ்சம் வித்தியாசமா வந்ததும் எடுத்து பார்த்தேன் ...
என்ன செய்திருப்பேன் ..சொல்லுகளேன்..

எப்ப தான் செய்தேன் ..அதான் tension ல அழுகையா வருது ...

என் மகனின் பிறந்த நாள் ஒவ்வொன்னும் என் கையலான கேக் தான் செய்யனும்னு ஆசை பட்டேன் ... பட்... ஏன் இப்படி ...என் பிரெண்ட்ஸ் சொன்ன மாதிரி கேக் ஆர்டர் பன்னனுமானு கவலையா இருக்கு ..

கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன் ...
நான் உபயோகித்து இட்லிக்கான microwave பாத்திரம் (it has a bottom with a top lid.. in that top lid some pores will be)... அதுல ஊர்ல கேக் செய்து பார்த்திருக்கேன் .....

pls help me.. to do a tasty cake... pls make my desire to fullfill

அம்மு,

கேக் நம்ம கிச்சன்ல இருக்கற பெரிய அவன்ல ட்ரை பண்ணி பாருங்க. அருமையா வரும்:--) நான் மைக்ரோ வேவ்ல சென்சதில்ல:-(. ஆனா குக்கர்ல செய்வாங்க தெரியும். தண்ணி விடமா அப்படியே நடுவுல ஒரு கிண்ணத்துல வெச்சு மூடி போட்டு பண்ணுவாங்க. இட்லி குக்கர்ல வருமான்னு தெரியல. ஆனா நீங்க முன்னமே பண்ணி அது சரியா வந்தட்துன்னு சொல்லி இருக்கீங்க :-(. அதனால நீங்க்க தான் சொல்லனும், என்ன பண்ணிங்கன்னு :-) என்ன அம்மு, இதுக்கு உங்க பதிவே வேணாம்னு சொல்றியா:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

எனக்கு திருமணமாவதற்கு முன்னே ஒரளவு சமைக்க தெரியும்.எதுக்கு சொல்றேனு நினைக்றீங்களா??நானும் பலமுறை கேக் சொதப்பி இருக்கேன்.இப்போ எப்பொழுது செய்தாலும் சரியாகவே வரும்.முதல்முறை செய்யும்போது நடக்கும் தவறுகளுக்காக விட்டுவிடாமல் தொடர்ந்து செய்துபாருங்கள்.நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கேக் வரும்.எனக்கு தெரிந்தவரை உங்களுக்கு சொல்லுகிறேன்.கேக் சரியாக வருவதற்கு பல விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.முதலில் உங்களின் செய்முறை சரியான அளவுகளூடன் இருக்கவேண்டும்.அனுபவம் இல்லாதவருக்கு இது மிக முக்கியம்.பிறகு கேக் அடிப்பதிலும் கவனம் தேவை.அதிகமாகவும் அடிக்க கூடாது.குறைவாகவும் அடிக்க கூடாது.இரண்டுமே கேக்கின் மிருதுதன்மையை பாதிக்கும்.அடுத்தது ஆவனின் வெப்பநிலை இதுவும் மிக முக்கியம்.இது சரியாக இல்லை என்றால் கேக் பொங்காமல் அல்லது அமுங்கிவரும்.மைக்கோவேவ் ஆவன்லில் நான் செய்வதில்லை.குக்கிங் ரேஞ்சில் வரும் கேஸ் அவனில்தான் செய்கிறேன்.நீங்கள் எளிதாக செய்வதற்கு யாரும் சமைக்கலாமில் திருமதிநர்மதா,திருமதிப்லோரன்ஸ்,நான் கொடுத்த குறிப்புகள் இருக்கிறது.வேறுயாரும் இன்னும் இதுபற்றி நன்கு தெரிந்தவர்கள் பதில் கொடுக்கலாம்.ஆனால் முதலில் சரியாக வரவில்லை என சோர்ந்துபோகாமல் மீண்டும் மீண்டும் செய்தால் வந்துவிடும்.

மைக்ரோவேவ் கேக் செய்வதற்கு- அதற்குத் தகுந்த baking trays உபயோகிக்க வேண்டும். அதன்படியும் சரியான அளவுகள்படியும் செய்தால் மைக்ரோவேவ் கேக் மிக நன்றாக வரும். சுமார் 10 நிமிடங்களிலேயே செய்து அசத்தி விடலாம். கீழே என்னுடைய கேக் செய்முறை லிங்க் இருக்கிறது. அதன்படி செய்தால் மிகச் சரியாக வரும்.

http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1014611

hey
நான் ஒரு idea சொல்லட்டுமா?
always simple.always smart

keep it simple. keep it smart

மேலும் சில பதிவுகள்