தோழிகளே, கெஞ்சி கேட்கிறேன் பதில் தாருங்கள்.

வணக்கம் தோழிகளே,
எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கடைசி 3 மாதங்களாக குழந்தைக்கு முயற்சி செகிறோம். முதலில் regular period. ஆனால் இப்பொழுது irregular period.
எனக்கு கடைசியாக period வந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. நாங்கள் குழந்தைக்கு முயற்சி செய்கிறோம்.doctor idam சென்றால் urine test, ultra sound test எடுத்த பிறகு எதுவும் இல்லை எண்டு சொல்லிவிட்டார். எதோ ஒரு பிரசனை சொன்னார் எனக்கு விளங்கவில்லை அது. பிறகு period வருவதர்ற்கு tablet தந்தார். அது 7 நாட்கள் எடுக்க சொன்னார். எடுத்து முடித்து விட்டேன். இப்பொழுது 5 நாட்கள் ஆகிவிட்டது.இன்னும் period வரவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. நான் என்ன செய்யவேண்டும்? தயவு செய்து தோழிகளே எனக்கு அறிவுரை சொல்லவும். கலங்கி உள்ளேன் உங்கள் அனுபவத்தை உம் சொல்லவும். ஒரே யோசனையாக உள்ளது.

தயவுபண்ணி தலைப்ப மாத்துங்க. அப்ப தான் நம்ம தோழிக உதவி பண்ண ஈஸி ஹ இருக்கும். இந்த டாபிக் பத்தி நிறைய நிறைய பேசியாச்சு. கோப படமா கீழ இருக்கற லிங்க் பாருங்க. உங்களுக்கு உபயோகமா இருக்கலாம்.
http://arusuvai.com/tamil/forum/297

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

Period வந்த 2 ம் நாளில் வந்து HORMONE LHS டெஸ்ட் எடுக்க சொன்னவா. period e இன்னும் வரவில்லை, என்ன செய்வது இப்போது நான்? இதற்கு ஏதும் food கட்டுப்பாடு உண்டா? குறை நினைக்காமல் எனக்கு சொல்லுங்கள் தோழிகளே.

ஹலோ சுகந்தி,
நிறையவே பேசியது எனக்கும் தெரியும். நான் எனது பிரச்னைக்கு தான் தோழிகளின் ஆலோசனை கேட்டேன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தான் மன வேதனை புரியும்.
தப்ப சொன்ன சாரி SUGANTHY.

you should ask the dr everything clearly if u cannot understand anything u can ask him to explain again u have a right to do that. meet the dr again how we will know ur problem ? meet a lady dr u will feel free to talk and then tell what problem u have then we will tell suggestions. sorry if anyhting hurts u.

God is good

ஹாய் மீனா கவலை படாதிங்க. இது போல் ஒரு தோழி கேட்டதற்க்கு நான் ஏற்கனவே பதில் கூறி இருக்கேன். உங்கள் மன வேதனை புரிகிறது. உங்கள் நிலமையில் நானும் இருந்து இருக்கேன். கவலை படாதிங்க. இன்னும் 5நாள் வெயிட் பன்னி பாருங்க. அப்படியும் பிரியட் வரலை என்றால் உடனே டாக்டரிடம் செல்லுங்கள். தாமதம் வேண்டாம். எனக்கு இது பிரியட் வராமல் இருக்கும் போது டாக்டர் 10 மாத்திரை கொடுத்தாங்க, ஆனால் மாத்திரை சாப்பிட்ட பிறகு 10நாள்குள் தான் வரும் என்றார்கள். அதனால் நீங்க கொஞ்சம் பொருமையா இருங்க, நல்லதே நடக்கும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நீங்க கவலை படாதீங்க நானும் உங்க நிலைமையில் தான் பா இருக்கிரேன் எனக்கு கல்யாணம் ஆகி இரண்உ ஆண்டுகள் முடிந்துவிட்டது எனக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ் இப்ப நாலு மாதமாக ட்ரீட்மெண்ட் எடுத்து வருகிரேன் பா ஆனாலும் சரியான பாடில்லை லாஸ்ட் 2 மாதங்கள் ஆகிவிட்டது 1 வாரத்திர்க்கு முன் போன போது பீரியட் வருவதர்க்கு ஊசி போட்டு ஒரு லிஸ்ட் ஃபுல்லா மாத்திரையும் எழுதி கொடுத்தாங்க 2 நாட்க்களில் பீரியட்ஸ் வரும் வந்த 3வது நாளில் என்னை வந்து பார் என்று கூரினார்கள் நானும் சரி என்று வந்திவிட்டேண் மாத்திரை போட சொல்லவில்லையே நாம தாண் 2 நாள் கழித்து போவோமே அப்ப கேட்டுகலாம் என்ரிருந்துவிட்டேன் 10 நாள் ஆகிவிட்டது பீரியட்ஸ் வர வில்லை உடனே போனேன் அப்பதான் திட்டு வாங்கினேண் எழுதிக்கொடுத்த மாத்திரையை போடாமல் காத்துட்டு இருந்தா எப்படி வரும் அவங்க என்ன பாத்து சிரிச்சிடாங்க அப்பரம் 10 டேய்ஸ் மாத்திரை கொடுத்து உள்ளார்கள் 10 நாள் கழித்து தான் வரும் என்று சொல்லி இருக்கிராற்கள் நான் சொல்ல வந்தது என்னனா டாக்டர்ஸ் நமக்கு ஏத்தா மாதிரி டோஸ் கம்மியாதான் கொடுப்பாங்களாம் அதனால வரும் போது டாக்ட்டர் கிட்ட போங்க கவலை படாதீங்க பா

அன்புடன்
ஸ்ரீ

meenakuddy-kku

don't worry. you believe your doctore and God. You will wait more than 5 days and consult your doctor. dont feel. confident is life. ok.

i'll pray to god for "U" and another friends.

ok

OM SAKTHI

வணக்கம் மீனா
7 நாள் மாத்திரை முடிந்தவுடன் 15 நாட்கள் வரை காத்திருக்கவும். அதற்கு பின் வரவில்லை என்றால் மருத்துவரை அனுகவும். குழம்ப வேண்டாம். நடப்பதெல்லாம் நன்மைக்கே..

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

வணக்கம் தோழிகளே, உங்களுடைய பதில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்கின்றது தோழிகளே, நன்றி சோனியா, ஸ்ரீமதி கதிர், அனிதா, சராஜ,
இப்போது எனக்கு Period வந்து ஹோர்மோன் test உம் எடுத்துவிட்டேன், ஆனால் Doctor நாட்டுக்கு சென்று விட்டா. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இனி காத்திருக்கா வேண்டும் 1 month. doctor வருவதற்கு. Doctor i மாத்தலமா? ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே,

மேலும் சில பதிவுகள்