ஹாய் தோழிகளே கொழந்தையின் எடை கூட வழி சொல்லுங்கள்

ஹாய் தோழிகளே என் 2வது பெண் சனா பிறந்து இப்பொழுது 74 நாட்கள் ஆகிறது.
ஆனால் அவள் எடை 4 கிலோ மட்டுமே இருக்கின்றாள்.டாக்டரிடம் கேட்டேன் பிறக்கும் போது
இருந்த எடையை விட கூடி இருக்கின்றாளே பரவாயில்லை என்று கூறினார்.அவள் பிறக்கும் போது
எடை 2.700.ஆனால் என் கொழந்தை மிகவும் ஒல்லியாக இருக்கின்றாள்.பாற்பதற்கு பாவமாக இருக்கின்றாள்.
உங்களுக்கு யாருக்காவது இது போன்ற அனுபவம் இருகின்ரத இருந்தால் என்ன செய்தீர்கள் சொல்லுங்கள்
கவலையாக உள்ளது

நீங்க நல்லா ஹெல்தியான சாப்பாடு சாப்பிட்டு, நல்லா பால் குடுஙகபா.. இரண்டரை மாத குழந்தை தானே நல்லா பால் குடுஙக.

தாய்பாலை கொடுகிரீர்களா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தாய்பால்தான் கொடுக்கிறேன் நான் நன்றாகதான் சாப்பிடுகிறேன் நான் நல்ல எடையுடந்தன் உள்ளேன்
ஆனால் அவள் எடை கூட மாட்றா என்ன செய்வது

வீணான கவலையை விடுங்கள் .நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா நான் வீட்டில்தான் இருக்கின்ரேன் வேலைக்கு செல்லவில்லை.எனக்கு இன்னொரு பெண்ணும்
இருக்கின்றாள்.அவளூக்கு 2 வயது அவள் நல்ல எடை இருந்தாள் இப்பொழுதும் நல்ல எடை

நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் .என் நாத்தனார் குழந்தையும் வெயிட் போடாமலே இருப்பாள்.என் நாதனார் ஒன்றரை வருடங்களுக்கு பால் கொடுத்தால்.நான் என் குழந்தைக்கு ஒனேகால்வருடம் கொடுத்தேன்.நீங்கள் ஒரு வருடமாவது கொடுங்கள் அதுதான் நல்லது.நீங்களும் நல்ல சத்தான உணவை சாபிடுங்கள்பா.மீன் கண்டிப்பாக சாப்பிடுங்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கவலை படாதிங்க ,என் மகள் அப்படிதான் இருந்தாள்.ஆனால் அக்டிவாஇருப்பாள். எனவே அக்டிவாஇருகாளா என பாருங்க.

மேலும் சில பதிவுகள்