பவித்ராவை வாழ்த்தலாம் வாங்க

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!

அறுசுவையின் செல்லப் பெண், நம்ம பவித்ரா, 25 குறிப்புகள், அதுவும் படங்களுடன், கொடுத்து, கூட்டாஞ்சோறு பகுதியில் இடம் பிடிச்சிருக்காங்க.

பவித்ராவை வாழ்த்தி, இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க உற்சாகப்படுத்தும்படி, அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

வாங்க, வாங்க!!

அன்பு பவித்ரா,

இந்தக் காலத்து இளம்பெண்கள்கிட்ட சமைக்கத் தெரியுமான்னு கேட்டா, வென்னீர் வைக்கத் தெரியும் என்று ஸ்டைலாக சொல்றவங்கதான் அதிகம். நீங்க சின்னப் பொண்ணாக இருந்தாலும், சூப்பரான சமையல் குறிப்புகள் கொடுத்து, எல்லாரையும் அசத்திட்டு இருக்கீங்க. பாராட்டுக்கள்! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அருமையான குறிப்புகள், அதுவும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சமைக்கிற மாதிரி கொடுக்கறீங்க. அசத்தலாக படங்களும் இருப்பது போனஸ்.

இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து, மென் மேலும் எங்களை அசத்தும்படி கேட்டுக்கறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஏற்கனவே எங்கள் மனதில் இடம்பிடித்த அன்பு பவிக்கு கூட்டாஞ்சோறு பகுதியில் இடம் பிடித்ததற்கும் மேன் மேலும் பல குறிப்புகள் கொடுத்து அசத்தவும் வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

பவித்ரா வாழ்த்துக்கள், உங்களுடையாக குறிப்புகள் அனைத்தும், படங்களுடன், சுலபமாக செய்யக்கூடியதாக இருந்தது, மேலும் பல குறிப்புகள் கொடுத்து கோல்டு ஸ்டார் வாங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அடுத்த ஸ்டார் சீக்கிரமே வாங்கனும் பவி. வாழ்த்துக்கள்
கெட்டுகெதர்-ல உங்கள மிஸ் ப்ண்ணிட்டோமேன்னு பீல் பண்றேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஜே மாமி. தோழி விஜி, சீதாலக்‌ஷ்மி அக்காவுக்கு பிறகு, வெஜ் சமையல் மட்டும் கொடுப்பது நீங்கள் தான் என்று நினைக்கிறேன், வாழ்த்துகக்ள்.

Jaleelakamal

வாழ்த்துக்கள் பவி :)மேலும் மேலும் பல குறிப்புகள் கொடுத்து கோல்டு ஸ்டார் வாங்க வாழ்த்துகிரேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அறுசுவைக்கும், இந்த அண்ணாவிற்கும் செல்லப் பெண் தங்கை பவி மென் மேலும் சாதனைகள் படைத்திட வாழ்த்துகிறேன்.

அன்புடன்
THAVAM

பவி வாழ்த்துக்கள்,,,, வித வித மான குறிப்பு கொடுக்க வாழ்த்துக்கள்

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

உங்க குரிப்புகள் எல்லாமே சூப்பராவும் சிம்பிளாவும் இருக்கு பா . எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இன்னும் நீங்க நிரைய குரிப்புகள் கொடுத்துட்டே இருக்கனும்

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் பவி நலமா?உங்க குறிப்புகள் அனைத்தும் சூப்பரா இருக்கும்.அதில் ஓட்ஸ் பொங்கல் ரொம்ப சூப்பர். வாழ்த்துக்கள் பவி.இன்னும் நிறைய செய்து அசத்துங்க.

ஹசீன்

மேலும் சில பதிவுகள்