கால்கள் பராமரிப்பு

கால்கள் பராமரிப்புBeauty tips

கால்களை பராமரிப்பது எப்படி?

இப்போது கால்களுக்கான பாராமரிப்பையும், பெடிக்யூர் பற்றியும் பார்ப்போம். கால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான். பித்தவெடிப்புன்னு நாம சொன்னா வெளிநாட்டில் ஸ்கின் ட்ரையாகறதாலதான் வருதுன்னு சொல்றாங்க. எதுவாக இருந்தாலும் இது போக்க முடியாத விஷயமில்லை. வீட்டில் செருப்பு அணிய பிடிக்காதவர்கள், அதிக எடை உள்ளவர்கள், ட்ரை ஸ்கின் உள்ளவர்கள், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்டவேலை செய்பவர்கள் என்று எல்லாருக்குமே இது பொது சொத்தாக இருக்கிறது.

முதலில் இந்த வெடிப்புகளை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம். ரெகுலரான பெடிக்யூர் மிக அவசியம். பெடிக்யூர் ஆரம்பிக்கும் முன்பே எப்போதும் கால் நகங்களை ஷேப் செய்து விடுவது நல்லது. நம் ஊரில் பலரும் ஒட்ட வெட்டிவிடுவதுதான் வழி வழியாக செய்வது. ஆனால் காலில் நகங்கள் வளர்த்தால் அழகாக இருக்கும். காலில் நகங்கள் வளர்க்கும்போது எப்போதும் ஸ்கொயர் ஷேப்பையே கடைபிடித்தால் நன்றாக இருக்கும். என்னடா இது மெனிக்யூர், பெடிக்யூர்னு அலுத்துக்கிட்டால் இது அந்த காலத்திலிருந்து எல்லாரும் தினமுமே செஞ்சுட்டு இருந்த விஷயங்கள்னு சொன்னா ஆச்சரியமாதான் இருக்கும்.

பீர்க்கை நாரிலிருந்து, ப்யூமிஸ் ஸ்டோன் வரை பாட்டி காலங்களிலிருந்து ஸ்க்ரப் செய்யவென்றே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அந்த காலத்து பாத்ரூம்களில் கால்களை தேய்க்கவென்றே சின்னதாக சொர சொரப்பான கல் வைத்து கட்டியிருப்பார்கள். இந்த கல்லிற்கு பதிலாக நாம ஸ்க்ரப்பர் உபயோகிக்கிறோம். அவ்வளவே. கால்களுக்கு இப்படி ரெகுலரான ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் (அந்த காலத்தில் தேங்காய் எண்ணெய்) செய்வதன் மூலம் பித்த வெடிப்புகளை நீக்கிவிடலாம்.

முதலில் நெயில் பாலீஷை ரிமூவ் செய்து, நகங்களை வெட்டி, பைல் செய்துக் கொள்ள வேண்டும். கால்கள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால்தான் ஸ்க்ரப்பிங் செய்வது எளிது. கடினமான தோல்களை எளிதில் நீக்கலாம். அந்த காலம் போல இப்போது நம்மால அதிக நேரம் செலவழித்து, துணியெல்லாம் துவைத்துப் பிறகு குளிப்பதற்கு நேரம் இல்லை. அவசியமும் இல்லை. அதனால் கால்கள் நெடுநேரம் தண்ணீரில் ஊறுவதற்கு வாய்ப்பில்லை. இதற்கு மாற்றாகத்தான் பெடிக்யூர் என்ற பெயரில் கால்களை நெடுநேரம் சுடுதண்ணீரில் ஊறவைத்து பிறகு தேய்க்கிறார்கள். அதனால் வீட்டிலேயே பெடிக்யூர் செய்ய நினைப்பவர்கள், அதற்காக தலைகுளிக்கும் நாளை தேர்ந்தெடுத்தால் நல்லது. நாம் குளித்துமுடிக்கும்போது நமது கால்கள் தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும். சளித் தொந்தரவு, சைனஸ் உள்ளவர்கள் ஒரு பக்கெட் சுடு தண்ணீரில் லிக்விட் சோப் ஊற்றி அதில் கால்களை ஊறவைக்கலாம்.

கால்களை தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள Foot Scrubber விற்கிறார்கள். இதனைக் கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக நீக்கலாம். எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த ஸ்க்ரப்பரால் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். அதிக வெடிப்பு உள்ளவர்களுக்கு இதுவே சிறந்தது. மற்றவர்கள் Pumice Stone உபயோகிக்கலாம். Pedi Egg என்று உள்ளதையும் கூட ஸ்க்ரப் செய்ய உபயோகிக்கலாம். ஆனால் ஈரமான கால்களுக்கு சரிவராது.

மிகவும் கடினமாக அங்கங்கே முடிச்சு போல சிலருக்கு ஸ்கின் கடினத்தன்மையுடன் இருக்கும். இவர்கள் நான் மெனிக்யூரில் சொன்ன Corn Blade வாங்கி அதனைக் கொண்டு அந்த தோல்களை சீவிவிடலாம். பிறகு பெடிக்யூர் கிட் அல்லது நெயில் கட்டரிலேயே (கொக்கிபோன்று வளைந்திருக்கும், முனை கொஞ்சம் ஷார்ப்பாக இருக்கும்) உள்ள அட்டாச்மெண்ட் கொண்டு நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை நீக்க வேண்டும். பிறகு கால்களில் சோப் தேய்த்து, கால்தேய்க்க வென்றே பிரஷ்கள் கடைகளில் விற்கும் பிரஷினைக் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இப்போது கால்களை நன்றாக துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீமை கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வது போல் தடவுங்கள். பிறகு கால்கள் உலர்ந்ததும், கைகளுக்கு சொன்ன அதே முறையில் நெயில் பாலீஷ் போடுங்கள். அவ்வளவே பெடிக்யூர்.

pedicure

கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட் உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் தேய்க்கும் அத்தனை மருந்தும் படுக்கையில் பட்டு பாழாவதோடு, கால்கள் சரியாகவும் நாளாகும். கை, கால்களின் பராமரிப்பினை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் போதும். எப்போதும் அழகான தோற்றத்தில் இருக்க முகம் மட்டுமல்ல, கை கால்களும் நல்ல பராமரிப்பில் இருப்பது அவசியம்.

உடைகளும் கூட கை, கால்களின் ஷேப்பினை பொருத்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். கை குண்டாக இருப்பவர்கள் ஸ்லீவ் லெஸ்ஸை தவிர்ப்பதும், கால் மிக குண்டாக அல்லது மிக ஒல்லியா இருப்பவர்கள் மினி ஸ்கர்ட்டை தவிர்ப்பதும் நல்லது. கால்களில் நிற வேறுபாடு அல்லது அதிகமான கரும்புள்ளி இருப்பவர்கள் ஸ்கர்ட் அணியும்போது ஸ்டாக்கிங் போட்டுக் கொண்டால் கால்களின் குறைபாடு தெரியாது. ஸ்டாக்கிங் பிடிக்காவிட்டால் ஸ்ப்ரே பவுண்டேஷனும் கூட உபயோகிக்கலாம். கைகளுக்கும் கூட நிற வேறுபாடு இருந்தால் ஸ்ப்ரே பவுண்டேஷன் அல்லது சாதாரண பவுண்டேஷன் உபயோகிக்கலாம். அதிக நேரம் தரையில் உட்கார நேர்ந்தால் கால் முட்டி தரையில் படாமல் துணியினை விரித்து அதில் உட்காரலாம். இதனால் நிறம் மாறாமல் இருக்கும். கைகளை மேஜையில் வைத்துக் கொண்டு நெடுநேரம் கம்ப்யூட்டர் முன்பு இருப்பது கூட கை முட்டியின் நிறத்தை பாதிக்கும். இதனைப் போக்க ஆலிவ் பட்டர் அல்லது கோக்கோ பட்டரை தினமும் தடவலாம். நல்ல பலன் இருக்கும்.

pedicure

கால்கள் குட்டையாக இருப்பவர்கள் லாங்க் ஸ்கர்ட் போடலாம் அல்லது புடவை கட்டும்போது நல்ல இறக்கமாக கட்டலாம். இது கால்களின் உயரத்தை அதிகமாக்கி காட்டும். கால்களுக்கு செருப்பினை தேர்ந்தெடுக்கும்போதும் மிகுந்த கவனம் தேவை. அதிகமான உயரமுள்ள செருப்புகள் அணிய விருப்பமுள்ளவர்கள், அணியும் நேரத்தையாவது குறைந்த நேரமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பென்சில் ஹீல்ஸ் உபயோகிக்கும் முன்பு நமது கால்கள் நம் எடையை நன்கு பாலன்ஸ் செய்கிறதா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல தரமான ஷூக்களையே வாங்குங்கள். செருப்புகள் அணிந்து வாக்கிங் போவதைக் காட்டிலும், ஷூ அணிவதால் பாடி பாலன்ஸ் நன்கு இருக்கும். காற்றோட்டமுள்ள ஷூக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும். ஜிம்முக்கு செல்லும் பழக்கமுள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் அங்கே குளிக்கும்போது பாத்ரூம் ஸ்லிப்பர் இல்லாமல் குளிக்காதீர்கள். அதிகமாக தொற்று நோய் பரவும் இடங்கள் இவை. இப்படி கை,கால்களை கவனித்துக் கொண்டால் அழகாக மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அடுத்த உறுப்பினைப் பற்றி வரும் பதிவில் பார்க்கலாம்.

Comments

அன்பு தேவா,

நலமாக இருக்கீங்களா? உங்க பதிவுகளையே காணோமே, என்ன ஆச்சு?

எனக்கு உள்ளங்கால்களில் சில இடங்களில் தோல் திக் ஆகியிருக்கு. கால் ஆணின்னு சொல்வாங்களே, அதுவாக இருக்குமோன்னு நினைத்து, மருந்துக்கடைகளில் கிடைக்கும் கார்ன் காப் வாங்கிப் போட்டேன், பக்கத்தில் இருக்கும் நல்ல தோலும் சேர்ந்து சில சமயங்களில்,பிய்ந்து கொண்டு வருகிறது. வீட்டில் சாஃப்ட் செப்பல் போட்டு நடக்கிறேன். ஆனால் ஈரத்தில் கால் வழுக்குகிற பயம் இருக்கு. மறக்காமல் செருப்பு போட்டுகிட்டு நடந்தால், வலி இல்லாம இருக்கு. ஆனா, தோல் இயல்பாக ஆகலை. நீங்க சொன்ன மாதிரி கார்ன் பிளேட் வாங்கி யூஸ் செய்து பார்க்கிறேன்.

உங்க குறிப்புகளில் நீங்க சொன்ன பொடி கலந்து வைத்து, அதைத்தான் எல்லோருமே உபயோகிக்கிறோம். ரொம்ப நல்லா இருக்கு. இதை உபயோகிப்பதால், பேத்திக்கு, தவழும்போது, ஏற்பட்ட முழங்கால் கருமை நன்றாக மாறி விட்டது. பேரனுக்கும் இதே பொடிதான். அவன் பிறந்த போது, கொஞ்சம் வெயிட் கம்மியாக இருந்ததால், சருமம் ஒரே நிறத்தில் இல்லாத மாதிரி இருந்தது. இப்ப இந்தப் பொடி யூஸ் செய்யறதால், சருமம் நன்றாக இருக்கு. பிறந்த போது, இருந்த பூனை முடி போன்ற மெல்லிய முடி எல்லாம் நன்றாக உதிர்ந்து விட்டது.

என் கணவரும் எப்பவுமே இந்த மாதிரி குளியல் பொடி உபயோகிக்க விரும்புவாங்க. வெறும் பாசிப்பருப்பு மட்டும் திரிச்சு வைக்கறதுண்டு. இப்ப, நீங்க சொன்ன முறையில், (கஸ்தூரி மஞ்சள் மட்டும் சேர்க்காமல்) அவங்களுக்கும் கலந்து வைத்து விட்டேன். ரொம்ப நன்றாக இருக்கு என்று சொன்னாங்க. எனக்கே பார்க்கும்போது நல்ல வித்தியாசம் தெரிகிறது.

நீங்க சொன்னதில் புனுகுப்பட்டை என்று கேட்டோம், பட்டை என்று கிடைக்காது, மெழுகு மாதிரி இருக்கும் என்று சொன்னாங்க. ஒரு சின்ன டப்பாவில் தந்தாங்க. ரோஜா இதழ், வசம்பு எல்லாமெ பௌடராகவே கிடைச்ச்து.

நீங்க குறிப்புகள் கொடுத்திருக்கும் பழைய இழைகள் எல்லாம் அடிக்கடி தேடிப் படிக்கிறேன்.

மிகவும் நன்றி, தேவா

அன்புடன்

சீதாலஷ்மி

தேவா... நலமா இருக்கீங்களா??? எங்கே உங்களை பல நாட்களாக காணோம்? முதுகு வலி சரியாயிடுச்சா??? நீங்க சொன்ன மாதிரி தான் நான் இப்பலாம் நெயில் பாலிஷ் போட்டுக்கறேன் :) ரொம்ப நாளைக்கு அழகா இருக்கு. மிக்க நன்றி. கால்கள் பராமரிப்பும் சூப்பர். நிச்சயம் பயன்படும். மிக்க நன்றி... பல பயனுள்ள குறிப்புகளை தொகுத்து கொடுக்கறீங்க. புரியும்படி அழகா சொல்றீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா? கால்கள் பராமரிப்பு பத்தி அழகா சொல்லிருக்கீங்க. ரொம்ப உபயோகமா இருக்கு:))

அன்புடன்
பவித்ரா

தேவா,
எப்படியிருக்கீங்க? உங்க குறிப்புகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.என் கணவர் நாள் முழுவதும் சாக்ஸ் அணிந்திருப்பதால் பாதங்களிலுள்ள தோலெல்லாம் உரிந்தார்போலிருக்கும்.எனவே மாதமிருமுறை அவருக்கு எனக்கு தெரிந்தளவில் பெடிக்க்யூர் செய்வேன்.ஆனால் சரியான முறையில் எப்படி செய்வது என்று இப்போதுதான் தெரிந்தது.இதனையே இனிமேல்பின்பற்றுகிறேன்.

தேவா,எனக்கு இதைப்பற்றி எங்கே கேட்கலாமென்று தெரியவில்லை.இங்கே கேட்பதற்கு அனைவரும் மன்னிக்கவும்.தேவா,நான் இங்கே ஏதாவது கோர்ஸ் செய்யலாமென்று உள்ளேன்.(I.T யில்)ஆனால் எதற்கு future என்று தெரியவில்லை.நீங்களும் இங்கே வசிப்பதால் எனக்கு உதவமுடியும் என்று நம்புகிறேன்.படிப்பு ச்ம்பந்தமாக உதவ எனக்கு இங்கே யாருமில்லை.என் mail ld க்கு உங்கள் முகவரி கொடுத்து உதவ முடியுமாதயவு செய்து.நான் இம்மாதத்திற்குள் முடிவு செய்யவேண்டிய அவசியத்தில் உள்ளேன்.Jan/Feb ல் ஆரம்பமாகும் செம்.மில் சேரவேண்டும்.இதைப்ப்ற்றி விவரமாக உங்களிடம் ஆலோசிக்கவேண்டும்.உங்கள் முகவரியை எதிர்பார்ப்பேன்.அனுindra அட் யாகூ டாட் காம்
அன்புடன் அனு

ungal samaya megavum super

தோழிகளே! உதவுஙகள் ..

எனக்கு காலகளில் அதிகமாக வெடிப்பு இருக்கிறது ... நான் என்ன செய்வது என்று தெரியவில்லை...

காயத்ரி

Be Honest

தேவா
என் மகளுக்கு வியர்குரு பிரட்ச்சனை அதிகமாக உலது அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... என்ன செய்வது என்று சொல்லுங்ள்

கால்கள் பற்றிய குறிப்புக்கள் ரொம்ப உபயோகமாக உள்ளது. நன்றி ....
அடுத்த அழகு குறிப்புக்காக காத்திருக்கிறோம்.....

SubhaLogachandran

அன்புள்ள தேவா மேடம் அவர்களுக்கு,

உங்கள் அழகு குறிப்புகள் அனைத்தும் பார்த்தேன் நன்றி, ஒரு வேண்டுகோள் பின்னூடம் அனுப்பிய சீதாலெட்சுமி மேடம் குறிப்பிட்ட அந்த குளியல் பொடியை உங்கள் பகுதியில் தேடி பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை தயவு செய்து அந்த லின்க் எனக்கு தெரிவிக்கவும்,

என் மகள் தவழும்போது(8 மாதம்), ஏற்பட்ட முழங்கால் கருமை
மற்றும் பூனை முடி நீங்க உதவ வேண்டுகிறேன்.(சீதாலெட்சுமி மேடம் முடிந்தால் தாங்களிடம் இருந்தாலும் அனுப்பி வைக்கவும்)

தங்கள் அன்புள்ள

ஃபர்ஹாத்துனிஷா பேகம்

அன்புள்ள சீதாலெட்சுமி மேடம் அவர்களுக்கு,

தேவா மேடத்தின் அந்த குளியல் பொடியை பற்றி உங்கள் பின்னுடத்தில் பார்த்தேன், என் மகளிற்கு (8 மாதம் ஆகிறது) அவள் முழங்கால் கருமை மற்றும் பூனை முடி நீங்க உதவ, தேவா மேடத்தின் குறிப்புகளை எனக்கு தந்து உதவவும், தேவா மேடத்தின் லின்க் அனைத்தயும் பார்த்தேன் கிடைக்கவில்லை, லின்க் பற்றிய விவரத்தை அறிய தாங்கள் உதவ வேண்டுகிறேன்.

என் மின் அஞ்சல் suwvee@yahoo.com

தங்கள் அன்புள்ள

ஃபர்ஹாத்துனிஷா பேகம்

ஃபர்ஹாத்துனிஷா http://www.arusuvai.com/tamil/forum/no/3677 நீங்க தேடிய குளியல் பொடி இந்த லிங்கில் இருக்கு பாருங்க.

நீங்கள் எனக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி, நான் நீங்கள் அனுப்பிய லின்கை கிளிக் செய்தேன் பக்கம் கிடைக்கவில்லை, வேறு ஏதும் வழியிருந்தால் தயவு செய்து தெரியப்படுத்துவும்.....

http://www.arusuvai.com/tamil/forum/no/3677 (404(not found)page;...)

பக்கம் கிடைக்கவில்லை

அந்த லிங்க் பழைய தளத்தில் வேலை செய்யும். புதிய தளத்தில் கீழ் உள்ளவாறு போட வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/3677

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

hi deva madam

எனக்கு முகப்பரு இருக்கிறது.தலையில் பொடுகு இல்லை ஆனா நெற்றிலே ரொம்ப இருக்குது முகத்துலே எண்ணே வேரே வழியுது இந்த proplem தீறே நா என்ன செய்யனும்.நா lux sandal soap useபண்றே. அது useபன்னலாமா.please reply

hi deva madam

எனக்கு முகப்பரு இருக்கிறது.தலையில் பொடுகு இல்லை ஆனா நெற்றிலே ரொம்ப இருக்குது முகத்துலே எண்ணே வேரே வழியுது இந்த proplem தீறே நா என்ன செய்யனும்.நா lux sandal soap useபண்றே. அது useபன்னலாமா.please reply

hi deva madam

எனக்கு முகப்பரு இருக்கிறது.தலையில் பொடுகு இல்லை ஆனா நெற்றிலே ரொம்ப இருக்குது முகத்துலே எண்ணே வேரே வழியுது இந்த proplem தீறே நா என்ன செய்யனும்.நா lux sandal soap useபண்றே. அது useபன்னலாமா.please reply

மிக நன்று மிக நன்று பிரபா தேவி .P

Prabhas Designs

கால்களை அழகு படுத்த பல குறிப்புகள் கொடுத்துள்ளீர்கள் ஆனால் என் கால்கள் சற்று தட்டையாகவும் விரல்களில் நகங்கள் சொத்தையாகவும் உள்ளது நான் என் கால்களை எவ்வித முறையில் பராமரிப்பது என தெரிவிக்கவும்.

முதலில் இத்தனை தாமதமாக பதில் கொடுப்பதற்கு மன்னியுங்கள். உங்களுக்கு என் அழகுக் குறிப்புகள் பயன்பட்டது படித்து மிகவும் மகிழ்ச்சி.ஒவ்வொரு முறை புதிதாக ஒரு நவலை கையில் எடுக்கும்போது உங்களை நினைத்துக் கொள்வேன்.உங்கள் வீட்டில் அனைவரும் நலமா? பேரன் பேத்தியோடு பொழுது இனிதாக கழிந்திருக்கும். இப்போது எங்கே இருக்கிறீர்கள்? சென்னையா ஸ்டேட்ஸா? 3 மாதங்களுக்கு முன்புதான் முதன்முதலாக சாண்டில்யன் நாவல் ஒன்று படித்தேன்.சிறு வயதில் பத்திரிக்கையில் தொடராக வரும்போது எனக்கு படிச்சாலும் புரியாது. நாவலின் பெயர் யவனராணி. அப்படியே அசந்து போய்விட்டேன். பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்,இன்டியானா ஜோன்ஸ்லாம் அப்பவே அவர் நாவலா எழுதிட்டார்னு நினைக்கிறேன்.உடனே அவர் எழுதிய அத்தனை நாவலையும் இந்தியாவிலிருந்து வாங்கிட்டு வந்து இப்ப படிச்சுட்டு இருக்கேன்.

உங்களுக்கு பதில் அடிக்கறது சந்தோஷமா இருக்கு. தொடர்ந்து பேசலாம். நன்றி.

உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி.முதுகு வலி இப்போது இல்லை. என்றைக்கு ஜிம்மில் சேர்ந்து வெயிட்டை குறைக்க எக்சர்சைஸ் செய்ய ஆரம்பிச்சேனோ அன்றிலிருந்து முதுகு வலி போயிடுச்சு.உங்கள் மெஹந்தி செக்‌ஷனுக்கு நான் பெரிய ஃபேன். சமையல், ஆலோசனைன்னு எல்லாத்துலயும் கலக்கறீங்க. வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஆயிலி சருமம் இருக்கறதுதான் முகப்பரு வர காரணம். இதற்கு முல்தானி மட்டி கலந்த பேக், க்ளியர்சில் பேஸ் வாஷ், க்ளியர்சில் பிம்பிள் கண்ட்ரோல் க்ரீம் உபயோகியுங்கள். சரியாகும்.

குழந்தைகளுக்கு வரும் வியர்க்குருவை விரட்ட பவுடர் மட்டும் போடாமல், தினமும் அவர்கள் குளித்தப் பிறகு, உடம்பு முழுக்க நன்றாக துடைத்து விட்டு பன்னீரை உடம்பு முழுக்க தடவுங்கள். உலர விடுங்கள். பிறகு பவுடர் வேண்டுமானால் போடுங்கள். என் மகனுக்கு அதிகமாக வெயில் காலத்தில் வியர்க்கும். சில சமயம் வியர்க்குருவும் வந்துவிடும். அவனுக்கு நான் செய்வது இதுதான். அடுத்த நாளே வியர்க்குரு போய் விடும். சாப்பிட இளநீர் கொடுப்பதும் உடலை குளிர்ச்சியாக்கும். நுங்கு சாறு தடவுவதும் நல்ல பலனைக் கொடுக்கும். பன்னீர் Dabur போன்று தரமானதாக இருக்க வேண்டும். அதிக வியர்க்குருவாக இருந்தால் சுத்தமான சந்தனத்தை இழைத்து,பன்னீரில் குழைத்து தடவுங்கள்.பவுடர் வேண்டாம். விரைவில் குணமாகிவிடும்.

கால் தட்டையாக இருப்பதை ஒன்றும் செய்ய முடியாது. நக சொத்தையை நீக்க தோல் மருத்துவரையோ, பொது மருத்துவரையோ பாருங்கள். முதலில் அவர்கள் கொடுக்கும் ஆயிண்ட்மெண்ட்கள் கொண்டு சொத்தையை நீக்குங்கள். பிறகு வராமல் தடுக்கும் முறைகளை பின்பற்றுங்கள். அதிக வியர்வை, காலில் இடுக்கில் படியும் அழுக்கு போன்றவை சொத்தையை ஏற்படுத்தும். இதற்கு ஷூ போடும்போது விரல் இடுக்கில் பவுடர் அடிப்பது, மாதம் ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்வது நல்லது.

நல்ல தரமான வெடிப்பு நீக்கும் க்ரீமை இரவு கால்களில் வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி ஒரு சாக்ஸ் மாட்டிக் கொள்ளுங்கள். அடிக்கடி காலை ஸ்க்ரப்பிங் செய்வது, மாய்ச்சுரைசிங் லோஷன் தடவுவது, பெடிக்யூர் போன்றவை வெடிப்பை நீக்கும்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

pls akka enaku nerya ila narai irukurathu athu poga vali sollungal
enathu email id- lachu.nila@yahoo.com

எனது தலைமுடி பற்றிய பதிவில் இதற்கான பதிலினினை கொடுத்திருக்கிறேன். பாருங்க. தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பது நல்லது. இது தவிர கரிசலாங்கண்ணி, கருவேப்பிலையை அரைத்து வடைகளாக தட்டி நிழலில் காய வைத்து அதனை எண்ணெயில் ஊறவையுங்கள். இரண்டு நாளில் எண்ணெயின் நிறம் மாறிவிடும். எண்ணெயை காய்ச்ச வேண்டாம். வெயிலில் ஒரு நாள் முழுக்க கூட வைக்கலாம். இதனை தடவி வந்தால் இளநரை அதிகமாக தெரியாமல் பழுப்பாக தெரியும். கரிசலாங்கண்ணியை அரைத்து தலையில் ஊறவைத்தும் குளிக்கலாம். ஆனால் ஒரு முறை நரைத்த முடியை மறுபடியும் கருப்பாக மாற்றுவது இயலாது. மேலே சொன்ன விஷயங்கள் நரையை பளிச்சென்று காட்டாமல் மறைக்கும். இது தவிர ஹென்னாவும் தலைக்கு போடலாம். தலைக்கு ஹென்னா போடுவது எப்படி என்று மன்றத்தில் ஏற்கனவே அழகுக்குறிப்புகள் பகுதியில் கொடுத்திருக்கிறேன்.

thalaiku shampoo podalma entha shampoo podalam appadi illaina sikaikaai podalama atha eppadi seiyanum sollunga kandipa enaku mail pannunga pls madam

உங்க குறிப்பு எல்லாமே ரொம்ப நல்ல இருக்கு. என் husband முதுகுல மரு நெறையா வருது எப்படி சரி செய்வது .

want to get cooking tips and beauty tips