ப்ரிட்ஜ் வாங்க யோசனை சொல்லுங்க தோழிஸ்...

தோழிஸ், புது ப்ரிட்ஜ் வாங்க போறோம். எந்த ப்ரண்ட் நல்லா இருக்கும்? எந்த மாதிரி features இருக்கற ப்ரிட்ஜ் வாங்கறது நல்லது? இப்ப சிங்கள் டோர் தான் உபயோகிக்கறோம். எங்க அம்மா டபுள் டோர் வேண்டாம் ன்னு சொல்லீட்ட்டாங்க. நீங்க எல்லாரும் உங்க அனுபவம், கருத்தை சொல்லுங்க. எனக்கு வாங்கறக்கு கொஞ்சம் உபயோகமா இருக்கும்.....

ஹாய் சுகந்தி எப்படி இருக்கீங்க?
ஃபிரிட்ஜ் வாங்க போறீங்க ரொம்ப நல்ல விஷயம்.
அதிலும் இந்த சீசனில் வாங்க நினைப்பது புத்திசாலிதனம் தான்.
என்னுடைய அபிப்ராயத்தை கேட்டீங்கன்னா.... டபுள் டோர் உள்ள whirlpool,LG இவையெல்லாம் ரொம்ப நல்லாயிருக்கும்.
whirlpool கொஞ்சம் காஸ்ட்லிதான்.ஆனால் நம்ம நாட்டிற்க்கு இந்த ரெண்டும் மெயிண்டன் பண்றதுக்கும் சர்வீஸ் பண்றதுக்கும் ஏற்றதாக உள்ளது.
ஃப்ரீசரில் இப்போதிருக்கௌம் இந்தமாடல்கள் ஐஸ் ட்ரேயை தவிர மற்ற இடங்களை உறைய விடாமல் நீட்டாக இருக்க செய்கின்றது. தேவையான அளவு இடவசதியும் உள்ளது.முன்பெல்லாம் தண்ணீர் கீழே ஒரு ட்ரேயில் ஓடியிருக்கும் அதை நாம் எடுத்து அடிக்கடி ஊற்றி வைக்க வேண்டிவரும். இப்போது இந்த மாடல்களில் அதெல்லாம் கிடையாது.உங்க அம்மா ஏன் டபுள் டோர் வேண்டாமுன்னு சொல்றாங்கன்னு தெரியாது.பெரியவங்க ஏதாவது அனுபவத்துல சொல்வாங்க அவங்கள்ட்டையும் ஆலோசனை கேட்டுக்கங்க.
அம்மா வீட்டு பக்கமும்,மாமியார் வீட்டு பக்கமும் இந்த இரண்டு மாடலும் தான் ஓடுகின்றது.எனவே தான் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.ஒன்ஸ் பர்ச்சேஸ்.... அதுக்கு டபுள் டோர் பெஸ்ட் என்பது என் கருத்து.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம் (நாணயம் விகடன்னு நினைக்கிறேன்) ப்ரிட்ஜ்-ல் டபுள் டோர் அதிகமாக கரண்ட் செலவாகும் என்றும் சிங்கிள் டோர் 2 ப்ரிட்ஜ் சேர்ந்து பயன்படுத்தினாலும் அதைவிட குறைவான கரண்ட் தான் செலவாகும் என்றும் படித்தேன். ஆனால் பயன்பாட்டில் எப்படின்னு தெரியல ..

டபுள் டோர் பாத்தோம், அம்மா வேண்டாம் ன்னு சொல்றக்கு காரணம் ப்ரிட்ஜ் கெப்பாசிட்டி 250 லிட்டர் இருக்கு, அதுல 33 % ஃப்ரீசரில் போய்டுது. மீதி கம்மியான space தான் உபயோக படுத்தறக்கு வருது. நாம அந்த அளவு ஃப்ரீசர் உபயோக படுத்த மாட்டோம் இல்ல.... அதுனால தான் அம்மா வேண்டாம் ன்னு சொல்றாங்க. அதுக்கு சிங்கள் டோர் எடுத்துகிட்டா, ஃப்ரீசர் க்கு கம்மியான space தான வரும். மீதி நிறையா space நாம உபயோகிக்கலாம் இல்ல...

நாங்க LG , samsung , whirlpool பாத்தோம்.... இதுல எது பெஸ்ட்ன்னு ஒரே குழப்பமா இருக்கு.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அக்கா நீங்க இங்கதான் இருக்கீங்களா ,உங்கள அரட்டைல தேடினாங்க .பொண்ணு இங்கல்ல இருக்கு !!!சுகி நான் ப்ரிட்ஜ் LG சிங்கள் டோர் வச்சிருக்கேன் ,வாஷிங்மெசின் whirlpool fully automatic வச்சிருக்கேன் .இதுல எந்த பிரச்னையும் வந்ததிளிலை இந்த 5 வருடத்தில் .
நீயும் நம்பி வாங்கலாம்னு சொல்றேன் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அம்மா சொல்வதும் சரிதான் சுகந்தி.நீங்கள் சிங்கிள் டோரே பாருங்கள்.
எங்கள் வீடுகளில் எல்லாம் விஷேச நேரங்களில் நான் வெஜ் அயிட்டங்கள் நிறைய ஃப்ரீசரில் ஸ்டோர் பண்ணி வச்சிக்க வேண்டிய நிலை வரும்.எனவே தான் அதை மனதில் கொண்டு சொல்லிவிட்டேன்.
whirlpool கம்ப்ரசர் ரொம்ப நல்லா இருக்கும்னு கடையிலேயே சொல்லி இருப்பாங்களே.....இதற்க்கு அடுத்தபடியா.... LG யை சொல்லுவாங்க.... எனவே இதில் எது வேண்டுமானாலும் நம்பி வாங்கலாம் என்பது என் கருத்து.நான் இரண்டு வருடங்கள் முன்பு ஊரில் (அக்காவிற்க்காகவும்,மாமியார் வீட்டிற்க்காகவும்) ஃப்ரிட்ஜ் வாங்கும் போது மூன்று கடைகள் ஏறி தெரிந்த கொண்டது.இரண்டுக்கும் விலையில் LG கொஞ்சம் குறைவு என்பதால் அதைதான் வாங்கினார்கள்.அக்கா தன் மகளுக்கு whirlpool தான் வாங்கினார்.இரண்டுமே கம்ப்ரசர்,ஆப்சன்ஸ் இவற்றில் ஒரே மாதிரிதான் இருந்தது.எனவே உங்க பட்ஜெட்க்கு ஏற்றார் போல் முடிவு செய்து கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் சுகந்தி
எங்கள் வீட்டில் கோத்ரெஜ் பென்டாகூல் உள்ளது. 8 வருஷமா உபயோகிக்கிறோம். automatic defrost இருக்கு.
நாம் கதவை சரியா மூடாம இருந்தா அதிலிருந்து indication music வரும். அது நல்லா useful la இருக்கு. நல்லா உழைக்குது

எங்க வீட்ல கோத்ரஜ் பென்டாகூல் தான் இருக்கு, 8 வருடம் யூஸ் பண்றோம் நல்லா இருக்கு, இது வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. நீங்கள் அதையே வாங்கலம்.

மேலும் சில பதிவுகள்