மைக்ரோவேவ் சந்தேகம்

அன்புத்தோழிகளே.. எனக்கு மைக்ரோவேவ் பற்றி பலத்த சந்தேகம் உள்ளதுப்பா.. நான் Microwave Oven வாங்கலாம் என்று உள்ளேன். என்னுடைய சந்தேகம் இது தான்.

Oven Toaster - Oven இரண்டும் ஒன்றா? இரண்டும் ஒன்று என்றால் என்னெவெல்லாம் செய்யலாம்? என்னிடம் ஒரு அவன் டோஸ்டர் உள்ளது. ஆனால் இது நார்மல் டைப். வெறும் டோஸ்ட் மட்டுமே செய்யமுடியும். டெம்பரேச்சர் அட்ஜஸ்மெண்ட் கிடையாது. top or bottom or both top and bottom இதில் எதாவது ஒன்று மட்டுமே செலக்ட் பண்ண முடியும். டைமிங் அட்ஜஸ்ட் பண்ண முடியும். அவ்வளவே

Microwave Oven வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன? தயவுசெய்து கூறுங்கள்பா. மைக்ரோவேவ் வெறும் கன்வெக்ஷன் மோட் மட்டுமே உள்ளது வாங்கலாமா அல்லது கன்வெக்ஷன் மற்றும் க்ரில் மோட் உள்ளது வாங்கலாமா? எந்த ப்ராண்ட் வாங்கலாம்? Panasonic or sharp or LG எது சிறந்தது?

கேக், பிஸ்ஸா மற்றும் பிஸ்கட் வகைகள் செய்ய எந்த மாதிரியான microwave oven வாங்க வேண்டும். நான் அறுசுவையில் மைக்ரோவேவ் பற்றிய சந்தேகங்கள் உள்ள குறிப்புகளை தேடி படித்து பார்த்தேன். ஆனாலும் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. இமா, இளவரசி, வனிதா எல்லாரும் அவன் பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் எனக்கு தான் புரியவில்லைப்பா. சற்று உதவுங்களேன் ப்ளீஸ்..

ரம்யா

இப்ப தான் உங்களோட முழு பதிவும் பாக்குறேன். நான் இங்க கடைல போய் பாத்துட்டு வந்தேன்.
கன்வெக்ஷன் மோட் மட்டும் இருக்கறது S$100 - S$150 (குறைந்தபட்சம் 4000ருபாய்)
கன்வெக்ஷன் மற்றும் க்ரில் மோட் இருக்கறது S$350 - S$400 (குறைந்தபட்சம் 12000 ருபாய்)

நான் என் கணவரிடம் கன்வெக்ஷன் மற்றும் கரில் மோட் இருப்பது போல் வேண்டும் என்று சொன்னேன். நீங்கள் கூறுவதைப்பார்த்தால் க்ரில் மோட் எனக்கு உபயோகப்படாதோ என்று தோன்றுகிறது.

நான் கொஞ்சம் டியுப்லைட் பா. எனக்கு மைக்ரோவேவ் பத்தி எந்த ஐடியாவும் இல்லை. அதுனால தான் இவ்ளோ துாரம் கேக்குறேன். தயவு செய்து கொஞ்சம் பதில் சொல்லுங்கப்பா.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கிரில் mode நான் வெஜ் செய்ய மட்டும் தான் உபயோகமாகும் .நான் இதுவரை pizza செய்தது இல்லைப்பா . அதனால அது எப்படி செய்றதுன்றதுல என்னால உங்களுக்கு உதவ முடியாது .
http://www.ammas.com/ar/home.cfm?r=va&bid=0&topicid=2&tid=159126 உங்களுக்க தேடினப்ப இந்த sitela மைக்ரோ ஓவன்ல நல்லா வரலன்னு படித்தேன்
கேக் பிஸ்கட் மைக்ரோ ஓவன்ல செய்ய முடியும் ஆனா otg அவன்ல செய்றமாரி வரலன்னு நம்ம தோழிகள் சொன்னாங்க

ராதா
போன மாதம் வாங்குவதற்கு முன்பு நானும் உங்கள மாறி தான் இருந்தேன் . இப்பொழுது உங்களுக்கு பதில் சொல்லும் நிலையில் இருக்கிறேன் . அது போல் அடுத்த மாதம் நீங்களும் என்னைப்போல் ஆகிவிடுவீர்கள்.

ராதா பீட்ஸா செய்யனும்னா அதுக்குன்னு mode இருக்கு அதுல செய்யலாம் நான் அப்படித்தான் செய்வேன்

ரம்யா

மிகவும் நன்றிப்பா. எனக்காக தேடி பதில் சொன்னதற்கு. கண்டிப்பாக வாங்கும் வரை தான் சந்தேகம் எல்லாம். வாங்கிய பிறகு நாம் ஒவ்வொன்றாக ட்ரை செய்து தேறிவிடுவோம். ஒன்றை வாங்குவதற்கு முன்னால் நம் அறுசுவையில் அனுபவம் வாய்ந்த தோழிகள் இருப்பார்கள் அவர்களிடம் ஆலோசனை கேட்டு பிறகு வாங்கலாம் என்று தான் இங்கு கேட்டேன். என்னால் இப்போது ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. மிக்க நன்றி ரம்யா..விரைவில் வாங்கிவிட்டு உங்களிடம் தெரிவிக்கிறேன்.

பாத்திமாம்மா

காலை வணக்கம். கண்டிப்பா மைக்ரோவேவ் வாங்குவதற்கு முன்னர் pizza mode இருக்கா என்று பார்த்துவிட்டு வாங்குகிறேன். மிக்க நன்றிம்மா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நீங்க எந்த பிராண்ட் வாங்கிநீங்கபா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

IFb micro oven
Morphy Richards OTG oven

இது சென்னைல கிடைக்குமாபா
சென்னைல வாங்கி இருந்தா எங்க வாங்கிநீங்கன்னு ,எவ்வளவுன்னு சொன்ன நானும் வாங்க வசதியா இருக்கும்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மைக்ரோ ஓவன் எல்லா கடைகள்லயும் கிடைகுதுபா . ஆனா otg அவன் ஒரு சில கடைகள்ள தான் கிடைக்கும் . currimbhoys parrys cornerla கிடைகுதுபா .
மைக்ரோ ஓவன் 17 litres 3300
otg அவன் 28 litres 5500 அவர்கள் அதிகமாக தான் விலை சொல்வார்கள். கொஞ்சம் பேசி குறைத்து வாங்குங்கள் .

இது கம்பெனி ஐடெம்பா எப்படி குறைபாங்க.??எந்த கடைன்னு குறிப்பிட்டு சொன்னா நாங்க அலையாம வாங்கிபோமேபா ஏன்னா நான் தாம்பரத்துல இருக்கேன் அதான்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்