நிம்மதி இல்லை.

சகோதரிகளுக்கு வணக்கம்,
எனக்கு வழி சொல்லுங்கள் சகோதரிகளே.
எனக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகின்றது. கடந்த 2 மாதங்களாக கணவருடன் வசிக்கிறேன்.(தனியாக). அவர் என்னிடம் மிகவும் பாசமாக இருக்கிறார். என் தாய் வீட்டில் இருப்பதுபோல் தான் இருக்கிறேன். நான் விரும்பிய இடம் போக, வர அனுமதிக்கிறார். ஆனால், எனக்கு நிம்மதி இல்லை. காரணம் என் கணவரே தான்.
திருமணத்திற்கு முன்பு தனியாக வீடு எடுத்து தங்கி இருந்திருக்கிறார். அவர் கல்லூரி தோழியாம், அவளும் அவருடன் ஒரே வீட்டில் ஒரு மாதம் இருந்தாளாம். இதனை எப்படி தோழி என்னால் தாங்க முடியும். நான் ஆடி போய்விட்டேன். அவர் என் தலையில் சத்தியம் செய்கிறார். உன்னை தவிர எந்த பெண்ணுடனும் நான் உறவு கொண்டதில்லை என்கிறார்.
மற்றொன்று, அவர் பெட்டியில் ஒரு காண்டம் கண்டேன். (அவருக்கு தெரியாமல்) எங்கள் உறவில் அவர் காண்டம் பயன்படுத்துவதில்லை. அவர் அரிய அதனை எடுக்க அனுமதிக்கவில்லை. அன்றே அதனை அப்புற படுத்திவிட்டார். அவருக்கு அதனை பார்த்தது தெரியாது.
இதனால் அவர் வீடு வர தாமதமானால், எங்கே இருக்கிறாரோ? என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்? என தோன்றுகிறது. அவர் தாமதமாகும் பட்சத்தில் எனக்கு தெரியப்படுத்தி விடுகிறார். அவருக்கு தெரியாமல், அவரது மெயிலினை திறந்துபார்க்கிறேன். அவர் வீடு வந்ததும் மொபைலில் கால்ஸ், குறுஞ்செய்தி என சோதனை இடுகிறேன்.
அவர் அலுவலகம் புறப்பட்டால், எங்கே பேருந்துக்கு செல்கிறாரோ? இல்லையோ? என தவிக்கிறேன். எவ்வளவோ எனக்கு நானே சமாதானம் சொல்கிறேன், உன் கண்களால் காணும் வரை எதனையும் நம்பாதே? என என்னால் முடிய வில்லை சகோதரி. எங்கே மன அழுத்தம் தாங்காமல் இதயம் வெடித்து விடுமோ என இருக்கு.
அவரே சொல்கிறார். நீ என்னை சந்தேகிக்காதே, உனக்கு உண்மையாகவே இருக்கிறேன். உன்னிடம் சொல்லும் விஷயங்களை சொல்கிறேன். உன்னிடம் சொல்ல முடியாத விஷயங்களும் எனக்கு உண்டு என்கிறார்.
எனக்கு ஆலோசனை சொல்லுங்கள் சகோதரிகளே. என் பெற்றோர் இடமும், உடன் பிறந்தோர் இடமும் நேரடியாக இதற்கு தீர்வு காண முடியல?....
விடுமுறை நாட்களில் என்னுடன் தான் இருக்கிறார். ஆனால் சில போன் கால் வந்தால் முகம் மாறி, வெளியே சென்று விடுவார். யார் கால் செய்தார் என்ன விஷயம் எதுவும் பகிரமாட்டார். இப்போது அடுத்தவாரம் ஊருக்கு போய் வா என்கிறார். எங்கே அந்த தோழி திரும்பவும் வருவாளோ என எனக்கு கஷ்டமா இருக்கு.
ப்ளீஸ். பதிவிடுங்க. உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

ஆஷா

இப்போதைய காலத்தில் எதையும் கண்டித்து நடத்த முடியாது, முதலில் உங்கள் கணவர் வேறு பெண்களுடன் உறவு வைத்க்கொல்கிறாரா என்று கண்டறியவும், திருமனதிருக்கு முன்பு உறவு வைத்திருந்தால் அதை கண்டுக்காமல் விட்டுவிடுங்கள், திருமனதிருக்கு பின்பும் உறவு வைத்திக்கொண்டு இருந்தால் அதற்க்கு 3 காரணங்கள் இருக்கலாம், 1. அந்த பெண் மீது அதிக காதல் 2. திருமனதிருக்கு முன்பு காதல் வயப்பட்டு ஆரம்பித்த உறவை தவிர்க்கமுடியாமல் வேறுவழி இன்றி இருக்கலாம் 3. (தவறாக நினைக்கவேண்டாம்) உங்கள் உறவில் திருப்தி இல்லாமல் அவர் உணரலாம். முதலில் இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடியுங்கள், நீங்கள் பார்த்த காண்டம் 1 மட்டும் தனியாக இருந்ததா இல்லை பாக்கெட்டாக இருந்ததா, பாக்கெட் இருந்தால் ஒருவேளை அவர் உங்களுக்க வாங்கிருக்கலாம். நீங்கள் மனதைபோட்டு குழபுவதைவிட காரணம் கண்டறியுங்கள் கண்டிப்பாக அதற்கு தீர்வு உங்களிடமே இருக்கலாம்.
அதிக அன்பை வெளிபடுத்துங்கள் உங்கள் வாழ்கை சந்தோஷமாக அமையும். தோழிகளே நான் ஆண் என்பதால் ஆஷாவிற்கு அதிகம் விளக்கம் சொல்ல இயலவில்லை நீங்கள் தெளிவாக மேலும் சிலவழிகளை கூறுங்கள்

Be happy

தோழி asha திருமண பந்தத்தின் மிக பெரிய எதிரி santhaykam. . திருமணத்திற்கு பின் உங்களவர் உங்களிடம் பிரியமாக இருக்கிறார் இல்லையா .மகிழ்வாய் இருங்கள் .மனம் விட்டு இருவரும் பேசுங்கள் .வாழ்வு இனிக்கும் . மறைமுகமாக அவரை சோதித்து அது தெரிந்தால் பிரச்சனை வளரும் .பழையவற்றை மறந்து புதிதாய் வாழ்வை தொடருங்கள். கணவரின் ப்ரியம் , கவனம் உங்கள் மேல் எப்பவும் இருக்கும்படி அனுசரித்து உங்களது அன்பால் அவரை உங்கள் vasapadthuunkal .உங்கள் வாழ்கை வசப்படும் .என் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும். இப்படிக்கு சௌமியன்

மேலும் சில பதிவுகள்