வெல்ல போவது யாரு?

இந்தியாவின் மதங்களில் ஒன்றாக மாறி விட்ட கிரிக்கெட் (மட்டை பந்து) உலக கோப்பை போட்டிகள் இன்னும் சில நாட்களில் துவங்க இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை பற்றிய கொஞ்சம் விரிவா பேசுவோமா?

கிரிக்கெட் உலக கோப்பை 1975 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்டு இது வரை 9 முறை நடந்து உள்ளது. இதில் 1975, 1979,1983 &1999 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்திலும், 1987 & 1996 - தெற்கு ஆசியாவிலும், 1992 - ஆஸ்திரேலியா/நியுஸி யிலும், 2003 - ஆப்பிரிக்காவிலும், 2007 - மேற்கு இந்திய தீவுகளிலும் நடந்து உள்ளது. இதை தொடந்து 10வது உலக கோப்பை தொடரை இம்முறை மீண்டும் தெற்கு ஆசியா அணிகளுக்கு போட்டி நடத்த வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இம்முறை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் நாடுகளில் 14 அணிகள் பங்கு பெற மொத்தம் 49 போட்டிகள் பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 2 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 10 அணிகள் தானாகவே உலக கோப்பை போட்டிக்கு தகுதி உடையதாகும், மற்ற நான்கு அணிகள் அதற்கான தகுதி போட்டிகளில் விளையாடி வந்தவை. அவை - கென்யா, கனடா, அயர்லாந்து & நெதர்லாந்து. இந்த 14 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு தலா 6 போட்டிகளில் மோதும். அதில் அந்தந்த குழுவில் முதல் 4 இடங்களை பெறும் அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். பின் அரையிறுதி, இறுதி போட்டிகள். நம் இந்திய அணி குழு ஆ வில் உள்ளது. அதனுடன் இங்கிலாந்து, பங்காளதேஷ், தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், அயர்லாந்து & நெதர்லாந்து அணிகளும் உள்ளது. குழு அ வில் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாவே, கென்யா & கனடா அணிகள் இடம் பெற்று உள்ளனர்.

இது வரை நடைபெற்ற போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் இரு முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை தலா ஒரு முறையும், ஆஸ்திரேலியா நான்கு முறையும் கோப்பையை வென்று உள்ளனர். இதில் கடந்த மூன்று முறையாக ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது போக இரு முறை இரண்டாம் இடத்தையும் அந்த அணி பிடித்து உள்ளது. ஆன மொத்தம் நடந்த 9 தொடர்களில் அந்த அணி ஆறு முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று மிக வலிமையாக காட்சி அளிக்கிறது. அது போக இங்கிலாந்து அணி மூன்று முறை தகுதி பெற்றும் கோப்பை வெல்ல முடியவில்லை. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தலா ஒரு முறை இறுதி போட்டி வரை வந்து தோல்வியுற்று உள்ளனர்.

இது வரை நடந்த போட்டிகளில் அதிக ரன்களை சச்சின் டெண்டுல்கரும், அதிக விக்கெட்களை கிளேன் மெக்கிராத் எடுத்து உள்ளார்கள். அதிக முறை கோப்பை வென்ற கேப்டன்கள் லாயிட் & பாண்டிங் (இரு முறை)அதிகபட்ச ரன்களை இந்தியாவும், குறைந்தபட்ச ரன்களை கனடாவும் எடுத்து உள்ளனர். கீப்பரில் கில்கிறிஸ்டும், காட்ச் ல் பாண்டிங்கும் முன்னிலை வகிக்கிறார்கள். உலக கோப்பை தொடர்களில் இது வரை பாகிஸ்தான் இந்தியாவை வென்றது இல்லை. இது போன்ற புள்ளி விபரங்கள் பல இருந்தாலும் வரும் போட்டிகளில் திறமையை நிருபிக்க போற அணிக்கு தான் வெற்றி என்பதால் அணிகளின் பலம்/பலவீனங்களை பார்க்கலாம்.

பங்களாதேஷ், கென்யா, கனடா, நெதர்லாந்து, ஜிம்பாவே, அயர்லாந்து போன்ற அணிகளின் வெற்றி வாய்ப்பு இத்தொடரில் ரொம்பவே சிரமம் தான். பங்களாதேஷ் போன முறை சிறப்பாக விளையாடி இருந்தாலும் 6 போட்டிகள் அடங்கிய முதல் சுற்று முடிவில் தேறி வருவது கடினம் தான். இந்த ஆறு அணிகளில் பங்களாதேஷ், அயர்லாந்து ஏதாவது அதிசியம் நிகழ்த்த முயலக் கூடிய அணிகள். கென்யா வின் தரமும் கொஞ்சம் கவனிக்க வைக்கிறது. மொத்தத்தில் இந்த அணிகளின் பலம் இந்த அணிகள் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் யாருக்கும் கிடையாது. மற்றவை எல்லாம் பலவீனமே.

மேற்கு இந்திய தீவுகள்/பாகிஸ்தான் - இந்த இரு அணிகளும் மிக வலுவாக இருந்து கால போக்கில் பல காரணங்களால் மிகவும் பலவீனம் அடைந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த இரு அணிகள் மீது இம்முறை யாருக்கும் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. போலார்ட், சந்தர்பால், சர்வான் போன்றவர்கள் சிறிது விளையாடினால் இந்த அணி கால் இறுதி வரை வரலாம். அதே போல் பாகிஸ்தான் அணியும். அப்திரி, ரசாக், அக்மல் சகோதரர்கள் போன்றவர்கள் விளையாடினால் கால் இறுதி நிச்சயம். மற்றபடி கால் இறுதி தாண்டி வருவது இரு அணிகளுக்குமே சிரமம் தான். அதிசயம் நிகழ்ந்தால் உண்டு.

இங்கிலாந்து/நியுஸிலாந்து - இந்த இரு அணிகளும் உலக கோப்பை தொடர்களில் மட்டும் எப்பொழுதுமே சிறப்பாக விளையாடி வரும் அணிகள். தற்பொழுது இந்த இரு அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவதால் இம்முறை அந்த பெருமையை தக்கவைத்து கொள்வார்களா என்பது கேள்வி குறியே. இந்த இரு அணியிலும் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல் விளையாடுவதும் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம். பீட்டர்சன், கோலிங்வுட், ஆண்டர்சன் இங்கிலாந்தின் முக்கிய வீரர்கள், இவர்கள் கை கொடுத்தால் கால் இறுதியை தாண்டலாம். ரோஸ் டைலர், ரைடர் மற்றும் விட்டோரி நியுஸிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இவர்கள் துணையுடன் கால் இறுதியை தாண்ட முயலும் நியுஸிலாந்து.

தென் ஆப்பிரிக்கா - தற்போதைய நிலையில் மிகவும் வலிமை வாய்ந்த அணி என்றால் அது தென் ஆப்பிரிக்கா தான். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளங்குவது இவர்களின் பலம். உலக கோப்பை போட்டியில் இது வரை பெரிதாக சாதிக்கவில்லை என்பதும், முக்கியமான போட்டிகளில் சொதப்புவதும் இவர்களின் பலவீனம். காலிஸ், அம்லா, ஸ்டைன், மோர்கல் போன்றவர்களின் நிலையான பார்ம் இவர்களுக்கு ஒரு பெரிய வரபிரசாதம். அது போக கை கொடுக்க ஸ்மித், டி வில்லர்ஸ், டுமினி போன்றவர்களும் உள்ளனர். கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியா - டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து வந்தாலும் ஒரு நாள் போட்டிகளில் முதல் இடத்தை இன்னும் தக்க வைத்து இருக்கும் ஆஸ்திரேலியாவிக்கு இந்த தொடர் மிகுந்த சவால் அளிக்க கூடியதாக தான் இருக்க போகிறது. முண்ணனி பேட்ஸ்மேன் களின் தொடர் சொதப்பல்களும், அனுபவம் வாயந்த பந்து வீச்சாளர்கள் இல்லாமையும் இவர்களின் பலவீனமாக உள்ளது. உலக கோப்பை போட்டிகளில் தொடர் வெற்றியும்/கோப்பையும், வாட்சன், ஜான்சன் இருவரின் பார்ம் மும், பீல்டிங், நெவர் செ டை என்ற போராட்ட குணமும் இவர்களின் பலமாகும்.

இலங்கை - அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதும், நல்ல பார்மில் அனைவரும் தொடர்ந்து இருப்பதும், பீல்டிங், சொந்த மண் என பலமாக இருக்கும் இந்த அணிக்கு பந்து வீச்சில் சில ஒட்டைகள் உள்ளனர். கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் இதுவும் ஒன்று. முரளிதரனின் கடைசி தொடர் என்பதால் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - சொந்த மண்/ரசிகர்கள், தொடர் வெற்றி, பலமான பேட்டிங் வரிசை, தோனியின் அதிர்ஷ்டம் போன்றவை நம் அணியின் பலம். எந்த நேரத்தில் சொதுப்புவார்கள் என்பதும், திட்டமிடல், பந்து வீச்சு போன்றவை பலவீனங்கள். சச்சின், கோலி, யூசுப், சேவாக் போன்றவர்கள் கவனிக்கபட வேண்டியவர்கள். இவர்களின் பேட்டிங்கை நம்பியே களம் இறங்குகிறது நம் அணி.

மேற்சொன்னவைகளை வைத்து பார்த்தால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் அரையிறுதி வரை வரலாம். இறுதி போட்டிக்கு இந்தியா, இலங்கை முன்னேறலாம். அப்படி நடைபெற்றால் இந்தியாவிற்கு கோப்பை வெல்லும் வாய்ப்புகள் அதிகம். பார்ப்போம் வெல்ல போவது யாரு என்று?

கால்பந்து உலக கோப்பை, ஒலிம்பிக்ஸ் பிறகு உலக நாடுகளில் அதிக அளவில் ஒளிபரப்பு செய்யப்படும் கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை காணுங்கள்/ரசியுங்கள். உங்களுக்கு பிடித்த அணியை சப்போர்ட் செய்யுங்கள். But Dont Miss the action.

என்னுடைய கணிப்பு

Group A Top Four

Srilanka
Australia
New Zealand
Pakistan

Group B Top Four

South Africa
India
England
West Indies

Quarter Final

Srilanka Vs West Indies - Srilanka
Australia Vs England - Australia
New Zealand Vs India - India
Pakistan Vs South Africa - South Africa

Semi Final

Srilanka Vs Australia - Srilanka
India Vs South Africa - India

Final

Srilanka Vs India - India

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

கலக்கிட்டீங்க போங்க. உங்க கணிப்பு தான் இதில் ஹைலைட்டே. நல்ல வர்ணனை. பேசாம உலக கோப்பைக்கு வர்ணனைக்கு போகும் முழு தகுதியும் படைத்த ஆள் நீங்க தான்:)

எனக்கு உங்க அளவுக்கு கணிக்க முடியாவிட்டாலும், ஏனோ மனதில் கோப்பை இந்தியாவுக்கு தான் என்று ஒரு எண்ணம். பார்ப்போம், வெல்லப்போவது யாருன்னு???

அன்புடன்
பவித்ரா

சிவா'

'கிரிக்கெட்டும் நல்ல விமர்சனம் எழுதி இருக்கிங்க.. வெல்ல போவது இந்தியாவே தான்.. உங்கள் கணிப்பு நன்றாக உள்ளது.. இப்போ தான் உலக கோப்பை பற்றி பேசிக் கொண்டிருந்தோம் வந்து பார்த்தால் உங்கள் இழை..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப விளக்கமா எல்லாருக்கும் புரியறமாதிரி சொல்லி இருக்கீங்க. இன்று தொடங்க உள்ள உலக கோப்பை நமக்கே நமக்கு தான்...
நீங்க சொன்னமாதிரி நம் இந்தியா எப்ப நல்லா விளையாடுவாங்க, எப்ப சொதப்புவாங்கன்னு நம்மனால சொல்லவே முடியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமா இருக்கு. நம்ம எல்லாரோட எதிர்பார்ப்பையும் நிறைவேத்தும் அணியாக இந்தியா வளம் வரட்டும்..

//Srilanka Vs West Indies - ஸ்ரீலங்கா/// இது ஒன்னு தான் கொஞ்சம் இடிக்குது. எனக்கு தெருஞ்சு, இந்த ரெண்டு டீம்மும் சரி பாதி வாய்ப்பு இருக்கு ன்னு நினைக்கறேன். சவுத் ஆப்ரிக்கா - இந்தியாக்கு மிக பெரிய சவால இருக்கும் என்பது என்னுடைய தனி கருத்து. இனிய தொடக்கத்துடன், இந்தியா இறுதி வரை வந்து கோப்பை வெல்லட்டும்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இந்தியா தான் கோப்பையை வாங்கணும் என்று ஆசை.ஆனா பைனல்ஸில் இந்தியா ஆஸ்திரேலியா கூட மோதும் வாய்ப்புதான் அதிகம் என்று எனக்கு தோணுது.

சூப்பரா பட்டியல் போட்டுருகிங்க ,இந்திய வெல்லனும்கிறது தான் என்னோட ஆசை ,வாய்ப்புகள் அதிகம்னு எல்லோரும் சொல்றாங்க ,நீங்க சொல்றபடி நடந்தா உங்களுக்கு பெரிய ட்ரீட் .

ஹாய் சிவா அண்ணா, கிரிக்கெட் பற்றி முழுமையா தெரியாவர்களுக்கும்,கிரிக்கெட் மீது ஆர்வம் இல்லாதவர்களுக்கு இந்த வமர்சம் படித்த பிறகு ஆர்வதையும் ஆவலையும் ஏற்படுத்தும் என்று நினைக்கிரேன்.சூப்பர்......

இதுல இருந்து நீங்க ஒரு கிரிக்கெட் ரசிகர்னு நல்லா தெரியுது;))))

நானும் சொல்லுரேன்.இந்தியாக்கு தான் வெற்றி நிச்சயம்.;)))))

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் சிவா அருமையா விளக்[கமா]கியுள்ளிர்கள்.நல்ல ரசிகர்.நம் இந்திய வெற்றியை விரும்பி எதிர்பார்ப்போம்.

எல்லாருக்குமே இந்தியா தான் வெற்றி பெற வேண்டும் என்று விருப்பம் போல். நல்லவேளையாக இந்த தடவை கோப்பை வெற்றி பெறும் அளவுக்கு வலுவான அணியாக தான் இந்தியா உள்ளது. பந்து வீச்சு கவலை அளித்தாலும் அதை நம் மட்டையாளர்கள் துணைக் கொண்டு சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

@ பவித்ரா, ரம்யா, சுகந்தி, ரிம், கல்பனா, தேவி, பெரோஷா - கருத்துக்களுக்கு நன்றிகள் :) இந்தியா வெற்றி பெறும் என்று நம்புவோமாக :)

@ பவித்ரா

//பேசாம உலக கோப்பைக்கு வர்ணனைக்கு போகும் முழு தகுதியும் படைத்த ஆள் நீங்க தான்:)//

பேசாம வர்ணனை செய்ய முடியுமா என்ன ;) அதுவும் போக பெரிய அண்ணன் பாபு இருக்கும் போது நான் எல்லாம் கிரிக்கெட் பற்றியே பேசக் கூடாது. :))

@சுகந்தி

////Srilanka Vs West Indies - ஸ்ரீலங்கா/// இது ஒன்னு தான் கொஞ்சம் இடிக்குது. எனக்கு தெருஞ்சு, இந்த ரெண்டு டீம்மும் சரி பாதி வாய்ப்பு இருக்கு ன்னு நினைக்கறேன். //

கன்னாபின்னா னு உங்க கருத்தை மறுக்கிறேன். இலங்கையும் மேற்கு இந்திய தீவுகள் அணியும் சரியான பலம் கொண்ட அணி என்ற சொல்வதற்கு. மேற்கு இந்திய தீவுகள் அணி ரொம்பவே அகல பாதாளத்தில் கிடக்கிறது. இந்த முறை வெற்றி பெற வாய்ப்பு உள்ள நான்கு அணியாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா என்று கணிக்கப்பட்டு உள்ளது. (சூதாட்டம் உட்பட) கருப்பு குதிரையாக பாகிஸ்தான். ஆனால் வாய்ப்பு ரொம்பவே குறைவு தான் வைங்க. சரி பார்ப்போம். ஆட்டங்கள் எப்படி போகிறது என்று

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

@ கல்பனா

//நீங்க சொல்றபடி நடந்தா உங்களுக்கு பெரிய ட்ரீட் .//

ஆஹா... இது சூப்பர். உங்கள் ட்ரீட்டை பெறுவதற்காகவே இந்தியா வெல்லட்டும் :))

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

மேலும் சில பதிவுகள்